திருப்பதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருப்பதி
திருப்பதி
இருப்பிடம்: திருப்பதி
, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 13°39′N 79°25′E / 13.65°N 79.42°E / 13.65; 79.42ஆள்கூறுகள்: 13°39′N 79°25′E / 13.65°N 79.42°E / 13.65; 79.42
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் திருப்பதி
ஆளுநர் பிசுவபூசண் அரிச்சந்தன்[1]
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி[2]
எம்.எல்.ஏ சி.பாஸ்கர்ரெட்டி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

1,400 சதுர kiloமீட்டர்கள் (540 sq mi)

161 மீட்டர்கள் (528 ft)

திருப்பதி இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவத் தலமாகும். திருப்பதி மாநகராட்சி இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இது ஒன்று. இங்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது. இந்த பகுதியில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுள்ள திருமலையும், அருள்மிகு பத்மாவதி தாயார் கோயில் கொண்டுள்ள திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவில் திருப்பதி என்றே பக்தர்களால் போற்றப்படுகிறது. திருமலை மேல்திருப்பதி என்றும் மற்றது கீழ் திருப்பதியெனவும் குறிப்பிடப்படுகிறது.

சொல் இலக்கணம்[தொகு]

திருப்பதி என்ற சொல் திரு+பதி என்று பிரிக்கப்படுகிறது. வடமொழி சொல்லான பதி என்பதற்கு கணவன் (தலைவன்) என்று பொருளுண்டு, தமிழ் சொல்லான திரு என்பதற்கு புண்ணியம், தெய்வத்தன்மைவாய்ந்த, மேன்மைமிக்க என பல பொருள்கள் உண்டு. திருப்படி என்பதே மருவி திருப்பதி ஆகியுள்ளதாகவும் கருதப்படுகிறது. திருமலை ஏழு மலைகள் என்றும் அழைக்கப்படுகிறது. (இது தெலுங்கில் ஏடு-கொண்டலு என்றும் தமிழில் ஏழுமலை என்றும் அழைக்கப்படுகிறது. ஏழு சிகரங்களைக் கொண்ட மலைகளில் திருமலை உள்ளது. இது ஆதிசேசனின் ஏழு தலைகளை குறித்து வருவதால் இந்த மலைக்கு சேசாசலம் என்று பெயர் உள்ளது. சேசாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ரிசபத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழும் இந்த மலை சிகரங்களின் பெயர்களாகும். இங்கு கிடைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் பெரும்பாலும் தமிழ் கல்வெட்டுகளாகும் இது பண்டைய தமிழகத்தின் தொண்டை மண்டலத்தின் பகுதியாகும்

காலநிலை[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், Tirupathi, India
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 29.9
(85.8)
32.8
(91)
36.7
(98.1)
39.3
(102.7)
40.3
(104.5)
37.8
(100)
35.7
(96.3)
34.8
(94.6)
34.8
(94.6)
32.7
(90.9)
30.1
(86.2)
28.9
(84)
34.48
(94.07)
தாழ் சராசரி °C (°F) 18.7
(65.7)
20.1
(68.2)
22.6
(72.7)
26.2
(79.2)
27.9
(82.2)
27.2
(81)
25.9
(78.6)
25.5
(77.9)
25.1
(77.2)
23.5
(74.3)
21.7
(71.1)
19.9
(67.8)
23.69
(74.65)
பொழிவு mm (inches) 22.0
(0.866)
19.7
(0.776)
2.9
(0.114)
12.9
(0.508)
45.7
(1.799)
69.7
(2.744)
113.0
(4.449)
118.6
(4.669)
119.1
(4.689)
157.5
(6.201)
218.8
(8.614)
130.5
(5.138)
1,030.4
(40.567)
ஆதாரம்: Indian Meteorological Department[3]

வரலாறு[தொகு]

