புருசோத்தமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலக்குமி-பூமாதேவியுடன் காட்சியளிக்கும்விஷ்ணு பகவான்

புருசோத்தமன் (சமசுகிருதம்:पुरुषोत्तम), இந்து தொன்மவியலில் காக்கும் கடவுளான விஷ்ணுவின் அடைமொழி உத்தம புருஷன் என்பதாகும். வைஷ்ணவர்களின் கூற்றுப்படி, விஷ்ணு பகவான் மோட்சத்தின் ஆதாரம், பாவங்களை விடுவிப்பவர், அறிவின் ஊற்று மற்றும் அனைத்து உயிரினங்களிலும் உயர்ந்தவர்.[1]

சொற்பிறப்பியல்[தொகு]

புருசோத்தமன் என்ற அடைமொழியின் பொருள் "உயர்ந்த புருஷன்", "உயர்ந்த உயிர்", உத்தம புருஷன் அல்லது "உயர்ந்த கடவுள்" என்பதாகும்.[2]

இதற்கு மாற்றாக, "உயர்ந்த புருஷராக இருப்பவர், சரம் (அழியக்கூடிய - அதாவது பிரகிருதி) மற்றும் அட்சரத்திற்கும் (அழியாமைக்கும்) அப்பாற்பட்டவர்" (என்றும் அழியாத பிரம்மம்)".

இந்து சமய இலக்கியங்களில்[தொகு]

புருஷோத்தமன் என்பது விஷ்ணுவின் பெயர்களில் ஒன்றாகும். மேலும் மகாபாரதத்தில் பீஷ்ம பருவம்|பீஷ்வ பருவத்தில்]] வரும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவின் 1000 பெயர்களில் 24வது பெயராக புருசோத்தமன் பெயர் வருகிறது. விஷ்ணுவின் அவதாரங்களான இராமரை மரியாதை புருஷோத்தமன் என்றும்,கிருஷ்ணரை லீலா புருஷோத்தமன் என்றும் அழைக்கப்படுகிறார்.

பகவத் கீதை[தொகு]

பகவத் கீதை தனது வசனங்களில் கிருஷ்ணரை புருசோத்தமன் என அடைமொழி இட்டு அழைக்கிறது:

ஸ்வயம் ஏவாத்மநாத்மானம் வேத்த த்வம் புருஷோத்தம் ।

பூத-பவன் பூதேஷ் தேவ-தேவ ஜகத்-பதே ॥ 15 ॥

ஸ்வயம் ஏவாத்மனாத்மானம் வேத்த த்வம் புருஷோத்தம | பூத-பாவன பூதேஷ தேவ-தேவ ஜகத்-பதே || 15 ||

உயிரினங்களைப் படைத்தவனே, உயிரினங்களின் ஆட்சியாளனே, கடவுள்களின் கடவுளே, பிரபஞ்சத்தின் அதிபதியே, உத்தம புருஷனே, நீ என்னவாக இருக்கிறாய் என்பதை நீயே அறிவாய்.— பகவத் கீதை அத்தியாயம் 10 - சுலோகம் 15[3]

ஹரிவம்சம்[தொகு]

ஹரிவம்சத்தில், திருப்பாற்கடல் கடைதல் நிகழ்வுகளுக்கு முன், விஷ்ணுவை புருசோத்தமன் எனும் அடைமொழியால் பிரம்மா குறிப்பிடுகிறார்:[4]

  • பிரம்மா கூறினார்:-ஓ மகத்தான சக்தி வாய்ந்த தேவர்களே, நீங்கள் இங்கு வந்ததன் பொருளை நான் அறிந்து கொண்டேன். முன்னணி சூரர்களே, உங்கள் நோக்கம் நிறைவேறும். தானவர்களில் முதன்மையான பலியை வெல்லும் பிரபஞ்சத்தின் அதிபதி, தைத்தியர்களை வென்றவர் மட்டுமல்ல, மூன்று உலகங்களையும் வென்றவர் மற்றும் தேவர்களால் வணங்கப்படுபவர். பிரபஞ்சத்தின் இந்த உலகங்களை ஒழுங்குபடுத்துபவர். மக்கள் இவரை எல்லாம் அறிந்தவர் என்றும் ஹேமகர்பா என்றும் அழைக்கின்றனர். உலகத்தையும், அசுர-தலைவனான மகாபலியையும் அழிக்கும் பெருமான், எல்லாவற்றுக்கும் பிறப்பிடமாகவும், நம் முதல் பிறவியாகவும் இருக்கிறார். அந்த யோகி, பிரபஞ்சத்தின் ஆன்மா சிந்தனைக்கு எட்டாத உயரத்தில் உள்ளது. தேவர்களுக்குக் கூட அந்தப் பெரியவரைத் தெரியாது: ஆனால் அந்த புருசோத்தமன் தேவர்களையும், நம்மையும், பிரபஞ்சம் முழுவதையும் அறிவான். அவர் அருளால் நாங்கள் நலமாக இருக்கிறோம்

கருட புராணம்[தொகு]

கருட புராணத்தில் விஷ்ணு பஞ்சாரத்தில் புருசோத்தமன் எனும் அடைமொழி இடம்பெற்றுள்ளது:[4]

  • புருசோத்தமா, உமக்கு வணக்கம். உனது உழவுப் பங்கை எடுத்துக் கொண்டு கிழக்கில் என்னைக் காப்பாயாக. விஷ்ணுவே, நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன். தாமரைக் கண்களை உடையவனே, உனது கதாயுதத்தை எடுத்துக்கொண்ட ஷடனா, வடக்கே என்னைக் காத்தருளும். பிரபஞ்சத்தின் அதிபதியே, நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்.

மேற்கோள்கள்[தொகு]

  1. www.wisdomlib.org (2019-10-31). "The Greatness of Puruṣottama [Chapter 18]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-10.
  2. www.wisdomlib.org (2012-06-29). "Purushottama, Puruṣottama, Purusha-uttama: 24 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-10.
  3. பகவத் கீதை அத்தியாயம் 10 - சுலோகம் 15
  4. www.wisdomlib.org (2020-11-14). "Brahma Instructs the Devas to Go to Vishnu [Chapter 43]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-10.

ஊசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புருசோத்தமன்&oldid=3676171" இலிருந்து மீள்விக்கப்பட்டது