இந்திய ரூபாய் நாணயங்கள்
இந்திய ரூபாய் நாணயங்கள் (Coins of the Indian rupee) 1950 முதல் அச்சிடப்பட்டுவருகின்றன. அதன் பிறகு ஆண்டுதோறும் புதிய நாணயங்கள் உற்பத்தி செய்யப்பட்டுவருகின்றன. அவை இந்திய நாணய முறையின் மதிப்பு வாய்ந்த அம்சமாக உள்ளன. செல்லாக் காசாக்கப்பட்ட நாணயங்களைத் தவிர 50 பைசா (அதாவது 50 பைசா அல்லது ₹0.50), ₹1, ₹2, ₹5, ₹10. ஆகிய அனைத்து நாணயங்களும் தற்போது பழக்கத்தில் உள்ளன. இவை அனைத்தும் இந்தியாவின் கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், நொய்டா ஆகிய இடங்களில் அமைந்துள்ள நான்கு காசாலைகளில் தயாரிக்கப்படுகின்றன.
வரலாறு
[தொகு]இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் பிரித்தானிய அரசின் நாணய அமைப்பும் நாணயங்களும் இந்தியா குடியரசான 1950 ஆம் ஆண்டுவரை தக்கவைத்துக் கொள்ளப்பட்டன. இந்திய குடியரசு முதலில் ரூபாய் நாணயங்களை 1950 இல் வெளியிட்டது. பிற துணை அலகு நாணயங்களான 1/2 ரூபாய், 1/4 ரூபாய், 2 அணா, 1 அணா, 1/2 அணா & 1 தம்பிடி நாணயங்களும் தயாரிக்கப்பட்டன. ஒரு ரூபாயானது 16 அணாக்கள் அல்லது 64 தம்பிடிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு அணா, 4 தம்பிடிகளுக்கு இணையாக இருந்தது.
1957 இல், இந்தியா தசம முறையிலான நாணய முறைக்கு மாறியதென்றாலும் கொஞ்ச காலத்துக்கு இருவகையான நாணயங்களும் புழக்கத்தில் இருந்தன. பழைய மற்றும் புதிய பைசா நாணயங்களுக்கு இடையில் உள்ள வேறுபாட்டை அறிய வசதியாக, 1957 முதல் 1964 வரை உருவாக்கப்பட்ட நாணயங்கள் "நயா பைசா" ("new" paisa) என்ற பெயரைக் கொண்டிருந்தன. புதியதாக புழக்கத்தில் விடப்பட்ட நாணயங்களாக 1, 2, 3, 5, 10, 20, 25, 50 (நயா) பைசா மற்றும் ஒரு ரூபாய் ஆகியன இருந்தன. இதில் ஒரு ரூபாய் நாணயம் மட்டும் தசமமுறைக்கு மாறியதற்கு முன் இருந்த மதிப்பிலேயே இருந்த நாணயமாகும். அதேபோல தசமமுறைக்கு மாறுவதற்கு முன் வழக்கில் இருந்த அரை ரூபாய், கால் ருபாய் நாணயங்களும் புழக்கத்தில் நீடித்தன.
1964 இல் "நயா" என்ற சொல் கைவிடப்பட்டது. இந்த ஆண்டில் ஒரு புதிய வகுப்பாக 3 பைசா அறிமுகப்படுத்தப்பட்டது, 1968 ஆம் ஆண்டு 20 பைசா நாணயம் அச்சிடப்பட்டது. ஆனால் இந்த இரு நாணயங்களும் அவ்வளவாக பிரபலமடையவில்லை. 1, 2. 3 பைசா நாணயங்கள் 1970களில் படிப்படியாக புழக்கத்திலிருந்துவெளியேறின.1982 ஆம் ஆண்டு இரண்டு ரூபாய் நோட்டுக்கு பதிலாக இரண்டு ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டன. என்றாலும் இரண்டு ரூபாய் நாணயமானது 1990 வரை மீண்டும் அச்சிடப்படவில்லை. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் இரண்டுரூபாய் நாணயங்கள் அச்சிடப்பட்டன.
10, 25 மற்றும் 50 பைசா மதிப்பிலான துருவேறா எஃகு நாணயங்கள் 1988 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன, 1992 இல் புதிய ரூபாய் நாணயம் தயாரிக்கப்பட்டது. இந்த நாணயங்கள் பழைய ரூபாய் நாணயங்களைவிட சிறியதாகவும், இலகுவானதாகவும் துருவேறா எஃகினால் செய்யப்பட்டிருந்தது. 1992 இல் 5 ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2005 இல் 10 ரூபாய் நாணயம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. சில்லறை தட்டுப்பாடு மற்றும் 2, 5, 10 ரூபாய் பணத்தாள்களை அச்சிட ஆகும் மிகுதியான செலவின் காரணமாக இந்த உயர் மதிப்பு நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2011 ஆம் ஆண்டு சூன் 30 ஆம் நாள் 25 பைசா மற்றும் அதைவிட மதிப்பு குறைந்த அனைத்து நாணயங்களும் உத்தியோகபூர்வமாக செல்லாதவை ஆக்கப்பட்டன. சிறப்பு நிகழ்வுகள் அல்லது நபர்களின் நினைவக சிறப்பு நாளைக் குறிக்கும் விதமாக பிற சிறப்பு நாணயங்களானது பல ஆண்டுகளாக அச்சிடப்பட்டன, அவை நினைவு நாணையங்களாக குறிப்பிடப்படுகின்றன. நினைவு நாணயங்கள் நாணய சேகரிப்பாளர்களின் சேகரிப்புக்கும், புழக்கத்திற்கும் பயன்படுத்தப்படுவதாக இருந்தன. அவை பல்வேறு நாணய அலகுகளில் வெளியிடப்பட்டன. சில நினைவு நாணயங்கள் பின்வருமாறு மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, அம்பேத்கர், ராஜீவ் காந்தி, ஞானேஷ்வர், 1982–ஆசிய விளையாட்டுப் போட்டிகள், வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திர போஸ், அரவிந்தர், சித்தரஞ்சன் தாஸ், சத்ரபதி சிவாஜி மற்றும் 2010-பொதுநலவாய விளையாட்டுக்கள், சின்னம், பகத்சிங், இரவீந்திரநாத் தாகூர் போன்ற நினைவு நாணயங்கள் அச்சிடப்பட்டன.
