10 பைசா (இந்திய நாணயம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பத்து பைசா
இந்தியா
Value10Indian Paisa symbol.svg (110)
Mass2.00 g
Diameter16 mm
Obverse
10-paise-1965-obs.png
Reverse
10-paise-1965-rev.png

பத்து பைசா என்பது ஒரு நாணய அலகாகும். இதன் மதிப்பு இந்திய ரூபாயில்  110 ஆகும். பைசாவின் சின்னம் p. 1957 முதல் 1998 வரை பத்து பைசா நாணயங்களை இந்திய அரசு அச்சிட்டது. ஜூன் 30 2011 அன்று பத்து பைசா நாணயங்கள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. [1]

நாணய அமைப்பு மற்றும் தகவல்கள்[தொகு]

1957-1963[தொகு]

1959 இல் வெளியிடப்பட்ட 10 பைசா காப்பர் நிக்கல் நாணயம்

1957 இல் இந்திய அரசாங்கம் 10 பைசா நாணயத்தினை வெளியிட்டது. இந்த நாணயம் காப்பர் நிக்கல் உலோகத்தால் வெளியிடப்பட்டது. இந்த நாணயம் 4.9 கிராம் எடை கொண்டதாகவும், 23 மில்லி மீட்டர் விட்டம் கொண்டதாகவும், 1.7 மில்லி மீட்டர் தடிமன் கொண்டதாகவும் உள்ளது. 1957-1963 வரை இந்த நாணயங்கள் வெளியிடப்பட்டது. [2] ஜூன் 30 2011 ஆம் தேதி இந்த நாணயம் செல்லாதது என அறிவிக்கப்பட்டது.


1964-1967[தொகு]

1965 இல் வெளியிடப்பட்ட 10 பைசா காப்பர் நிக்கல் நாணயம்

1964 இல் இந்திய அரசாங்கம் 10 பைசா நாணயத்தினை வெளியிட்டது. இந்த நாணயம் காப்பர் நிக்கல் உலோகத்தால் வெளியிடப்பட்டது. இந்த நாணயம் 4.9 கிராம் எடை கொண்டதாகவும், 23 மில்லி மீட்டர் விட்டம் கொண்டதாகவும், 1.7 மில்லி மீட்டர் தடிமன் கொண்டதாகவும் உள்ளது. 1964-1967 வரை இந்த நாணயங்கள் வெளியிடப்பட்டது.[3] ஜூன் 30 2011 ஆம் தேதி இந்த நாணயம் செல்லாதது என அறிவிக்கப்பட்டது.



1968-1971[தொகு]

1969 இல் வெளியிடப்பட்ட 10 பைசா காப்பர் பித்தளை நாணயம்

1968 இல் இந்திய அரசாங்கம் 10 பைசா நாணயத்தினை வெளியிட்டது. இந்த நாணயம் காப்பர் பித்தளை உலோகத்தால் வெளியிடப்பட்டது. இந்த நாணயம் 4.3 கிராம் எடை கொண்டதாகவும், 23 மில்லி மீட்டர் விட்டம் கொண்டதாகவும், 1.7 மில்லி மீட்டர் தடிமன் கொண்டதாகவும் உள்ளது. 1968-1971 வரை இந்த நாணயங்கள் வெளியிடப்பட்டது.[4] ஜூன் 30 2011 ஆம் தேதி இந்த நாணயம் செல்லாதது என அறிவிக்கப்பட்டது.




1971-1982[தொகு]

1973 இல் வெளியிடப்பட்ட 10 பைசா அலுமினிய நாணயம்

1971 இல் இந்திய அரசாங்கம் 10 பைசா நாணயத்தினை வெளியிட்டது. இந்த நாணயம் அலுமினியம் உலோகத்தால் வெளியிடப்பட்டது. இந்த நாணயம் 2.27 கிராம் எடை கொண்டதாகவும், 25.91 மில்லி மீட்டர் விட்டம் கொண்டதாகவும், 1.92 மில்லி மீட்டர் தடிமன் கொண்டதாகவும் உள்ளது. 1971-1982 வரை இந்த நாணயங்கள் வெளியிடப்பட்டது.[5] ஜூன் 30 2011 ஆம் தேதி இந்த நாணயம் செல்லாதது என அறிவிக்கப்பட்டது.



