ஸ்ரீசூக்தம்

ஸ்ரீசூக்தம் அல்லது சிறீசூக்தம் (ஆங்கிலம்: Śrī Sūkta; சமக்கிருதம்: श्रीसूक्तम्; Śrīsūktam) என்பது இந்து தெய்வமான இலக்குமியைப் போற்றும் மிகப்பழமையான சமசுகிருத பக்தி பாடல்களாகும்.[1] தேவியை வழிபாடு செய்வதற்காக சமசுகிருத மொழி இலக்கணப்படி இப்பாடல் பாராயணம் செய்யப்படுகிறது. ரிக்வேதத்தின் பிற்சேர்க்கைகளாகக் கருதப்படும் ரிக்வேத கிலானிகளில் காணப்படும் இப்பாடல் பௌத்த காலத்திற்கு முந்தையவை ஆகும்.[2]
உரை
[தொகு]கடவுள் ஸ்ரீ பலமுறை பல பழைய வேத பாடல்களில் தோன்றியுள்ளார். இவர் மங்களகரமான அரச குணங்களின் உருவகமாக கருதப்படுகிறார். [3] இப்பாடல் ஸ்ரீ மற்றும் இலட்சுமிக்கு இடையிலான ஒற்றுமை குறிக்கும் முதல் உரையாக இருக்கலாம். அக்னியுடனும் தொடர்புடையது. [4] பிந்தைய இதிகாச காலத்திலிருந்து (கி.பி 400), ஸ்ரீ-இலட்சுமியை விஷ்ணுவின் மனைவியாகவோ அல்லது துணைவியாகவோ தொடர்புபடுத்துகிறனர். [5]
ஸ்ரீயை மகிமை வாய்ந்தவர், அலங்காரமானவர், அரசவைத் தெய்வம், தங்கம் போன்ற பளபளப்பானவர், நெருப்பு, சந்திரன், சூரியன் போன்ற பிரகாசமுள்ளவர் என்று விவரிக்கிறது. தங்கம், கால்நடைகள், குதிரைகள், உணவு வடிவில் புகழ், வள்ளன்மை மிகுதியை வழங்குபவள் என்று அழைக்கப்படுகிறாள்; தேவை, பசி, தாகம் வறுமையுடன் தொடர்புடைய அலட்சுமியை வெளியேற்றும்படி மன்றாடப்படுகிறாள்.[6]
ஒப்பித்தல்
[தொகு]இது பஞ்ச-சூக்தங்களில் ஒன்றாகும். திருக்கோயில்களில் திருமஞ்சனத்தின் போது ஓதப்படும்.
தரவுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- Kambhampati, Parvathi Kumar (2012), Sri Suktam – The Nature and Characteristics of the World Mother, Dhanishta Publications
- Kinsley, David R. (1999), Hindu Goddesses: Vision of the Divine Feminine in the Hindu Religious, Motilal Banarsidass Publ., ISBN 81-208-0394-9
- Coburn, Thomas B. (1988), Devi Mahatmya: The Crystallization of the Goddess Tradition, Motilal Banarsidass Publ., ISBN 81-208-0557-7
- Scheftelowitz, Isidor (1906), Die Apokryphen des Rgveda, Breslau
- Scheftelowitz, Isidor (1921), "Sri Sukta", Zeitschrift der Deutschen Morgenländischen Gesellschaft, 75, Deutsche Morgenländische Gesellschaft: 37–50
- Singh, Om Prakash (1983), Iconography of Gaja-Lakshmī, Bharati Prakashan
வெளியிணைப்புகள்
[தொகு]- சமஸ்கிருத மூலமும் ஆங்கில மொழிபெயர்ப்பும்
- "Prapatti.com – English transliteration of Sri sukta" (PDF). (38.1 KB)