நாணயத் தொடர்: 1947-1950 (தசமமுறைக்கு-முன்)
[தொகு]இந்திய ஒன்றியம் 1947–1950
[தொகு]1947 ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திரம் பெற்றபோது இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் என பிரித்தானிய இந்தியா பிரிந்து புதிய பிரித்தானிய டொமினியங்களாக உருவாயின. புதியதாக உருவான இந்திய டொமினியன் (அல்லது ஒன்றியம்) பிரித்தானிய அரசின் நாணய அமைப்பு மற்றும் நாணயங்களை தக்கவைத்துக் கொண்டது. இந்திய ரூபாயானது அடிப்படை அலகாக இருந்தது அது அணாக்களாகவும் (1 ரூபாய்= 16 அணா), பைசாக்களாகவும் (1 ரூபாய் = 64 பைசா) பிரிக்கப்பட்டிருந்தது.[1] இந்திய நாணயங்களில், அரை-பைசா (128 அரை பைசாக்கள் = 1 ரூபாய்) மற்றும் தம்பிடி (192 தம்பிடி = 1 ரூபாய்) ஆகியவை 1947 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக செல்லாமல் ஆக்கப்பட்டன. என்றாலும் இந்த இருவகை நாணயங்களும் சிலகாலம் புழங்கியே வந்தது. 1966 வரை ரூபாயின் மதிப்பு 1s.6d (1 ஷில்லிங்கும் 6 பென்னிகளும்) அல்லது 18 பிரிட்டனின் பழைய பென்னிகள்; அரை-பைசாவானது 0.141 பழைய பென்னிகள் மற்றும் ஒரு தம்பிடி 0.09 பழைய பென்னி) என்று இருந்தது.[2]
1947 ஆகத்து 15 முதல் 1950 சனவரி வரை, இருந்த இந்திய நாணய அமைப்பு பின்வருமாறு: (தடித்த - பிரிவுகள் நாணயங்கள்)[1]
ருபாய் மற்றும் அதன் பின்னங்ங்கள் | அணா | பைசா | தம்பிடி (1947க்குப் பின் மதிப்பிழக்கப்பட்டது) |
---|---|---|---|
ருபாய் | 16 அணா | 64 பைசா | 192 தம்பிடி |
அரை ருபாய் | 8 அணா | 32 பைசா | 96 தம்பிடி |
கால் ருபாய் | 4 அணா | 16 பைசா | 48 தம்பிடி |
1/8 ருபாய் | 2 அணா | 8 பைசா | 24 தம்பிடி |
1/16 ருபாய் | 1 அணா | 4 பைசா | 12 தம்பிடி |
1/32 ருபாய் | அரை அணா | 2 பைசா | 6 தம்பிடி |
1/64 ருபாய் | 1/4 அணா | 1 பைசா | 3 தம்பிடி |
இது இந்திய குடியரசு உருவாகும் வரையான மாற்றங்கள் நடந்துவந்த காலகட்டத்தில் இருந்த நாணய முறைகளைக் காட்டுகிறது.
1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா குடியரசாக ஆகும்வரை பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் பின்வருமாறு:
இந்தியக் குடியரசு 1950-1957
[தொகு]1950 சனவரி 26 அன்று, இந்தியா ஒரு குடியரசாக ஆனது. 1950 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று புதிய தொடர் வரிசை நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நாணயத்தில் பிரித்தானிய அரசரின் உருவப்படத்துக்கு பதிலாக அசோகத் தூணின் சிங்க உருவம் இடம்பெற்றது. ஒரு ருபாய் நாணயத்தின் பின்புறம் இடம்பெற்ற புலிக்கு பதிலாக தானியக் இடம்பெற்றது. இந்த மாற்றமானது முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதைக் குறிப்பதாக அமைந்தது. முந்தைய நாணய அமைப்பு மற்றும் நாணயத்தின் பழைய அலகுகள் மாறாமல், புதிய நாணயங்கள் அச்சிடப்பட்டன.