உலகிலேயே பழைமையும், பெருமையும் வாய்ந்த பாறை மலைகளில் இரண்டாம் இடம் வகிக்கும் மலைகள் இந்த திருமலை மலைகள் தான். திருப்பதியின் பழைய பெயரான திருவேங்கடத்தை பொ.ஊ.மு. 400-100 இல் எழுதப்பட்ட தமிழ் சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரமும், சாத்தனாரின் மணிமேகலையும் குறிப்பிட்டுள்ளன. இந்த மலைகளை பண்டைய தமிழகத்தின் வடபுறத்து எல்லையாக சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வெங்கடேஸ்வரா ஆலயம் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும் இது பல பேரரசுகளால் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. பல்லவர், சோழர், பாண்டியர், சாளுக்கியர், விசயநகர மன்னர்களால், இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. இங்கே உள்ள கல்வெட்டுகள் பெரும்பாலும் தமிழ்க் கல்வெட்டுகளாகும்.[4]

விசய நகர பேரரசின் மன்னரான ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், இந்த கோவிலுக்காக தங்கமும் மற்ற விலை உயர்ந்த ஆபரணங்களையும் நன்கொடையாக தந்துள்ளார். இந்தக் கோவிலுடன் ஒட்டி நிறைய கோவில்களையும் கட்டியுள்ளார். திருப்பதியில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் தென் மேற்கு புறம் தள்ளி இருக்கும் சந்திரகிரி என்னும் கிராமம் விஜயநகர சக்கரவர்த்தியின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது.

வைணவம் பெரிதாக பின்பற்றப்பட்ட பொ.ஊ. ஐந்தாம் நூற்றாண்டில் திருப்பதி, ஆழ்வார்களால்(வைணவ முனிவர்கள்) கலியுக வைகுண்டம் என்று போற்றப்பட்டது. பக்தி இயக்கத்தைச் சேர்ந்த ஆழ்வார்கள் ஆன்மீக பூமியில், வெங்கடேஸ்வரர் மீது அவர்கள் இயற்றிய பாடல்களுக்காகவும், இலக்கியங்களுக்காகவும் பெயர் போனவர்கள். வைணவ சம்பிரதாயத்தில்திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக விளங்குவது திருப்பதி ஆலயம். பதினோராம் நூற்றாண்டில் இந்தக் கோவிலின் ஆச்சார அனுஷ்டானங்கள் இராமானுஜ ஆச்சார்யரால் முறையாக்கப்பட்டன.

மதுரை மீனாட்சியம்மன் கோவில், அரங்கநாதசுவாமி கோவில் ஆகியவை இசுலாமியர்களால் சூறையாடப்பட்டபோது தென்னிந்தியாவில் தப்பி இருந்த இடம் திருப்பதி மட்டும்தான். இந்த இசுலாமிய பிரவேசங்களின் பொழுது திருவரங்கத்தில் இருந்த திருவரங்கர் திரு உருவச் சிலை திருப்பதிக்கு கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த நிகழ்வை குறிப்பதற்காக கட்டப்பட்ட ரங்கநாத மண்டபம் இன்றும் திருப்பதியில் இருக்கிறது. இசுலாமியர்களிடமிருந்து திருமலை கோயில் தப்பியதற்கு சுவாரசியமான வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது. அந்த முகலாயப்படையினர் மலையின்மேல் என்ன கோயில் இருக்கிறது என்று கேட்டபோது அவர்களின் நோக்கத்தையும் பழக்க வழக்கங்களையும் நன்கறிந்த உள்ளூர் மக்கள் பன்றிக் கடவுளின் கோயில் என்றனராம். மக்கள் குறிப்பிட்டது வராஹப் பெருமாளின் திருக்கோயிலை. இந்தப் பெருமாளை தரிசித்தப்பின்னர்தான் ஏழுமலையானை தரிசிக்கவேண்டும் என்கிற சம்பிரதாயம் இருக்கிறது. பன்றிகளின் மீது முகலாயர்களுக்கு இருக்கும் வெறுப்பால் அவர்கள் திருமலைக்கு செல்லும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டனர் என்று சொல்லப்படுகிறது.

பிரம்மோற்சவம்[தொகு]

திருப்பதி பிரம்மோற்சவம் புகழ் பெற்ற கோவில் திருவிழாவாகும். பங்குனி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி கணக்கில் கொண்டு இந்த திருவிழா நடத்தப்படுகிறது. சில தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பும் செய்கின்றன. திருமலைக் கோவிலில் தினமும் அதிகாலையில் 'ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம்' (திருப்பள்ளி எழுச்சி) ஒலிபரப்பினாலும், மார்கழி மாதத்தில் மட்டும் தமிழ் திருப்பல்லாண்டு மற்றும் திருப்பாவை பாசுரங்களை ஒலிபரப்புகிறார்கள்.

