உள்ளடக்கத்துக்குச் செல்

ஒரு ரூபாய் (இந்திய நாணயம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு ரூபாய் இந்திய நாணயம்
One Indian rupee coin
இந்தியா
மதிப்பு1 இந்திய ரூபாய்
Mass3.76 g
விட்டம்21.93 mm (0.86 in)
தடிமன்1.45 mm (0.057 in)
முனைReeded
Compositionதுருவேறா எஃகு
Years of minting1950 (1950)–தற்போதுவரை
Mint marks♦ = மும்பை
B = மும்பை ஆவண வெளியீடு
* = ஐதராபாத்து
° = நொய்டா
எந்த குறியீடும் இல்லை = கொல்கத்தா
Obverse
Reverse

ஒரு ரூபாய் நாணயம் (One rupee coin) என்பது ஒரு இந்திய நாணயமாகும். இதன் மதிப்பு ஒரு இந்திய ரூபாய் ஆகும். இது நூறு பைசாக்கள் ஆகும். தற்போது, ஒரு ரூபாய் நாணயமானது புழக்கத்தில் உள்ள இரண்டாவது சிறிய நாணயமாகும். 1992 முதல், இந்திய ஒரு ரூபாய் நாணயங்கள் துருவேறா எஃகில் வட்ட வடிவில் தயாரிக்கப்படுகின்றன. ஒரு ரூபாய் நாணயத்தின் எடையானது 3.76 கிராம்கள் (58.0 grains), விட்டம் 21.93-மில்லிமீட்டர் (0.863 அங்), கனம் 1.45-மில்லிமீட்டர் (0.057 அங்) ஆகும். சுதந்திர இந்தியாவில், ஒரு ரூபாய் நாணயங்களானது 1950 ஆம் ஆண்டு முதல் அச்சிடப்பட்டு தற்போதுவரை புழக்கத்தில் உள்ளன.

வரலாறு

[தொகு]

சூரி பேரரசு

[தொகு]

சூர் பேரரசின் நிறுவனரான ஷேர் ஷா சூரி வட இந்தியாவை கி.பி 1540 முதல் 1545 வரை ஆட்சி செய்தார். [1] அவர் தனது ஆட்சிக் காலத்தில், 1542 ஆம் ஆண்டில் தூய வெள்ளி நாணயங்களை ரூபியா ("அழகான வடிவம்" என்று பொருள்படும்) என்ற பெயரில் வெளியிட்டார். இந்தப் பெயரானது தொடர்ந்து வந்த முகலாயப் பேரரசு, மராட்டியப் பேரரசு, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், பிரித்தானிய ஆட்சிக் காலங்களிலும் பயன்படுத்தப்பட்டது.[2][3] ரூபியா ஆனது 1835 ஆம் ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியால் தக்கவைக்கப்பட்டதுடன் 1947 வரை பிரித்தானிய அரசாலும் அடிப்படையான நாணயமாகக் பயன்படுத்தப்பட்டது.[4] ஒவ்வொரு ரூபியா நாணயமும் 178 grains (11.5 கிராம்கள்) எடையுடன் இருந்தன. ரூபியாவுக்கான சில்லறை அலகுகள் செப்புக் காசுகளாக இருந்தன. 40 செப்புக் காசுகள் ஒரு ரூபியாவாக இருந்தன. ஷேர் ஷா சூரி இந்த செப்புக் காசுகளுக்கு பைசா எனப் பெயரிட்டார்.[5]

1 ருபியா நாணயம் (ஷேர் ஷா சூரி)
முகப்புப் பக்கம்: காளியின் உரு, நான்கு கலிபாக்களின் பெயர், ஷேர் ஷா சூரியின் பெயர் மற்றும் ""குல்ஃப் அல்லா முல்" என்னும் பக்தி வாசகம். பின் பக்கம்: நாணயத்தின் பெயர் (சில நாணயங்கள் நாணயப் பெயருக்க பதிலாக "ஜஹபனா" என்ற வார்த்தை) மற்றும் தேதி.
உஜ்ஜைனி, ஆக்ரா, பூந்தூவு, சூனார், சட்வான் போன்ற இடங்கில் உள்ள பலவேறு நாணயச் சாலைளில் இருந்து நாணயங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

சென்னை மாகாணம்

[தொகு]

சென்னை மாகாணமானது கி.பி 1815 வரை ஒரு ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. ஒரு ரூபாயானது பன்னிரண்டு மதராசு பணத்துக்கு சமமாக இருந்தது.