தசமமுறையாக்கம்
[தொகு]1955 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இயற்றப்பட்ட இந்திய நாணயச் சட்டமானது நாட்டின் நாணய முறையை தசம முறையை பின்பற்றி மாற்ற திருத்தம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் 1957 ஏப்ரல் 1, 1957 முதல் நடைமுறைக்கு வந்தது. அதன்பிறகு அணா, தம்பிடி நாணய அலகுகுகள் இல்லாமல் போயின. ருபாயின் பெயரும், மதிப்பும் மாற்றப்படவில்லை. ஆனால் ருபாயிக்கு இணையான அலகுகளான 16 அணா அல்லது 64 பைசா என்பதற்கு பதிலாக 100 நயா பைசா என்ற அலகு உருவாக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு சூன் 30 ஆம் தேதி முதல் 25 பைசாவுக்கு குறைவான மதிப்புள்ள நாணயங்கள் அதிகாரப்பூர்வமாக செல்லாதவையாக்கப்பட்டன.[3]
தசம முறைக்கு-முந்தைய நாணயங்கள் (1950-1957; மாற்றத்துக்கான முடிவு 1955) | தசம நாணயத்துக்கு மாற்றம் (1957–தற்போதுவரை) | தசம நாணயங்கள் (அச்சிட்ட ஆண்டு ) |
---|---|---|
இல்லை |
10 ருபாய் | 2006–தற்பொதுவரை |
இல்லை |
5 ருபாய் | 1992–தற்பொதுவரை |
இல்லை |
2 ருபாய் | 1982–தற்பொதுவரை |
ருபாய் |
ருபாய் ( 100 நயா பைசாக்களாக பிரிக்கப்பட்டது தற்போது பைசா 1957-1964; 100 பைசாக்களாக பிரிக்கப்பட்டது 1964–தற்போதுவரை. | 1962–தற்பொதுவரை |
அரை ருபாய் |
50 பைசா | 1960–தற்பொதுவரை |
கால் ருபாய் |
25 பைசா | 1957-2002. 2011 இல் செல்லாதாதாக்கப்பட்டது. |
இல்லை |
20 பைசா | 1968-1994. 2011 இல் செல்லாதாதாக்கப்பட்டது |
2 அணா | 10 பைசா | 1957-1998. 2011 இல் செல்லாதாதாக்கப்பட்டது |
அணா |
5 பைசா | 1957-1994. 2011 இல் செல்லாதாதாக்கப்பட்டது |
இல்லை |
3 பைசா | 1964-1972; முதல் 1981 வரை அச்சிடப்பட்டது. 2011 இல் செல்லாதாதாக்கப்பட்டது. |
அரை அசா |
2 பைசா | 1957-1979; முதல் 1981 வரை அச்சிடப்பட்டது. 2011 இல் செல்லாதாதாக்கப்பட்டது. |
தம்பிடி |
பைசா |
1957-1972; முதல் 1981 வரை அச்சிடப்பட்டது. 2011 இல் செல்லாதாதாக்கப்பட்டது, |
நாணயங்கள் 1957-தற்போதுவரை (தசமம்)
[தொகு]நயா பைசா தொடர் 1957–1963
[தொகு]தசம முறைக்கு மாறிய காலகட்டத்தில் புதியதாக அறிமுகமான பைசாவை வேறுபடுத்திக்காட்ட நயா பைசா என அழைக்கப்பட்டது. 1964 சூன் 1 அன்று முதல் நயா என்ற சொல் கைவிடப்பட்டது. பைசா நாணயங்களான 50, 25, 10, 5, 2, 1 ஆகிய பின்ன மதிப்பிலான நாணயங்களில் அதன் மதிப்பைக் குறிக்க தேவநகரி எழுத்தில் குறிப்பிடப்பட்டன.
வகை | படம் | உலோகம் | வடிவம் | விட்டம் | அச்சிட்ட ஆண்டு | |
---|---|---|---|---|---|---|
முன்பக்கம் | பின்பக்கம் | |||||
ஒரு ரூபாய் | நிக்கல் | வட்டம் | 28 mm | 1962 - 1974 | ||
ஐம்பது நயா பைசா | 24 மிமீ | 1957 - 1963 | ||||
இருபத்தைந்து நயா பைசா | 19 மிமீ | 1957 - 1963 | ||||
பத்து நயா பைசா | செப்பு-நிக்கல் | எட்டு வளைவுகள் | 23 மிமீ (across scallops) | 1957 - 1963 | ||
ஐந்து நயா பைசா | சதுரம் | 22 மிமீ (across corners) | 1957 - 1963 | |||
இரண்டு நயா பைசா | எட்டு வளைவுகள் | 18 மிமீ (across scallops) | 1957 - 1963 | |||
ஒரு நயா பைசா | வெண்கலம் | வட்டம் | 16 மிமீ | 1957 - 1962 | ||
நிக்கல் வெண்கலம் | 1962 - 1963 |
பைசா தொடர் I 1964 முதல் தேவநாகரியில் பைசா மதிப்பு எழுத்தில் இடம்பெற்ற நாணயங்கள்
[தொகு]1964 ஆண்டுக்குப் பிறகு நயா பைசா என்பதில் இருந்த நயா என்ற சொல் கைவிடப்பட்டு நாணயங்கள் மறுபடியும் மாறின. ஒரு ரூபாயிக்கு குறைந்த பைசா மதிப்பு நாணயங்களில் பைசாக்களின் மதிப்பை நாணயத்தில் தேவநகரி எழுத்தால் குறிப்பிடும் வழக்கம் தொடர்ந்த நிலையில் 1964 இல் வந்த புதிய வடிவமைப்பு நாணயங்களில் இது மாற்றப்பட்டது.
வகை | படம் | உலோகம் | உலோகம் | விட்டம் | அச்சிட்ட ஆண்டு | |
---|---|---|---|---|---|---|
முன்பக்கம் | பின்பக்கம் | |||||
50 பைசா | நிக்கல் | வட்டம் | 24 மிமீ | 1964 - 1971 | ||
25 பைசா | நிக்கல் | 19 மிமீ | 1964 - 1972 | |||
10 பைசா | செப்பு நிக்கல் | 8 வளைவுகள் | 23 மிமீ | 1964 - 1967 | ||
நிக்கல் வெண்கலம் | 1968 - 1971 | |||||
5 பைசா | செப்பு நிக்கல் | சதுரம் | 22 மிமீ | 1964 - 1966 | ||
அலுமினியம் | 1967 - 1971 | |||||
2 பைசா | செப்பு நிக்கல் | 8 வளைவுகள் | 18 மிமீ | 1964 | ||
1 பைசா | நிக்கல் வெண்கலம் | வட்டம் | 16 மிமீ | 1964 |
தொடர் II தேவநாகரியில் பைசா மதிப்பு எழுத்தில் இடம்பெறா நாணயங்கள் (1964 - 1983)
[தொகு]1965 இலிருந்து தயாரிக்கப்பட்ட நாணயங்களில் நாணய மதிப்பை தேவநாகரி எழுத்தில் முழுமையாக குறிப்பிடுதல் இருக்கவில்லை. குறைந்த மதிப்பு நாணயங்கள் வெண்கலம், நிக்கல்-வெண்கலம், செப்பு-நிக்கல், அலுமினிய-வெண்கலம் ஆகியவற்றால் செய்யப்பட்டு செய்யப்பட்ட நிலையில், சிறிய வகை நாணயங்கள் படிப்படியாக அலுமினியத்தில் தயாரிக்கப்பட்டன. 1964 ஆம் ஆண்டில் புதிய அலகாக 3 பைசா நாணயம் முதன்முதலில் தயாரிக்கப்பட்டது, இது 1971 வரை தொடர்ந்து அச்சிடப்பட்டது. 1965 முதல் ஒன்று மற்றும் இரண்டு பைசா நாணயங்கள் அலுமினியத்துக்கு மாற்றப்பட்டு, நாணய மதிப்பை தேவநாகரி எழுத்தில் இல்லாமல் அச்சிடப்பட்டன. 1968 ஆம் ஆண்டில் 20 பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது, இது 1971 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.