1983-1993[தொகு]

1983 இல் இந்திய அரசாங்கம் 10 பைசா நாணயத்தினை வெளியிட்டது. இந்த நாணயம் அலுமினியம் உலோகத்தால் வெளியிடப்பட்டது. இந்த நாணயம் 1.76 கிராம் எடை கொண்டதாகவும், 23.03 மில்லி மீட்டர் விட்டம் கொண்டதாகவும், 1.94 மில்லி மீட்டர் தடிமன் கொண்டதாகவும் உள்ளது. 1983-1993 வரை இந்த நாணயங்கள் வெளியிடப்பட்டது.[5] ஜூன் 30 2011 ஆம் தேதி இந்த நாணயம் செல்லாதது என அறிவிக்கப்பட்டது.

1988-1998[தொகு]

1988 இல் இந்திய அரசாங்கம் 10 பைசா நாணயத்தினை வெளியிட்டது. இந்த நாணயம் எக்கு உலோகத்தால் வெளியிடப்பட்டது. இந்த நாணயம் 2 கிராம் எடை கொண்டதாகவும், 16 மில்லி மீட்டர் விட்டம் கொண்டதாகவும், 1.51 மில்லி மீட்டர் தடிமன் கொண்டதாகவும் உள்ளது. 1988 இலிருந்து 1998 வரை இந்த நாணயங்கள் வெளியிடப்பட்டது.[5] இதுவரை வெளியிடப்பட்ட பத்து பைசா நாணயத்தில் குறைவான விட்டம் கொண்ட நாணயமாக வெளியிடப்பட்டதால், மிகவும் சிறிய அளவாக இருந்தது. ஜூன் 30 2011 ஆம் தேதி இந்த நாணயம் செல்லாதது என அறிவிக்கப்பட்டது.

நினைவு நாணயங்கள்[தொகு]

1974 குடும்பம்[தொகு]

அனைவருக்கும் உணவு என்ற நாணயத்தின் வரிசையில் திட்டமிடப்பட்ட குடும்பங்கள் என்ற நாணயம் வெளியிடப்பட்டது. இந்த நாணயத்தின் முன்பகுதியில் மையமாக சிங்க இலட்சனையும் 10 என்ற எண்ணும் பொறிக்கப்பட்டிருந்தது. பின்பகுதியில் குடும்ப கட்டுப்பாடு சின்னமான முக்கோணமும், ஆண் பெண் குழந்தைகளை கைகளில் பிடித்த தம்பதியினரும் பொறிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றி PLANNED FAMILIES:FOOD FOR ALL, नियोजित परिवार:सबको लिए अनाज, 1974 என பொறிக்கப்பட்டிருந்தது.

1975 பெண் சமத்துவம்[தொகு]

1976 அனைவருக்கும் உணவு மற்றும் வேலை[தொகு]

1977 வளர்ச்சிக்கான சேமிப்பு[தொகு]

1978 அனைவருக்கும் உணவு மற்றும் உரைவிடம்[தொகு]

1979 மகிழ்ச்சியான குழந்தைகள், நாட்டின் பெருமை[தொகு]

1980 கிராமப்புற பெண்கள் முன்னேற்றம்[தொகு]

1981 உலக உணவு நாள்[தொகு]

1982 9 வது ஆசிய விளையாட்டு[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "20 Paise, India". en.numista.com.
  2. "10 Naye Paise, India". en.numista.com.
  3. "10 Paise, India". en.numista.com.
  4. "10 Paise, India". en.numista.com.
  5. 5.0 5.1 5.2 "10 Paise, India". en.numista.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=10_பைசா_(இந்திய_நாணயம்)&oldid=2996295" இருந்து மீள்விக்கப்பட்டது