1 ருபாய் நாணயம் (சென்னை மாகாணம்)
முன்பக்கம்: பின்பக்கம்:

கிழக்கிந்தய நிறுவனம்

[தொகு]

17 ஆம் நூற்றாண்டில், கிழக்கு இந்திய நிறுவனமானது இந்தியாவில் பிரித்தானிய பவுண்டை அறிமுகப்படுத்த விரும்பியது. ஆனால் ரூபியாவின் புகழ் காரணமாக, இந்தியாவில் பவுண்டு அறிமுகப்படுத்தப்படவில்லை. கிபி 1717 இல் தான் முகலாய பணத்தை நாணயமாக்குவதற்கு ஆங்கிலேயர் முயன்று முகலாயப் பேரரசர் பருக்சியாரிடமிருந்து அனுமதி பெற்றனர். 1835 ஆம் ஆண்டு சீரான நாணயத்துக்காக, 1835 ஆம் ஆண்டு நாணயச் சட்டம் அமலுக்கு வந்தது.[6] புதிய ஒரு ரூபாய் நாணயம் 0.917 வெள்ளியும், 11.66 கிராம்கள் (179.9 grains) எடையும், 30.55 மில்லிமீட்டர்கள் (1.203 அங்) விட்டமும் கொண்டிருந்தது. 1835 க்குப் பிறகும் 1862 க்கு முன்பும் தயாரிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயத்தின் பின்புறம் நாட்டின் பெயருக்குப் பதில் "கிழக்கு இந்தியா கம்பெனி" என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.[7] 1835 ஆம் ஆண்டு அச்சிட்ட ஒரு ரூபாய் நாணயங்களில் முதன் முதலில் அரசர் வில்லியம் IIII எனக் குறிக்கப்பட்டது.[8] 1840 க்குப் பிறகு வெளியான நாணயங்களில் அரசி விக்டோரியா (கி.பி 1840 முதல் 1901 ), எட்வர்ட் VII (கி.பி 1903 முதல் 1910 வரை ), ஜார்ஜ் V (1911 முதல் 1936 வரை), ஜார்ஜ் VI (1938 முதல் 1947 வரை) உருவங்கள் இடப்பட்டிருந்தன.[9]

பிரித்தானிய அரசு

[தொகு]

இந்தியாவானது கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் ஒரு நூற்றாண்டு இருந்த பின்னர், 1858 இல் இருந்து பிரித்தானியாவின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டது. இது 1947 இல் இந்தியா விடுதைலை அடையும்வரை நீடித்தது. [10] 1835 முதல் 1858 வரை, 1835 ஆம் ஆண்டு நாணயச் சட்டத்தின்படி சீரான ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன. 1862 ஆம் ஆண்டில், புதிய ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன, இவை ரெகலால் வெளியீடு என அழைக்கப்பட்டன, இதில் ராணி விக்டோரியாவின் முகமும் அடுத்தபக்கம் நாட்டின் பெயராக "இந்தியா" என்றும் அச்சிடப்பட்டிருந்தது. 1835 ஆம் ஆண்டிற்குப் பிகும் 1862 ஆண்டுவரையிலான காலகட்டத்தில் வெளியான ஒரு ரூபாய் நாணயங்களின் பின்புறம் நாட்டின் பெயருக்குப் பதில் "கிழக்கு இந்தியா கம்பெனி" என்ற பெயர் இருந்தது குறிப்பிடத் தக்கது. 1862 முதல் 1939 வரை, ஒரு ரூபாய் நாணயங்கள் 0.917 வெள்ளியிலும், எடை 11.66 கிராம்கள் (179.9 grains), விட்டம் 30.78 மில்லிமீட்டர்கள் (1.212 அங்), கனம் 1.9 மில்லிமீட்டர்கள் (0.075 அங்) என்றவாறு வெளியிடப்பட்டன. நாணயத்தின் மேற்புறம் அரசி விக்டோரியா (1862 முதல் 1901 வரை), எட்வர்ட் VII (1903 முதல் 1910 வரை), ஜால்ஜ் V (1911 முதல் 1936 வரை), ஜார்ஜ் VI (1938 முதல் 1947வரை) ஆகியோரின் உருவங்கள் முத்திரையாக இடப்பட்டிருந்தன. எட்வர்ட் VIII குறைந்த காலமே ஆட்சியில் இருந்ததால் (1936 சனவரி-திசம்பர்) இவர் உருவம் பதித்த நாணயங்கள் வெளியாகவில்லை.