வகை | படம் | உலோகம் | வடிவம் | விட்டம் | அச்சிட்ட ஆண்டு | |
---|---|---|---|---|---|---|
முன்பக்கம் | பின்பக்கம் | |||||
1 ரூபாய் | செப்பு நிக்கல் | வட்டம் | 28 மிமீ | 1975 - 1982 | ||
50 பைசா | 24 மிமீ | 1972 - 1973 | ||||
1974 - 1983 | ||||||
25 பைசா | 19 மிமீ | 1972 - 1990 | ||||
20 பைசா | செப்பு பித்தலை | 22 மிமீ | 1968 - 1971 | |||
10 பைசா | அலுமினியம் | 12 வளைவுகள் | 25.91 மிமீ | 1971 - 1982 | ||
5 பைசா | சதுரம் | 22 மிமீ | 1972 - 1984 | |||
3 பைசா | அறுங்கோணம் | 21 மிமீ | 1964 - 1971 | |||
2 பைசா | 8 வளைவுகள் | 20 மிமீ | 1965 - 1981 | |||
1 பைசா | சதுரம் | 17 மிமீ | 1965 - 1981 |
தொடர் III 1982 முதல்
[தொகு]1982 ஆம் ஆண்டு முதல், புதிய தொடர் வரிசையாக 20 பைசா நாணயம் வெளியிடப்பட்டது. இந்த மதிப்புடைய நாணயம் கடைசியாக அதற்குமுன் 1971 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டிருந்தது, இது மீண்டும் அச்சிடப்பட்டது என்றாலும் இம்முறை அலுமினியத்தில் அச்சிடப்பட்டது. 10 பைசா, 50 பைசா, ஒரு ரூபாய் நாணயங்களின் வடிவமைப்பு மற்றும் அளவு மாற்றப்பட்டது, அதே உலோகத்தில் தொடர்ந்து அச்சிடப்பட்டது. 3 பைசா, 2 பைசா, 1 பைசா நாணயங்கள் அச்சிடுவது நிறுத்தப்பட்டன என்றாலும் அவை சட்டப்படி செல்லத்தக்கவையாகவே இருந்தன.
வகை | படம் | உலோகம் | வடிவம் | விட்டம் | அச்சிட்ட ஆண்டு | |
---|---|---|---|---|---|---|
முன்பக்கம் | பின்பக்கம் | |||||
1 ரூபாய் | செப்பு நிக்கல் | வட்டம் | 26 மிமீ | 1983 - 1991 | ||
50 பைசா | 24 மிமீ | 1984 - 1990 | ||||
20 பைசா | அலுமினியம் | அறுங்கோணம் | 26 மிமீ | 1982 - 1997 | ||
10 பைசா | 8 வளைவுகள் | 23 மிமீ | 1983 - 1993 | |||
5 பைசா | சதுரம் | 22 மிமீ | 1984 - 1994 |
தொடர் IV 1988 முதல்
[தொகு]தொடர் IV காலகட்டத்தில் 5 பைசா மற்றும் 20 பைசா நாணயங்கள் ஆகியவை அச்சிடுவது நிறுத்தப்பட்டன. 10 பைசா, 25 பைசா, 50 பைசா நாணயங்கள் போன்றவை துறுவேறா எஃகினால் தயாரிக்கப்பட்டன. 1992 ஆண்டு முதல், 1 ரூபாய் நாணயமும் துருவேறா எஃகினால் தயாரிக்கப்பட்டன. மற்றும் ரூ. 2 மற்றும் ரூ. 5 நாணயங்கள் காப்பர் நிக்கலில் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டன. ரூ .1, ரூ 2, ரூ 5 ஆகியவற்றின் நோட்டுகளை அடிக்கடி அச்சிடுவதில் ஏற்படும் மிகுதியான செலவில் இருந்து விடுபட இந்த வகை நாணயத்திற்கு வழிவகுத்தது. இந்த நாணயங்கள் அச்சிடுவது 2004 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. கப்பர்-நிக்கல் நாணயங்கள் அச்சிடுவது பிறகு நிறுத்தப்பட்டு, இரண்டு மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களும் துறுவேறா எஃகினால் தயாரிக்கப்படுவது துவங்கியது.[4]
2004 ஒற்றுமை பன்முகத்தன்மை தொடர்
[தொகு]2004 இல், இந்திய ரிசர்வ் வங்கி புதியதாக ஒரு ரூபாய் வரிசையை வெளியிட்டு, அதைத்தொடர்ந்து 2 ரூபாய் நாணயத்தையும் 2005 இல் அதன் பிறகு 2005 இல் 10 ரூபாய் நாணயத்தையும் வெளியிட்டது. இவை 2006 ஆம் ஆண்டில் ஓரளவு புழக்கத்தில் வந்தன, மேலும் அவற்றின் வடிவமைப்பு குறித்து சர்ச்சை ஏற்படுத்தப்பட்டது. 10 ரூபாய் நாணயவகையானது இந்தியாவில் அப்போதுதான் புதியதாக வெளியிடப்பட்ட நாணயங்களாக இருந்தன. அந்த நாணயங்கள் வெளியடப்பட்டும், நாணயத்தின் பெரும்பகுதி புழக்கத்துக்கு வராமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம் இந்த இரு உலோக நாணயங்களை பலர் சேகரித்துவைத்ததே காரணமாகும்.
