உள்ளடக்கத்துக்குச் செல்

பைரவி (இறைவி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைரவி
இறைவி பைரவி
வகைதேவி, தச மகா வித்யா
துணைபைரவன்

பைரவி என்பவர் ஒரு இந்து தெய்வமும் தச மகாவித்யாக்களுள் ஒருவரும் ஆவார். அவர் கால பைரவரின் துணைவியார். பார்வதி தேவியின் அம்சமான பைரவி இந்துக்களால் வணங்கப்படுகிறாள்.

வீர பைரவி, திரிபுரா பைரவி, கால பைரவி, சித்த பைரவி, சைதன்ய பைரவி மற்றும் ருத்ர பைரவி என்று பல பெயர்களில் பைரவி வணங்கப்படுகிறாள். சண்டன், முண்டன், துர்க்காசுரன் போன்ற அரக்கர்களை அழித்தவளாக வணங்கப்படுகிறாள்.

திரிபுரா பைரவி தோற்றம்

[தொகு]

திரிபுரத்தை எரித்த சிவபெருமானுடன் சேர்ந்து பார்வதி தேவி பைரவியாக நடனமாடியதாக நம்பப்படுகிறது. அவள் பயங்கர தோற்றத்துடன் கழுதையை வாகனமாக கொண்டவள். சிவரூபம் என்பதால் நெற்றிக்கண்ணும், நான்கு கரங்களும், புலித்தோல் ஆடையும் உடையவள்.

சொர்ண பைரவி

[தொகு]

சுவர்ண பைரவரின் அரவணைப்பில் பைரவின் மடியில் அமர்ந்திருக்கும் பைரவி சொர்ண பைரவி என்று அழைக்கப்பெறுகிறாள்.

லிங்க பைரவி

[தொகு]

சேலம், சாமிநாயக்கன்பட்டியில், "லிங்க பைரவி' சிலையை சற்குரு ஜக்கி வாசுதேவால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைரவி_(இறைவி)&oldid=4149675" இலிருந்து மீள்விக்கப்பட்டது