3 பைசா (இந்திய நாணயம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மூன்று பைசா
Three paise
तीन पैसे
 இந்தியா
Value இந்திய ரூபாயில் 3100
Mass 1.25 g (19.3 gr)
Diameter 21 mm (0.83 in)
Thickness 2.0 mm (0.079 in)
Edge Smooth
Composition அலுமினியம்
Years of minting 1964-1971
Mintage 1,612,704,568
Mint marks ♦ = மும்பை
B = Mumbai proof issue
* = ஐதராபாத்
⟐ = ஐதராபாத்
குறியீடு இல்லை = கொல்கத்தா
Circulation செல்லாக்காசாக்கப்பட்டது
Catalog number KM# 14.1 & 14.2
Obverse
Design இந்திய தேசிய இலச்சினையுடன் நாட்டின் பெயர்.
Reverse
Design நாணய மதிப்பு மற்றும் அச்சிட்ட ஆண்டு

மூன்று பைசா (Three paise (இந்தி: तीन पैसे) என்பது ஒரு நாணய அலகாகும். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 3100 ஆகும். பைசாவின் சின்னம் p.

வரலாறு[தொகு]

1957 க்கு முன்னர், இந்திய ரூபாய் தசமபடுத்தப்படாமல் இருந்தது, 1835 முதல் 1957 வரை ரூபாயானது 16 அணாக்களாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அணாவும் நான்கு இந்திய பைசாக்களாகவும், ஒவ்வொரு பைசாக்களும் மூன்று தம்பிடிகளாக இருந்தன 1947 இல் தம்பிடிக் காசு செல்லாததாக்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டில், இந்திய "நாணயல்களை மெட்ரிக் முறைமையைப் பின்பற்றி சீர்திருத்த " இந்திய நாணயச் சட்டம்" திருத்தப்பட்டது. அதன்படி பைச நாணயங்கள் 1957 இல் அறிமுகப்படுத்தப்பட்டன, ஆனால் 1957 முதல் 1964 வரை நாணயமானது "நயா பைசா" (English: New Paisa) என்று அழைக்கப்பட்டது. 1964 சூன் 1 அன்று இதிலுள்ள, "நயா" என்ற வார்த்தை கைவிடப்பட்டது மேலும் அந்த பெயரானது "ஒரு பைசா" என அழைக்கப்பட்டது. பைசா நாணயங்கள் "பதின் வரிசை"யின் ஒரு பகுதியாக இருந்தது.[1][2][3]

நாணய அடிப்பு[தொகு]

மூன்று பைசா நாணயங்கள் 1964 முதல் 1971 வரை அச்சிடப்பட்டன. இவை மும்பை மற்றும் கல்கத்தாவிலுள்ள இந்திய அரசு காசாலைகளில் அச்சிடப்பட்டன. மற்றும் மும்பை ஆலையின் சிறிய அடையாளமாக ♦ (சிறிய புள்ளி / வைரம்) இடப்பட்டது. கல்கத்தா ஆலையில் அச்சிடப்பட்ட நாணயங்கள் எந்த குறியீடுமின்றி வெளியிடப்பட்டன. மூன்று பைசா நாணயமானது பிற்காலத்தில் செல்லாததாக்கப்பட்டது.[4]

மொத்த நாணயங்கள்[தொகு]

மொத்தம் 1,612,704,568 நாணயங்கள் 1964 முதல் 1971 வரை அச்சிடப்பட்டன .

நாணயம்[தொகு]

மூன்று பைசா நாணயங்கள் அலுமினிய உலோகத்தில் தயாரிக்கப்பட்டன. காசின் எடை 1.25 கிராம்கள், விட்டம் 21 மில்லிமீட்டர்கள் (0.83 in) கனம் 2 மில்லிமீட்டர்கள் (0.079 in). மூன்று பைசா நாணயமானது அறுங்கோண வடிவில் தயாரிக்கப்பட்டது.

வகைகள்[தொகு]

வகைகள் (1964-1971).
படம் மதிப்பு தொழில்நுட்ப அளவீடுகள் விளக்கம் அச்சிடப்பட்ட ஆண்டு தற்போதைய
நிலை
முன்பக்கம் பின்பக்கம் எடை விட்டம் கனம் உலோகம் முனை முன்பக்கம் பின்பக்கம் முதல் கடைசி
3 பைசா 1.25 கி 21 மிமீ 2.0 மிமீ அலுமினியம் Smooth இந்திய தேசிய இலச்சினை & நாட்டுப்
பெயர் இந்தி மற்றும் ஆங்கிலத்தில்.
நாணய மதிப்பு மற்றும் ஆண்டு. 1964 1971 செல்லாக்காசு.[1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Coin details". India Numismatics. https://en.numista.com/catalogue/pieces1847.html. பார்த்த நாள்: 27 August 2017. 
  2. "Republic India Coinage". Reserve Bank of India. https://rbi.org.in/SCRIPTs/mc_republic.aspx. பார்த்த நாள்: 27 August 2017. 
  3. "History of Indian coins". India Numismatics. https://indianumismatics.wordpress.com/category/history-of-indian-coins/. பார்த்த நாள்: 27 August 2017. 
  4. "3 paise". colnect.com. https://colnect.com/en/coins/list/variant/2103. பார்த்த நாள்: 27 August 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=3_பைசா_(இந்திய_நாணயம்)&oldid=2462907" இருந்து மீள்விக்கப்பட்டது