வகை | படம் | உலோகம் | வடிவம் | விட்டம் | அச்சிட்ட ஆண்டு | |
---|---|---|---|---|---|---|
முன்பக்கம் | பின்பக்கம் | |||||
10 ரூபாய் | இரு உலோக நாணயம்
செப்பு நிக்கல் மையத்திலும் அலுமினிய வெண்கல வளையம் |
வட்டம் | 27 மிமீ | 2005 - 2007 | ||
2 ரூபாய் | துறுவேறா எஃகு | 26.75 மிமீ | ||||
1 ரூபாய் | 25 மிமீ | 2004 - 2006 |
2007 அஸ்த முத்திரைத் தொடர்
[தொகு]2007 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புதிய நாணயத் தொடர்களை வெளியிட்டது, இந்த அஸ்த மூத்திரைத் தொடர், நாணயங்களில் 50 பைசா, 1 ரூபாய், 2 ரூபாய் நாணயங்களில் வெளியிடப்பட்டது. இந்த நாணயங்கள் துருப்பிடிக்காத எஃகு நாணயங்கள் ஆகும். மேல்லும் இதில் இந்திய பாரம்பரிய நடண கை சைகைகளான பல்வேறு அஸ்த முத்திரைகளை இடம்பெற்றன. 5 ரூபாய் நாணயங்கள் வடிவமைப்பில் அலைகள் கொண்ட துருப்பிடிக்காத எஃகு நாணயங்களாக 2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன. அதே போல் 2008 ஆம் ஆண்டில் ஒரு புதிய 10 ரூபாய் நாணயமும் வடிவமைப்பில் மாற்றப்பட்டது. 5 ரூபாய் நாணய வடிவமைப்பு மீண்டும் முந்தைய வடிவமைப்பிற்குத் திரும்பியது, இருப்பினும் இப்போது அது செப்பு நிக்கல் உலோகத்துக்கு பதிலாக நிக்கல்-வெண்கல உலோகத்தில் வெளியிடப்பட்டது. எனினும் இந்த 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் அஸ்த முத்திரைத் தொடரின் பகுதியாக இருக்க இல்லை.
வகை | படம் | உலோகம் | வடிவம் | விட்டம் | அச்சிட்ட ஆண்டு | |
---|---|---|---|---|---|---|
முன்பக்கம் | பின்பக்கம் | |||||
2 ரூபாய் | துறுவேறா எஃகு | வட்டம் | 27 mm | 2007 - 2011 | ||
1 ரூபாய் | 25 மிமீ | |||||
50 பைசா | 22 மிமீ | 2008 - 2010 |
5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் 2007, 2008, 2009 இல் பொதுவான புழக்கத்துக்கு வெளியிடப்பட்டு வந்தன, மாற்றியமைக்கப்பட்ட வடிவமைப்புகள் 2011 இல் ரூபாய் தொடர் அறிமுகப்படுத்தப்படும் வரை தொடர்ந்தன.
வகை | படம் | உலோகம் | வடிவம் | விட்டம் | அச்சிட்ட ஆண்டு | |
---|---|---|---|---|---|---|
முன்பக்கம் | பின்பக்கம் | |||||
5 ரூபாய் | துறுவேறா எஃகு | வட்டம் | 23 மிமீ | 2007 - 2008 | ||
10 ரூபாய் | இரு உலோக நாணயம்
செப்பு நிக்கல் மையம் அலுமினிய வெண்கல வளையம் |
27 மிமீ | 2008 - 2010 | |||
5 ரூபாய் | நிக்கல் - பித்தளை | 23 மிமீ | 2009 - 2010 |
2011 புதிய தொடர் ரூபாய் சின்னத்துடன் (₹)
[தொகு]2011 இல், 50 பைசா, ₹ 1, ₹ 2, ₹ 5, ₹ 10 ஆகியவற்றில் ரிசர்வ் வங்கி ஒரு தொடரை வெளியிட்டது. 50 பைசா, ₹ 1, ₹ 2, ₹ 5 நாணய வடிவமைப்பில் 50 பைசா நாணயத்தில் மட்டும் ரூபாயின் சின்னம் இல்லாமல் இருந்தது. ₹ 10 நாணயம் இரு உலோக நாணயமாகவே வெளியிட்டது.
வகை | படம் | உலோகம் | வடிவம் | விட்டம் | அச்சிடப்பட்ட ஆண்டு | |
---|---|---|---|---|---|---|
முன்பக்கம் | பின்பக்கம் | |||||
₹10
பத்து ரூபாய் |
இரு உலோகங்கள்
மையத்தில் செப்பு நிக்கல் அலுமினிய வெண்கல வளையம் |
வட்டம் | 27 மிமீ | 2011 - | ||
₹ 5
ஐந்து ரூபாய் |
நிக்கல் பித்தளை | 27 மிமீ | 2011 - | |||
₹ 2
இரண்டு ரூபாய் |
துறுவேறா எஃகு | 25 மிமீ | 2011 - | |||
₹ 1
ஒரு ரூபாய் |
21.93 மிமீ | 2011 - | ||||
50 p
ஐம்பது பைசா |
19 மிமீ | 2011 - |
நாணய ஆலைகள்
[தொகு]உள்நாட்டு ஆலைக் குறியீடுகள்
[தொகு]- கொல்கத்தா - நாணயத்தில் எவ்வித தனிக்குறியீடும் இருக்காது
- மும்பை - நாணயத்தின் தேதியின் கீழ் வைரக் குறி.
- ஐதராபாத் - நாணயத்தின் தேதிக்கு கீழே ஐந்து-முனை நட்சத்திரம்
- நொய்டா - நாணயத்தின் தேதிக்கு அடியில், சிறு புள்ளி (துளையுடன்)
நாணயங்களின் தேவை அதிகரிப்பின் காரணமாக, நாட்டின் வரலாற்றில் பல்வேறு வெளிநாட்டு நகரங்களில் உள்ள நாணய ஆலைகளில் இந்திய நாணயங்களை அச்சிட இந்திய அரசாங்கம் கட்டாயத்துக்கு உள்ளானது.
வெளி நாட்டு காசாலைகள்
[தொகு]- பிரிட்டோரியா - தேதியின் கீழ் வைரம், 1943.
