உள்ளடக்கத்துக்குச் செல்

காளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காளி
அதிபதிகாலம், உருவாக்கம், அழிவு மற்றும் சக்தி
தேவநாகரிकाली
வகைமஹாவித்யா, தேவி, பார்வதி
இடம்மயானம்
மந்திரம்ஓம் க்ரீம் காளிகாயை நமஹ
ஆயுதம்கொடுவாள், சூலம்
துணைசிவன்
காளி இயந்திரம்

காளி என்பவர் இந்து சமயத்தின் சாக்த பிரிவினர் வணங்கும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் சக்தியின் தச மகா வித்யாக்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[1]

காளி என்ற பெயர் வடமொழியில் உள்ள 'காலா' என்ற ஆண்பெயரின் பெண்பாற்பெயர் ஆகும். காளி தேவியானவள் காலத்திற்கும், மாறுதல்களுக்கும் தேவியாகக் கருதப்படுகிறார். காளி என்பதற்குக் 'காலம்' மற்றும் 'கருப்பு' என்று பொருள். காளனின் (ஈசன்) துணைவி தான் காளி. இவரே ஆதி பராசக்தி என்றும் அழைக்கப்படுகிறாள். இவரைப் பற்றிய செய்திகள் அதர்வண வேதங்களிலும், தேவி மகாத்மியத்திலும் விரிவாக வழங்கப்பட்டுள்ளன. இவரை வழிபடும் முறைகள் பல தந்திரங்களிலும் கூறப்பட்டுள்ளது. காளி தேவி காலங்களை கட்டுபடுத்தக்கூடியவர் என்பது இந்துக்களின் நம்பிக்கை.[2] அவர் தெய்வீக பாதுகாப்பாளராகவும், மோட்சம் அல்லது விடுதலையை வழங்குபவராகவும் கருதப்படுகிறார்.

தாந்திரீகர்கள் பெரும்பாலும் காளி தேவியையும், காளி தேவியின் யந்திரத்தையும் வைத்து வழிபடுகின்றனர். வங்காளத்தில் காளி வழிபாடு அனைத்து ஊர்களிலும் உள்ளது.[3]

புராணங்களில்[தொகு]

தேவி மஹாத்மியத்தில் அசுரர்களை அழிப்பதற்காக கௌசிகி தேவியிடமிருந்து காளி தோன்றுகிறாள். சண்டன், முண்டன் ஆகிய அரக்கர்களை அழித்ததால் இவள் சாமுண்டி என்றும் அழைக்கப்படுகிறாள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kali
  2. "Kali: The Dark Mother". Archived from the original on 2016-04-30. பார்க்கப்பட்ட நாள் 2016-04-14.
  3. KALIGHAT KALI TEMPLE

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காளி&oldid=3731497" இலிருந்து மீள்விக்கப்பட்டது