தோமால சேவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


தோமால சேவை (ஆங்கிலம்:Thomala Seva) என்பது வைணவத்திருக்கோயில்களில் மூலவரான நாராயணனுக்கு நடத்தப்படும் பலவித உபசாரங்களில் ஓன்றாகும். [1]பொதுவாக வைணவத் திருக்கோயில்களில் மூலவருக்கு நடத்தப்படும் ஒவ்வொரு உபசாரமும் சேவைகள் என்றே அழைக்கப்படும். உதாரணமாக, திருப்பள்ளியெழுச்சி பாடி துயிலெழுப்புவதை "சுப்ரபாத சேவை" என்றும், ஊஞ்சலில் ஆட்டுவிப்பதை "ஊஞ்சல் சேவை" என்றும், கருடவாகனத்தில் எழுந்தருளுவதை "கருட சேவை" என்றும் அழைப்பதைக் கூறலாம். தினமும் திருமஞ்சனம் (நீராட்டல் என்பதின் வைணவ தமிழ்ச்சொல்) ஆனவுடன் பெரிய பூமாலை சாற்றப்படும் வைபவத்தையே இச்சேவை குறிப்பிடுகின்றது. ஆளுயர பூமாலையை தொடுத்து திருமுடி (கிரீடம்) முதல் திருவடி வரை தோளையொட்டியவாறு சாற்றுவதையே தோமால சேவை என அழைக்கப்பட்டுவருகின்றது. தோள்மாலை (தோடிட்டமாலை என்றும் கூறுவர்) என்பதே மருவி தெலுங்கில் தோமாலா என்றானது.

புகழ்பெற்ற தோமால சேவைகள்[தொகு]

திருமலையில் உறையும் திருவேங்கடவனுக்கு சாற்றப்படும் தோமால சேவை மிகப்புகழ்பெற்றது. இதற்கு ஆறுமாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து அடியவர்கள் இச்சேவையினை காண்பதற்காக காத்திருப்பர்.[சான்று தேவை] இவறைத் தவிர திருப்பதியில் இடம்பெறும் தோமால சேவை, திருவரங்கம் அரங்கநாதன் கோவிலில் இடம்பெறும் தோமால சேவையும் புகழ்பெற்றவையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Thomala Seva
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோமால_சேவை&oldid=2761269" இருந்து மீள்விக்கப்பட்டது