- சியோல் - நாணயத்தின் தேதியின் கீழ் ஒரு ஐந்து முனை நட்சத்திரம் ஆனால் சரியாக 1985 மற்றும் 1997 தேதிகளில் முதல் அல்லது கடைசி எண்கள் கீழே.
- பிர்மிங்ஹாம் (ராயல் மிண்ட், இங்கிலாந்து) - நாணயத்தின் தேதிக்கு கீழை ஒரு சிறிய புள்ளி ஆனால் சரியாக 1985 ஆம் ஆண்டின் முதல் இலக்கத்திற்கு கீழே உள்ளது.
- ஹீட்டன் பிரஸ் - 1985 என்ற ஆண்டு எண்ணின் கடைசி எண்ணிக்கீழ் "H" என்ற எழுத்து.
- ஒட்டாவா - நாணயத்தின் தேதியின் கீழ் "C" என்ற குறியீடு.
- மெக்ஸிக்கோ நகரம் - நாணயத்தின் தேதிக்கு கீழ் "M" புதினா குறி.
டேகூ, கொரியா, ஸ்லோவாகியா (க்ரேம்ந்கா), ரஷ்யா (மாஸ்கோ) ஆகிய இடங்களில் உள்ள காசாலைகளும் பயன்படுத்தப்பட்டன.
நினைவு நாணயங்கள்
[தொகு]இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் மரணத்தையடுத்து 1964 ஆம் ஆண்டில் முதல் இந்திய நினைவு நாணயம் வெளியிடப்பட்டது. அதன் பின்னர், இந்த வகையில் ஏராளமான நாணயங்கள் 5 பைசாவில் இருந்து 10 ரூபாய் வரை வெளியிடப்பட்டன. புகழ்பெற்ற பிரபலங்களின் நினைவாக (பொதுவாக அவர்களின் பிறப்பு அல்லது இறப்பு நூற்றாண்டு அல்லது அரிதாக அவர்களது மரணம் நேர்ந்த நிகழ்வுகளின்போது), அரசாங்க திட்டங்கள் மற்றும் சமூக செய்திகளை அடிப்படையாகக் கொண்ட நினைவு நாணயங்களும் வெளியிடப்பட்டன.
மும்பை, நொய்டா, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு இடங்களில் உள்ள ஆலைகளில் நினைவு நாணயங்கள் தயாரிக்கப்படுகின்றன.
முதல் நினைவு நாணயம்
[தொகு]1964 ஆம் ஆண்டில் முதல் நினைவு நாணயமாக, ஜவஹர்லால் நேருவின் மார்பளவு உருவத்துடன் ஒரு ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது.
நினைவு நாணயங்களின் பட்டியல்
[தொகு]நினைவு நாணயங்கள் | ஆண்டு | 5பைசா | 10பைசா | 20பைசா | 25பைசா | 50பைசா | 1₹ | 2₹ | 5₹ | 10₹ | 20₹ | 25₹ | 50₹ | 60₹ | 75₹ | 100₹ | 125₹ | 150₹ | 200₹ | 500₹ | 1000₹ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஜவகர்லால் நேரு | 1964 | KM | KM | ||||||||||||||||||
மகாத்மா காந்தி | 1969 | KHM | KM | KM | KM | ||||||||||||||||
அனைவருக்கும் உணவு | 1970 | KM | KM | ||||||||||||||||||
அனைவருக்கும் உணவு | 1971 | KM | M | ||||||||||||||||||
25வது விடுதலைநாள் | 1972 | KM | KM | ||||||||||||||||||
மேலும் உணவு உற்பத்திGrow More Food | 1973 | KM | M | M | M | ||||||||||||||||
திட்டமிட்ட குடும்பம் அனைவருக்கும் உணவு | 1974 | KHM | |||||||||||||||||||
மகளிர் ஆண்டு | 1975 | KHM | M | M | |||||||||||||||||
உணவு & வேலை அனைவருக்கும் | 1976 | KHM | KM | M | M | ||||||||||||||||
அபிவிருத்திக்கு சேமி | 1977 | KHM | KM | M | M | ||||||||||||||||
அனைவருக்கும் உணவு & தங்குமிடம் | 1978 | KHM | KHM | M | M | ||||||||||||||||
பன்னாட்டு குழந்தைகள் ஆண்டு (P) | 1978 | M | |||||||||||||||||||
பன்னாட்டு குழந்தைகள் ஆண்டு | 1979 | KHM | KHM | M | M | M | |||||||||||||||
கிராமப்புற பெண்கள் முன்னேற்றம் | 1980 | KHM | KHM | M | M | ||||||||||||||||
உலக உணவு நாள் | 1981 | KM | KHM | M | M | ||||||||||||||||
IX ஆசிய விளையாட்டுப்போட்டிகள் | 1982 | KHM | KHM | KM | M | M | |||||||||||||||
உலக உணவு நாள் | 1982 | KHM | KH | ||||||||||||||||||
தேசிய ஒருங்கிணைப்பு | 1982 | KM | KM | M | M | ||||||||||||||||
மீன் வளம் | 1983 | KH | |||||||||||||||||||
அபிவிருத்தி வனவியல் | 1985 | KHM | |||||||||||||||||||
இந்திய ரிசர்வ் வங்கி | 1985 | KHM | KM | M | |||||||||||||||||
இந்திரா காந்தி | 1985 | KHM | HM | M | |||||||||||||||||
பன்னாட்டு இளைஞர் ஆண்டு | 1985 | KHM | K | M | |||||||||||||||||
மீன் வளம் | 1986 | KHM | M | M | |||||||||||||||||
சிறு விவசாயி | 1987 | KHM | M | M | |||||||||||||||||
மானாவாரி விவசாயம் | 1988 | KHM | |||||||||||||||||||
ஜவகர்லால் நேரு | 1989 | KHM | HM | M | M | ||||||||||||||||
உலக உணவு நாள் | 1989 | KHM | |||||||||||||||||||
அம்பேத்கர் | 1990 | HM | |||||||||||||||||||
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் | 1990 | HM | |||||||||||||||||||
சார்க் ஆண்டு - பெண் குழந்தை | 1990 | HM | |||||||||||||||||||
எதிர்காலத்திற்கான உணவு | 1990 | KH | |||||||||||||||||||
ராஜீவ் காந்தி | 1991 | HM | |||||||||||||||||||
