ஹரி (விஷ்ணு)
Appearance
ஹரி (Hari) தேவநாகரி: हरि), இந்து சமயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவர். விஷ்ணு சஹஸ்ரநாம தோத்திரப் பாடலில் விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களில் 650-வது பெயராக ஹரி உள்ளது.
சமசுகிருதம் மற்றும் பிராகிருத இலக்கியங்களிலும், இந்து சமயம், பௌத்தம், சமணம், மற்றும் சீக்கிய சமயங்களிலும் ஹரி எனும் பெயர் அதிகமாக பயன்பாட்டில் உள்ளது.
சொற்பிறப்பு
[தொகு]ஹரி என்பதற்கு பச்சை அல்லது மஞ்சள் நிறத்தை குறிக்க ஆதி இந்தோ ஐரோப்பிய மக்கள் பயன்படுத்திய மூலச் சொல்லிருந்து பிறந்த சமசுகிருத மொழிச் சொல்லாகும்.
ஹரியின் வேறு பெயர்கள்
[தொகு]இந்து சமய புனித நூல்களான பாகவத புராணம், மகாபாரதம், பகவத் கீதை மற்றும் புராணங்களிலிருந்து ஹரியின் வேறு பெயர்கள் அறியப்படுகிறது.
இந்து சமயத்திலும், தொன்மத்திலும்
[தொகு]- இதிகாச புராணங்களில் ஹரி வம்சத்தில் ஹரியின் வழித்தோண்றல்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
- சிங்கம், குரங்கு, குதிரை போன்ற பழுப்பு நிற விலங்குகளை ஹரி என குறிக்கப்படுகிறது.
- புராணங்களில் நான்காம் கருப்பு மனுவின் காலத்திய கடவுள் என ஹரி குறிக்கப்பட்டுள்ளார்.
- விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு விளக்க உரை எழுதிய ஆதிசங்கரர், ஹர் என்ற வினைச் சொல்லிற்கு, விஷ்ணுவின் திருவடியை பற்றுதல், அடைதல் என்ற பொருளில் குறிப்பிட்டுள்ளார்.
- வைணவ மரபில் ஹரி என்பதற்கு அனைத்து பாவங்களிலிருந்து விடுதலை அளிப்பவர் என விளக்கப்பட்டுள்ளது. [1] ஹரி எனும் விஷ்ணு பிறப்பு, இறப்பு எனும் வாழ்க்கைத் துயரத்திலிருந்தும், பிறவிச்சுழற்சியிலிருந்தும் விடுதலை அளிப்பவர் ஆவார். [2]
- கௌடிய வைணவ மரபில் ஹரி எனும் பெயர் கிருட்டிணன் மற்றும் விஷ்ணுவைக் குறிக்கும்.
- சீக்கிய சமயத்தில் ஹரி எனப்படும் ஹர் எனும் சொல் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. சீக்கிய குருமார்களில் ஆறு, ஏழு மற்றும் எட்டாவது குருமார்களின் பெயர்கள் ஹரி கோவிந்த், ஹரி ராய், ஹரி கிருஷ்ண சாகிப் என உள்ளது. சீக்கியர்களின் முதன்மை கோயிலுக்கு, ஹரிமந்திர் சாகிப் எனப்பெயராகும்.
- சீக்கியர்கள் தங்களின் 11-வது குருவாக போற்றும் குரு கிரந்த் சாகிப் நூலில் ஹரி எனும் சொல் 8500 முறை குறிக்கப்பட்டுள்ளது.