உள்ளடக்கத்துக்குச் செல்

சுவர்ண பைரவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவர்ண பைரவர்
சுவர்ண பைரவர்
சமசுகிருதம்Svarna Bhairava
தமிழ் எழுத்து முறைசுவர்ண பைரவர்
வகைசிவன்
இடம்கைலாயம்
மந்திரம்ஓம் நமோ பகவதே சுவர்ண பைரவாய தன தான்ய வ்ருத்திகராய சீக்ரம் சுவர்ணம் தேஹி தேஹி வாஸ்யம் குரு குரு ஸ்வாஹா
ஆயுதம்திரிசூலம், கோடாரி
துணைசுவர்ண பைரவி (பார்வதி)

சுவர்ண பைரவர் (Swarna Bhairava) என்பது சிவனின் ஒரு வடிவம் ஆகும். இவர் சைவர்களால் தங்கம் வேண்டுமென வணங்கப்படுகிரார். சுவர்ண பைரவர் என்றால் தங்கத்தின் பைரவர் என்று பொருள் ஆகும்.

சுவர்ண பைரவரின் உருவம்

[தொகு]

சுவர்ண பைரவர் தங்கம் நிறம் கொண்டவர். மேலும் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்தவராகவும், முக்கண்களை உடையவராகவும், நான்கு கரங்களைக் கொண்டவராகவும், மாணிக்க மணிகள் இழைத்த தங்கத்தால் ஆன அக்ஷய பாத்திரம் ஏந்தியவராக காணப்படுகிறார்.

இரும்பு வாள், ஓரி, திரிசூலம், சாமரம், ஈட்டி ஆகியவற்றை தரித்துள்ளார். வலது கையில் அபய முத்திரையை காட்டியபடியும், இடது கையில் பார்வதியின் ஒரு உருவமான சுவர்ண பைரவியை அணைத்தபடியும் உள்ளார்.

சுவர்ண பைரவரின் இடது தொடையில் அமர்ந்து இருப்பவர் சுவர்ண பைரவி ஆவார் மற்றும் அவர் இதே உருவத்தில் தான் இருப்பார்.[1]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.maalaimalar.com/2012/11/30134246/swarna-bhairava-worship.html[தொடர்பிழந்த இணைப்பு] செல்வத்தை அள்ளித்தரும் சுவர்ண பைரவர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவர்ண_பைரவர்&oldid=4187452" இலிருந்து மீள்விக்கப்பட்டது