பொதுநலவாய அவை | 1991 | M | M | M | |||||||||||||||||
சுற்றுலா ஆண்டு | 1991 | HM | M | M | |||||||||||||||||
உணவு & ஊட்டச்சத்து | 1992 | K | |||||||||||||||||||
நில வளம் | 1992 | K | |||||||||||||||||||
வெள்ளையனே வெளியேறு இயக்கம் | 1993 | KHM | M | M | M | ||||||||||||||||
இண்டர் நாடாளுமன்ற ஒன்றியம் | 1993 | M | |||||||||||||||||||
சிறு குடும்பமே மகிழ்ச்சியான குடும்பம் | 1993 | HM | |||||||||||||||||||
உயிர் பன்முகத்தன்மை | 1993 | HM | |||||||||||||||||||
பன்னாட்டு குடும்ப ஆண்டு | 1994 | MN | |||||||||||||||||||
வாழ்க்கைக்கு நீர் | 1994 | KHM | |||||||||||||||||||
ILO | 1994 | HMN | M | M | |||||||||||||||||
உலகத் தமிழ் மாநாடு | 1995 | KHMN | M | MN | |||||||||||||||||
உலகமய இந்திய வேளாண்மை | 1995 | KM | |||||||||||||||||||
UNO | 1995 | MN | |||||||||||||||||||
FAO | 1995 | HMN | |||||||||||||||||||
சர்தார் வல்லபாய் பட்டேல் | 1995 | M | |||||||||||||||||||
சர்தார் வல்லபாய் பட்டேல் | 1996 | KHMN | M | M | M | ||||||||||||||||
தாயின் உடல்நலமே குழந்தைகளின் உடல்நலம் | 1996 | KHMN | |||||||||||||||||||
சர்வதேச பயிர் அறிவியல் | 1996 | K | |||||||||||||||||||
சுபாஷ் சந்திர போஸ் | 1996 | KN | |||||||||||||||||||
சுபாஷ் சந்திர போஸ் | 1997 | KHMN | M | M | M | ||||||||||||||||
50 year of Independence | 1997 | KHMN | M | ||||||||||||||||||
செல்லூலார் சிறை | 1997 | KHMN | |||||||||||||||||||
ஸ்ரீ அரவிந்தர் | 1998 | KMN | M | M | M | ||||||||||||||||
தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் | 1998 | KHN | K | ||||||||||||||||||
புனித தயாநத்தேஸ்வரர் | 1999 | KMN | M | ||||||||||||||||||
சத்ரபதி சிவாஜி | 1999 | KHMN | M | M | |||||||||||||||||
இந்திய உச்ச நீதிமன்றம் | 2000 | KMN | M | ||||||||||||||||||
சியாம் பிரசாத் | 2001 | KHN | K | M | K | ||||||||||||||||
பகவான் மகாபிர் | 2001 | MN | M | ||||||||||||||||||
லோகநாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் | 2002 | HM | |||||||||||||||||||
துக்காராம் | 2002 | KHMN | K | M | M | ||||||||||||||||
மகா ராணாபிரதாப் | 2003 | HM | M | M | |||||||||||||||||
வீர துர்கதாஸ் | 2003 | HM | M | M | |||||||||||||||||
இந்திய இரயில்வே | 2003 | KHMN | K | ||||||||||||||||||
தாதாபாய் நௌரோஜி | 2003 | KHM | |||||||||||||||||||
குமாரசாமி காமராஜ் | 2003 | KHM | M | ||||||||||||||||||
இந்தியா போஸ்ட் | 2004 | K | K | ||||||||||||||||||
தொலைத்தொடர்பு | 2004 | K | K | ||||||||||||||||||
லால்பகதூர் சாஸ்திரி (CuNi) | 2004 | K | K | ||||||||||||||||||
லால்பகதூர் சாஸ்திரி (SS) | 2004 | KHM | |||||||||||||||||||
தண்டி யாத்திரை (CuNi) | 2005 | M | M | ||||||||||||||||||
தண்டி யாத்திரை (SS) | 2005 | M | |||||||||||||||||||
மகாத்மா பசவேசுவரர் (CuNi) | 2006 | M | M | ||||||||||||||||||
மகாத்மா பசவேசுவரர் (SS) | 2006 | M | |||||||||||||||||||
ஓஎன்ஜிசி (CuNi) | 2006 | K | M | ||||||||||||||||||
ஓஎன்ஜிசி (SS) | 2006 | KH | |||||||||||||||||||
ஸ்ரீ நாராயண குரு (CuNi) | 2006 | M | M | ||||||||||||||||||
ஸ்ரீ நாராயண குரு (SS) | 2006 | M | |||||||||||||||||||
எஸ்பிஐ (CuNi) | 2006 | K | K | ||||||||||||||||||
எஸ்பிஐ (CuNi) | 2006 | KH | |||||||||||||||||||
இந்திய விமானப்படை | 2007 | K | K | ||||||||||||||||||
லோகமான்ய பாலகங்காதர திலகர் (CuNi) | 2007 | M | K | ||||||||||||||||||
லோகமான்ய பாலகங்காதர திலகர் (SS) | 2007 | M | |||||||||||||||||||
திலக்ஜி எரர் (CuNi) | 2007 | M | |||||||||||||||||||
முதல் விடுதலைப் போர் | 2007 | M | M | ||||||||||||||||||
காதி & கிராமத் தொழில் (CuNi) | 2007 | M | M | ||||||||||||||||||
காதி & கிராமத் தொழில் (SS) | 2007 | M | |||||||||||||||||||
பகத்சிங் | 2007 | KH | K | ||||||||||||||||||
ஸ்ரீ குருகிரந்த்சாகிப் | 2008 | HM | M | ||||||||||||||||||
புனித அல்போன்சா | 2009 | KHM | M | ||||||||||||||||||
லூயிஸ் பிரெயில் | 2009 | KHM | K | ||||||||||||||||||
பேரறிஞர் அண்ணா | 2009 | KHM | K | ||||||||||||||||||