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களின் காரணமாக, வெள்ளிக்கு பற்றாக்குறை இருந்தது. இதன் விளைவாக, 0.917 வெள்ளி ரூபாய் நாணயங்கள் 1940 ஆம் ஆண்டில் கால்பங்கு வெள்ளிக் கலவை (0.500) நாணயங்களாக மாற்றப்பட்டன. 1947 ஆம் ஆண்டில் வெள்ளி ஒரு ரூபாய் நாணயங்கள், நிக்கல் நாணயங்களாக மாற்றப்பட்டன.[2]

ஒரு ரூபாய் நாணம் 1835 முதல் 1947 வரை

[தொகு]
ஒரு ரூபாய் நாணயங்கள் (1835 முதல் 1947 வரை): கிழக்கு இந்தியா கம்பெனி மற்றும் பிரித்தானிய இந்திய அரசு
படம் தொழில்நுட்ப அளவுருக்கள் விளக்கம் அச்சிட்ட ஆண்டு அறியப்பட்ட
காசுகள்
குறிப்புகள்
முன்பக்கம் பின்பக்கம் எடை விட்டம் கனம் உலோகம் முனை முன்பக்கம் பின்பக்கம் முதல் கடைசி
11.66 கி 30.5 மிமீ 1.9 மிமீ வெள்ளி
(0.917)
Reeded நான்காம் வில்லியமின் உருவம்
அவரது பெயர்.
மதிப்பு, நாடு,
வெளியான தேதி.
1835 1840 69,472,000
[11]
11.66 கி 30.78 மிமீ 1.9 மிமீ விக்டோரியாவின் உருவம்
அவரது பெயர்.
மதிப்பு, நாடு,
வெளியான தேதி.
1840 1901 2,454,825,107
[7]
11.66 கி 30.6 மிமீ 1.9 மிமீ ஏழாம் எட்வர்வர்டின் உருவம்
அவரது பெயர்.
மதிப்பு, நாடு,
வெளியான தேதி.
1903 1910 849,622,000
[12]
11.66 கி 30.5 மிமீ 1.9 மிமீ ஐந்தாம் ஜோர்ஜ்ஜின் உருவம்
அவரது பெயர்.
மதிப்பு, நாடு,
வெளியான தேதி.
1911 1936 1,807,479,000
[13]
1911 இல் தயாரிக்கப்பட்ட நாணயங்கள் இருந்து
"பிக் ருபாய்" என்ற அடைபெயரில் குறிக்கப்பட்டது.[2]
11.66 கி 30.5 மிமீ 1.9 மிமீ ஆறாம் ஜோர்ஜ்ஜின் உருவம்
அவரது பெயர்.
மதிப்பு, நாடு,
வெளியான தேதி.
1938 1939 772,980,000
[14]
11.66 கி 30.5 மிமீ 1.9 மிமீ வெள்ளி
(0.500)
Security 1939 1945
11.8 கி 28 மிமீ 2.48 மிமீ நிக்கல் 1947 1947 160,039,000
[15]
1947 இல் மட்டும் அச்சிடப்பட்டது.

சுதந்திர இந்தியா

[தொகு]

1947 ஆகஸ்ட் 15 அன்று, இந்தியா சுதந்திரம் பெற்றது. பிரித்தானிய அரசின் நாணய அமைப்பு மற்றும் நாணயங்கள் தக்கவைத்துக் கொள்ளப்பட்டன. 1950 ஆகத்து 15, இல் இந்தியா புதிய நாணயங்களை அறிமுகப்படுத்தியது. புதிய நாணயங்கள் அறிமுகப்படுத்துதலானது (ஒரு ரூபாய் நாணயம் உட்பட) பின்வரும் காலவரிசை மற்றும் காரணங்களில் செய்யப்பட்டன;[10][16]

 • இந்திய விடுதலையையும் இறைமையை வெளிக்காட்டும் காட்டும் விதமாக புதிய வடிவமைப்பில் நாணயங்கள் வெளியிடப்பட்டன.
 • தசம முறை அறிமுகத்தால் இந்திய நாணய முறையில் ஏற்பட்ட தாக்கம்.
 • தசம முறையினால் இந்திய நாணய மதிப்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள்.

