லட்சுமி (இந்துக் கடவுள்)
லட்சுமி | |
---|---|
![]() ரவி வர்மாவின் லட்சுமி ஓவியம் | |
தேவநாகரி | लक्ष्मी |
சமசுகிருதம் | lakṣmī |
வகை | தேவி (முத்தேவியர்) |
இடம் | வைகுந்தம், திருப்பாற்கடல் |
மந்திரம் | ஓம் மகாலட்சுமியே நமக |
துணை | விஷ்ணு |
சகோதரன்/சகோதரி | ஜேஷ்டா தேவி (மூத்த சகோதரி), சந்திரன் |
இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
இந்து சமயம் |
---|
![]() |
![]() |
இலக்குமி (Lakshmi) அல்லது திருமகள் என்பவர் இந்து சமயத்தில் வணங்கப்படும் பெண் கடவுளாவார். இவர் செல்வத்தை வழங்கும் கடவுளாகவும் விஷ்ணுவின் துணைவியாகவும் சித்தரிக்கப்படுகிறார். விஷ்ணுவின் அவதாரங்களின் துணையாக இவரும் சீதை, உருக்மணி, பத்மாவதி போன்று அவதாரம் எடுப்பதாக கூறுவதுண்டு.
தோற்றம் மற்றும் புராணம்[தொகு]
அமுதம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த தருணத்தில் அதிலிருந்து எண்ணற்ற பொருள்களும், இறைகளும் வெளிவந்தன. அதில் ஒன்றாக லட்சுமி தேவியும் தோன்றினார்.
பெயர்கள்[தொகு]
லட்சுமி என்ற சொல்லுக்கு லட்சணம் பொருந்தியவள் என்று பொருள்.
வேறு பெயர்கள்[தொகு]
- பத்மா: தாமரையில் வசிப்பவள்
- கமலா: தாமரையில் வசிப்பவள்
- பத்மப்பிரியா: தாமரையை விரும்புகின்றவள்
- பத்மசுந்தரி: தாமரையைப் போல அழகானவள்
- விஷ்ணுப்பிரியா: திருமாளை விரும்புகின்றவள்
திருமகள், அலைமகள், ஐஸ்வர்யா, வைஷ்ணவி, நாராயணி, பார்கவி, ஜலஜா, மாதவி, சுஜாதா, ஸ்ரேயா எனப் பல்வேறுப் பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
படிமவியல்[தொகு]
லட்சுமி வடிவங்கள்[தொகு]
லட்சுமியின் வடிவங்களாக அஷ்ட லட்சுமி எனும் எட்டு வடிவங்களும், 16 வடிவங்களும் சமய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அஷ்ட லட்சுமிகள்[தொகு]
செல்வத்தின் அதிபதியாக வணங்கப்படும் லட்சுமியின் வடிவமானது ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என எட்டு வடிவங்களாக காணப்படுகிறது.
16 வடிவங்கள்[தொகு]
தனலட்சுமி, வித்யாலட்சுமி, தான்யலட்சுமி, வரலட்சுமி, சவுபாக்யலட்சுமி, சந்தானலட்சுமி, காருண்யலட்சுமி, மகாலட்சுமி, சக்திலட்சுமி, சாந்திலட்சுமி, சாயாலட்சுமி, த்ருஷ்ணாலட்சுமி, சாந்தலட்சுமி, கிருத்திலட்சுமி, விஜயலட்சுமி, ஆரோக்கிய லட்சுமி என லட்சுமிகள் 16 வகை வடிவங்களாக காணப்படுகிறது.[சான்று தேவை]
16 வடிவங்கள்கான முதல் திருக்கோயில் ஸ்ரீ ஸ்ரீ அதிர்ஷ்டலட்சுமி திருகோவில் சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், எட்டிக்குட்டைமேடில் அமைந்துள்ளது. நீங்கள் பிறந்த திதியில் லட்சுமியை வழிபாடு செய்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.....(திதி வழிபாடு சிறப்புகள்)
1. ஆதி மகாலட்சுமி - பிரதமை திதி
2. தன லட்சுமி - துவிதியை திதி
3. வீர லட்சுமி - திருதியை திதி
4. கஜலட்சுமி - சதுர்த்தி திதி
5. சந்தான லட்சுமி - பஞ்சமி திதி
6. தான்யலட்சுமி - சஷ்டி திதி
7. விஜயலட்சுமி - சப்தமி திதி
8. வித்யா லட்சுமி - அஷ்டமி திதி
9. சௌ பாக்கியலட்சுமி - நவமி திதி
10. அமீர்தலட்சுமி - தசமி திதி
11. கீர்த்தி லட்சுமி - ஏகாதசி திதி
12. சக்தி லட்சுமி - துவாதசி திதி
13. ஆரோக்கிய லட்சுமி - திரயோதசி திதி
14. ஞான லட்சுமி - சதுர்தசி திதி
15. சாம்ராஜ்ய லட்சுமி - பௌர்ணமி திதி
16. காருண்ய லட்சுமி - அமாவாசை திதி
லட்சுமி விழாக்கள்[தொகு]
- வரலட்சுமி நோன்பு
- நவராத்திரி
மந்திரங்கள்[தொகு]
- ஸ்ரீசூக்தம் [1]<ref>Sri Suktam</regf>
- அஷ்டலட்சுமி தோத்திரம்
- லலிதா சகஸ்ரநாமம்
கோயில்கள்[தொகு]
- பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில், சென்னை
- பத்மாவதி தாயார் கோயில், திருச்சானூர்
- மருதாதூர் ஸ்ரீமகாலட்சுமி கோயில் (திருவனந்தபுரம்)
- மகாலட்சுமி கோயில்
- மோகினிராஜ் லட்சுமி கோயில்
- அஷ்டலட்சுமி கோயில், ஐதராபாத்து
- மகாலட்சுமி கோயில், கோலாப்பூர்
- மகாலட்சுமி கோயில், மும்பை
- ஸ்ரீ மகாலட்சுமி கோயில் பெங்களூரு அருகே
- மகாலட்சுமி கோயில், பிரேசில்[சான்று தேவை]
- ஸ்ரீ மகாலட்சுமி கோயில், ஈச்சனேரி, கோயம்புத்தூர்
- மகாலட்சுமி கோயில், ஜான்சி
- ஸ்ரீ ஸ்ரீ அதிர்ஷ்டலட்சுமி திருகோவில், எட்டிகுட்டைமேடு,சேலம்
இவற்றையும் காண்க[தொகு]
ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
வைணவம் தொடரின் ஒரு பகுதி |
---|
![]() |