60 ஆண்டுகள் காமன்வெல்த் | 2009 | KHM | M | ||||||||||||||||||
டாக்டர். இராஜேந்திர பிரசாத் | 2009 | KHMN | K | ||||||||||||||||||
ஹோமி பாபா | 2009 | MN | M | ||||||||||||||||||
இந்திய ரிசர்வ் வங்கி | 2010 | HM | KHM | HM | HMN | KMHN | |||||||||||||||
XIX பொதுநலவய விளையாட்டுகள் | 2010 | KHN | KHMN | ||||||||||||||||||
சி. சுப்பிரமணியம் | 2010 | KHMN | HM | ||||||||||||||||||
தஞ்சை பிரகதீசுவரர் கோயில் | 2010 | KHMN | M | ||||||||||||||||||
அன்னை தெரசா | 2010 | KHMN | K | ||||||||||||||||||
கம்யூட்டலர் & ஆடிட்டர் ஜெனரல் | 2010 | KHMN | K | ||||||||||||||||||
வருமான வரி - சானக்யா | 2010 | KHM | K | ||||||||||||||||||
வருமான வரி - சானக்யா | 2011 | KN | |||||||||||||||||||
சிவில் விமான போக்குவரத்து | 2010 | H | |||||||||||||||||||
சிவில் விமான போக்குவரத்து | 2011 | KHMN | M | ||||||||||||||||||
இரவீந்திரநாத் தாகூர் | 2011 | KHMN | K | ||||||||||||||||||
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் | 2011 | KHMN | HM | ||||||||||||||||||
மதன்மோகன் மாளவியா | 2011 | KHMN | M | ||||||||||||||||||
இந்திய நாடாளுமன்றம் | 2012 | KHMN | |||||||||||||||||||
ஸ்ரீ மாதா வைஷ்ணு தேவி | 2012 | HMN | HMN | M | |||||||||||||||||
கொல்கத்தா காசாலை | 2012 | KHMN | K | ||||||||||||||||||
மோதிலால் நேரு | 2012 | KHMN | M | ||||||||||||||||||
குகூ இயக்கம் | 2013 | KHMN | M | ||||||||||||||||||
சுவாமி விவேகானந்தர் | 2013 | KHMN | K | ||||||||||||||||||
தென்னை வாரியம் | 2013 | KHMN | M | ||||||||||||||||||
ஆச்சார்யா துளசி | 2014 | KHMN | M | ||||||||||||||||||
மௌளானா அபுல்கலாம் ஆசாத் | 2014 | KHMN | K | ||||||||||||||||||
ஜவகர்லால் நேரு | 2014 | KHMN | K | ||||||||||||||||||
கோமகட்டா மாரு சம்பவம் | 2014 | HMN | |||||||||||||||||||
ஜாம்செட்ஜி நஸ்ஸர்வான்ஜி டாட்டா | 2015 | KM | |||||||||||||||||||
பேகம் அக்தர் | 2015 | KM | K | ||||||||||||||||||
ராணி கெய்டின்லி | 2015 | K | |||||||||||||||||||
1965 நடவடிக்கை | 2015 | M | M | ||||||||||||||||||
பிஎச்இஎல் | 2015 | KM | K | ||||||||||||||||||
அலகாபாத் உயர்நீதி மன்றம் | 2015 | HM | M | ||||||||||||||||||
பிஜூபட்னாயக் | 2015 | K | K | ||||||||||||||||||
டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் | 2015 | HM | K | ||||||||||||||||||
டாக்டர். சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் | 2015 | M | K | ||||||||||||||||||
3 வது இந்திய ஆப்பிரிக்கா மன்றம் | 2015 | K | K | ||||||||||||||||||
மகாராண பிரதாப் | 2015 | M | M | ||||||||||||||||||
சுவாமி சின்மயானந்தர் | 2015 | KM | K | ||||||||||||||||||
ஆப்பிரிக்காவில் இருந்து காந்தி திரும்புதல் | 2015 | KHMN | |||||||||||||||||||
பன்னாட்டு யோகா நாள் | 2015 | MN | |||||||||||||||||||
நாபகலேர்பார் ரத யாத்திரை | 2015 | M | M | ||||||||||||||||||
மைசூர் பல்கலைக்கழகம் | 2016 | M | M | ||||||||||||||||||
லாலாலஜபதி ராய் | 2016 | K | |||||||||||||||||||
தாத்யா தோபே | 2016 | K | K | ||||||||||||||||||
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் | 2016 | M | M | ||||||||||||||||||
இந்திய தேசிய காப்பகம் | 2016 | K | K | ||||||||||||||||||
பி.டி.டிந்தல் உபாத்யா | 2016 | M | M | ||||||||||||||||||
ராஜு பட்னாயக் | 2016 | M | M | ||||||||||||||||||
சைதன்ய மகாபிரபு | 2016 | M | M | ||||||||||||||||||
ஸ்ரீமத் ராஜ்சந்திரா | 2017 | M | M |
குறிப்பு: தடித்த குறிப்புகள் கொண்டவை வெள்ளி நாணயங்கள், காசாலை குறிப்புகள்: K = கொல்கத்தா (No mark), H = ஹைதராபாத் (⋆), M = மும்பை (◆ அல்லது B), நொய்டா = (●).
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 India - Currency, Weights and Measures, The Statesman's Year Book 1947, pg 133, Macmillan & Co.
- ↑ Schedule of Par Values, Currencies of Metropolitan Areas, The Statesman's Year Book 1947, pg xxiii, Macmillan & Co.
- ↑ Krause, Chester. Mishler, Clifford. "India-Republic," 2005 Standard Catalog of World Coins 1901-present, 32nd edition. Krause Publications. Iola, WI
- ↑ [1]