துணையலகுகள்

[தொகு]

1947 ஆம் ஆண்டு முதல் 1957 காலகட்டத்தில், இந்திய ரூபாயானது 16 அணாக்களாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஆணாவும் நான்கு இந்திய பைசாக்களாக பிரிக்கப்பட்டிருந்தது (1835 முதல் 1947 வரை, ஒவ்வொரு பைசாவும் மூன்று இந்திய தம்பிடிகளாக பிரிக்கப்பட்டது, 1947 இல் தம்பிடி செல்லாததாக்கப்படும் வரை இந்நிலை தொடர்ந்தது). கீழே உள்ள அட்டவணையில் ஒரு ரூபாயும் (1835-தற்போது வரை) அதன் துணை-அலகுகளையும் காட்டுகிறது.[3]

பிரிவு துணை அலகு துணை ஆலகு துணை அலகு துவக்கம் முடிவு குறிப்பு
இந்திய ரூபாய் இந்திய அணா
(1 ரூபாய்=16 அணா)
பைசா
(1 அணா = 4 பைசா)
இந்திய தம்பிடி
(1 பைசா = 3 தம்பிடி)
1835 1947 1947 இல் தம்பிடி செல்லாததாக்கப்பட்டது.
- 1947 1950 The Frozen Series
1950 1957 அணா தொடர்
பைசா
(1 ரூபாய் = 100 பைசாக்கள்)
- - 1957 1964 நயா பைசா தொடர். 1957 இல் அணா & தம்பிடி செல்லாதவையாக்கப்பட்டன.
1964 தற்போது 50 பைசா தவிர குறைந்த மதிப்பு நாணயங்கள் செல்லாதவையாக்கப்பட்டன.
(1835-1947): 1 இந்திய ரூபாய் = 16 அணா = 64 பைசா = 192 தம்பிடி.
(1947-1957): 1 இந்திய ரூபாய் = 16 அணா = 64 பைசா.
(1957-1964): 1 இந்திய ரூபாய் = 100 நயா பைசா.
(1964-தற்போதுவரை): 1 இந்திய ரூபாய் = 100 பைசாக்கள்.
[16]

நாணயம் ஆலைகள்

[தொகு]

மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், நொய்டா ஆகிய இடங்களில் உள்ள இந்திய காசு ஆலைகள் மூலமாக 2017 ஆம் ஆண்டுவரையான காலகட்டங்களில் ஒரு ரூபாய் நாணயங்கள் தயாரிக்கப்படுகின்றன. அனைத்து நாணயங்களும் இந்திய ரிசர்வ் வங்கியால் மட்டுமே விநியோகிக்கப்படுகின்றன.[17]

காசாலை அடையாளங்கள்

[தொகு]

1947 முதல் புதிய ஒரு ரூபாய் நாணயங்களில் பின்வரும் அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.[18][19][20]

ஆலை அடையாளம் விளக்கம் குறிப்பு
இந்திய நாணய ஆலைளில் அச்சிடப்பட்ட நாணயங்கள்
ஐதராபாத் ஐந்து-முனை நட்சத்திரம்
கல்கத்தா அடையாளக் குறியீடு-இல்லை கல்கத்தாவில் முதல் காசு ஆலை அமைக்கப்பட்டதால், அந்த ஆலையில் அச்சிடப்படும் நாணயங்களில் அடையாளம் இடுவதில்லை.[18]
மும்பை வைரம்
சிறு புள்ளி (கனம்)
B ஆண்டுக்கு கீழே B என்ற எழுத்து
M ஆண்டுக்கு கீழே M என்ற எழுத்து 1996 க்குப் பிறகான நாணயங்களில்.
நொய்டா ° சிறு புள்ளி (துளையுடன்)
வெளிநாட்டு காசாலைகளின் அடையாளக் குறியீடு
பர்மிங்காம் H ஆண்டுக்குக் கீழே H என்ற எழுத்து ஒரு ரூபாய் நாணயம் (KM# 79.1) 1985 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தின் பர்மிங்ஹாம் ஆலையில் அச்சிடப்பட்டது.[19]
கரேம்னிகா mk வட்டத்துக்கள் "mk" என்ற எழுத்து ஒரு ரூபாய் நாணயம் (KM# 92.2) 1998 முதல் 2001 வரை, ஸ்லோவாக்கியாவின் க்ரேம்னிகா ஆலையில் அச்சிடப்பட்டது.[20]
மெக்சிக்கோ Mo °M, letter "M" beneath circle ஒரு ரூபாய் நாணயம் (KM# 92.2) 1997 இல் மெக்சிக்கோ ஆலையில் அச்சிடப்பட்டது.[20]
தென்னாப்பிரிக்கா M Letter "M" in oval ஒரு ரூபாய் நாணயம் (KM# 92.2) 1998 இல் இருந்து 2000 வரை தென்னாப்பிரிக்க ஆலையில் அச்சிடப்பட்டது.[20]
ராயல் ஆலை Small dot ஒரு ரூபாய் நாணயம் (KM# 79.1) 1985 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியிலுள்ள லல்டிரிசன்ட் நகரில் ராயல் ஆலையில் அச்சிடப்பட்டது.[19]

