இந்திய இரண்டு ரூபாய் நாணயம்
Jump to navigation
Jump to search
இந்திய இரண்டு ரூபாய் நாணயம் (Indian 2-rupee coin) என்பது இந்திய ரூபாயின் ஓர் அலகு. இந்தியாவில் இரண்டு ரூபாய் நாணயம் 1992 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலிருந்து இரண்டு ரூபாய் நாணயம் புழக்கத்தில் உள்ளது. பழைய இராண்டு ரூபாய் நாணயம் குப்ரோ நிக்கல் என்ற உலோகத்தால் உருவாக்கப்பட்டது. புதிய இரண்டு ரூபாய் நாணயம் துருப்படிக்காத எஃகினால் உருவாக்கப்பட்டது.
சிறப்பியல்புகள்[தொகு]
பழைய இரண்டு ரூபாய்[தொகு]
- பழைய இரண்டு ரூபாய் நாணயம் 26 மில்லி மீட்டா் விட்டம் கொண்டது.
- நாணயத்தின் எடை 6 கிராம் கொண்டது.
- இந்நாணயமானது 11 பக்கங்களை அல்லது பல்முனைகளைக் கொண்டது.[1]
புதிய இரண்டு ரூபாய் நாணயம்[தொகு]
- புதிய இரண்டு ரூபாய் நாணயம் 27 மில்லி மீட்டா் விட்டம் கொண்டது.
- நாணயத்தின் எடை 5.62 கிராம் ஆகும்.
- இந்நாணயம் வட்ட வடிவமுடையது.