மதராசு பணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1815க்கு முன்னதாக சென்னை மாகாணத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த நாணயம் பணம் (fanam) ஆகும். இது இந்திய ரூபாயுடன் புழக்கத்தில் இருந்தது. பணம் சிறு வெள்ளி நாணயமாக இருந்தது; இது 80 செப்புக் காசுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. 42 பணம் மதிப்பிற்கு தங்க பகோடா நாணயமும் இருந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு 12 பணமாக இருந்தது. 1815க்குப் பிறகு ரூபாயின் நாணயங்களே பதிப்பிக்கப்பட்டன.

மாற்றுகை பட்டியல்[தொகு]

பகோடா ரூபாய் பணங்கள் காசு
1 42 3360
1 12 960
1 80

திருவிதாங்கூர் சமத்தானத்திலும் பணம் வெளியிடப்பட்டது. இது திரிவிதாங்கூர் ரூபாய்க்கு 1/7 மதிப்புடையதாக இருந்தது. டானிசிய இந்தியாவிலும் பனோ எனப்பட்ட நாணயம் வழக்கிலிருந்தது;இதன் மதிப்பு டானிய இந்திய ரூபாயின் 1/8 ஆக இருந்தது. பிரெஞ்சு இந்தியாவில் பனோன் எனப்பட்ட நாணயம் பிரெஞ்சு இந்திய ரூபாயின் 1/8 மதிப்பாக இருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதராசு_பணம்&oldid=2188897" இலிருந்து மீள்விக்கப்பட்டது