மேற்கோள்கள்

[தொகு]
 1. Majumdar, R.C. (ed.) (2007). The Mughul Empire, Bharatiya Vidya Bhavan, வார்ப்புரு:Listed Invalid ISBN, p.83
 2. 2.0 2.1 2.2 "Facts about Indian coinage". mymoneysage.in. https://www.mymoneysage.in/blog/interesting-facts-about-coinage-and-currency-notes-in-india/. பார்த்த நாள்: 29 August 2017. 
 3. 3.0 3.1 "History of Indian coins". indianumismatics.wordpress.com. https://indianumismatics.wordpress.com/category/history-of-indian-coins/. பார்த்த நாள்: 29 August 2017. 
 4. "History of Pashtuns". barmazid.com. http://www.barmazid.com/2014/11/currency-reforms-of-sher-shah.html. பார்த்த நாள்: 29 August 2017. 
 5. "Interesting Facts about Rupee and Coins". mapsofindia.com. https://www.mapsofindia.com/my-india/india/interesting-facts-about-rupee-and-coins. பார்த்த நாள்: 29 August 2017. 
 6. "British India Coinage". Reserve Bank of India. https://www.rbi.org.in/commonman/English/Currency/Scripts/BritishIndia.aspx. பார்த்த நாள்: 30 August 2017. 
 7. 7.0 7.1 "Queen Victoria coin variants". Numista. https://en.numista.com/catalogue/index.php?mode=avance&p=1&r=&e=inde_britannique&d=&ca=3&no=&i=&v=1&m=&a=1840-1901&t=&dg=&w=&u=&f=&g=&tb=y&cat=y. பார்த்த நாள்: 30 August 2017. 
 8. "1835 one rupee". Numista. https://en.numista.com/catalogue/pieces15709.html. பார்த்த நாள்: 30 August 2017. 
 9. "British India 1 rupee coins". Numista. https://en.numista.com/catalogue/index.php?mode=avance&p=1&r=&e=inde_britannique&d=&ca=3&no=&i=&v=1+rupee&m=&a=&t=&dg=&w=&u=&f=&g=&tb=y&cat=y. பார்த்த நாள்: 30 August 2017. 
 10. 10.0 10.1 "British Raj". பிபிசி. http://www.bbc.co.uk/history/british/modern/independence1947_01.shtml. பார்த்த நாள்: 30 August 2017. 
 11. "William IIII coin variants". colnect.com. https://colnect.com/en/coins/list/variant/76944. பார்த்த நாள்: 30 August 2017. 
 12. "Edward VII coin variants". Numista. https://en.numista.com/catalogue/pieces3722.html. பார்த்த நாள்: 30 August 2017. 
 13. "George V coin variants". colnect.com. https://colnect.com/en/coins/list/variant/2083. பார்த்த நாள்: 30 August 2017. 
 14. "George VI coin variants". colnect.com. https://colnect.com/en/coins/list/variant/2085. பார்த்த நாள்: 30 August 2017. 
 15. "George VI Nickel coin". Numista. https://en.numista.com/catalogue/pieces12426.html. பார்த்த நாள்: 30 August 2017. 
 16. 16.0 16.1 "Republic India Coinage". Reserve Bank of India. https://rbi.org.in/SCRIPTs/mc_republic.aspx. பார்த்த நாள்: 28 August 2017. 
 17. "Indian coins". Reserve Bank of India. https://rbi.org.in/Scripts/ic_coins.aspx. பார்த்த நாள்: 28 August 2017. 
 18. 18.0 18.1 "Mint marks". indian-coins.com. http://www.indian-coins.com/commemorativecoins/mint-marks. பார்த்த நாள்: 28 August 2017. 
 19. 19.0 19.1 19.2 "Mint marks (abroad 1)". en.numista.com. https://en.numista.com/catalogue/pieces1628.html. பார்த்த நாள்: 28 August 2017. 
 20. 20.0 20.1 20.2 20.3 "Mint marks (abroad 2)". en.numista.com. https://en.numista.com/catalogue/pieces1609.html. பார்த்த நாள்: 28 August 2017.