பாஞ்சராத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தென்கலை திருமண்காப்பு

பாஞ்சராத்திரம் வைணவ சமயத்தின் இரண்டு பிரிவுகளின் ஒன்று. ஐந்து இரவுகளில் திருமாலால் அருளப்பட்டதாகக் கருதப்படுவது பாஞ்சராத்திர நெறியாகும். இதனை வேதத்துக்கு இணையாக் கருதினார் இராமானுசர். [1].[2].

வைகானச ஆகம விதிகள் வைகானச பிராமணர்களையே சடங்குகளில் அனுமதிக்கின்றன. பாஞ்சராத்திர ஆகம விதிகள் தீட்சை பெற்றுக்கொண்ட பிராமணர்கள் எல்லோரையும் கோயில் பூசைகளில் அனுமதிக்கின்றன. திருவிலச்சினை முதலிய பஞ்ச சம்ஸ்காரங்கள் பெற்றுக்கொண்ட பிராமணர் அல்லாதவரையும் சில காரியங்களில் அவை ஏற்கின்றன. [3]

கிராமப்புறத் திருமால் கோயில்களில் முத்திரை சாத்தாத ஸ்ரீவைஷ்ண சமுகத்தை சேர்ந்தவர்கள் இன்றும் பூசைகள்செய்து வருகின்றனர்.

பாஞ்சராத்திர முறையில் மந்திரங்களுடன், தந்திரங்களும் முத்திரைகளும், கிரியை (சடங்கு)களில் முக்கிய இடம் பெறுகின்றன. வழிபாட்டின்போது தூப தீபங்கள் காட்டுவதிலும் வரிசைமுறை வேறுபடுகின்றது.

திவ்வியப் பிரபந்தத்தில் வைணவ தீட்சையான திருவிலச்சினை வலியுறுத்தப்படுகிறது. நின் கோயிற் பொறியாலே ஒற்றுண்டு என்று பெரியாழ்வார் பாடக் காணலாம். ஆதலால் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்கள் பாஞ்சராத்திர நெறியினை ஏற்றுக்கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஞ்சராத்திரம்&oldid=2089909" இருந்து மீள்விக்கப்பட்டது