திருப்பதி லட்டு[தொகு]

இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் புகழ் பெற்றதாகும். இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தினரைத் தவிர வேறெவரும் தயாரித்து விற்கக்கூடாது என்பதற்கான புவிசார் குறியீடு காப்புரிமையை பெற்றதாகும். இந்த லட்டுக்கள் சர்க்கரை, கடலைப்பருப்பு, நெய், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஏலக்காய் போன்ற பொருட்களால் பிரத்தியேகமான ஒரு முறையில் தயாரிக்கப்படுகிறது.[5] 1931 ஆம் ஆண்டு திருப்பதியில் லட்டுப் பிரசாதத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் கல்யாணம் ஐயங்கார் எனும் பெரியவர்.[6]

பயணம்[தொகு]

சாலை வழி[தொகு]

தென்னிந்தியா முழுவதும் செல்ல மற்றும் அருகில் இருக்கும் ஊர்களுக்கும் பெரிய நகரங்களுக்கும் செல்ல திருப்பதியில் பேருந்து வசதி இருக்கின்றது. தனியார் நிறுவனத்தினர் சென்னை,மதுரை,கோயம்புத்தூர், திருப்பூர் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களுக்கும் பேருந்துகளை விடுகின்றனர்.

தொடருந்து வழி[தொகு]

திருப்பதியின் தொடர்வண்டிநிலையம் எல்லா வசதிகளும் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. சென்னை மும்பை ரயில் வழியின் மத்தியில் இருக்கும் ரேணிகுண்டா சந்திப்பு திருப்பதி நகரத்தில் இருந்து வெறும் 20 நிமிட தொலைவில் தான் உள்ளது. திருப்பதியில் இருந்து நாட்டின் பல பகுதிகளுக்கு புறப்பட்டு செல்லும் ரயில்கள் பல உள்ளன. திருப்பதியில் இருந்து நாட்டின் பல இடங்களுக்கும் செல்ல வசதிகள் உள்ளன.

வான் வழி[தொகு]

திருப்பதி விமான நிலையம் உள்நாட்டு விமான நிலையமாகும். இங்கிருந்து ஹைதராபாத், விசாகப்பட்டினம், தில்லி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நேரடி விமானங்கள் உள்ளன. நகரத்தின் மையத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது இந்த விமான நிலையம். மிக அருகாமையில் அமைந்திருக்கும் பன்னாட்டு விமான நிலையம் சென்னையில் உள்ளது. இது திருப்பதியில் இருந்து சுமார் 130 கி.மீ. தொலைவில் உள்ளது. திருப்பதி விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றுவதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன

ஸ்ரீ வெங்கடேசுவரா உயிரியல் பூங்கா[தொகு]

ஸ்ரீ வெங்கடேசுவரா உயிரியல் பூங்கா ஆந்திரா பிரதேசத்தின் இரண்டாவது உயிரியல் பூங்காவாகும். இதில் ஏராளமான விலங்குகள் செடிகொடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவில் கிட்டத்தட்ட 10 இலிருந்து 15 வரை புலிகள் உள்ளன.

திருவிழாக்கள்[தொகு]

திருப்பதியில் தங்க தகடுகளால் வேயப்பட்ட மேற்கூரைகள்.

வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி மாத பிரம்மோற்சவம், மார்கழி உற்சவம் மிகவும் முக்கியமாக விழாவாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் இலட்சக்கணக்கில் பக்தர்கள் குவிகின்றனர். ரத சப்தமி (மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா இங்கு நடைபெறுகிறது. இந்த சமயத்தில் வெங்கடேஸ்வரரின் திருஉருவச் சிலை வீதி வீதியாக தேரில் எடுத்து செல்லப் படுகிறது.

இங்கு கீழ்த் திருப்பதியில் மட்டும் கங்கம்மா ஜாத்ரா என்னும் திருநாள் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. கங்கம்மாவுக்கு பொங்கல் மற்றும் விலங்கு பலிகளை பக்தர்கள் படைக்கின்றனர். கங்கம்மா, கோவிந்தக் கடவுளின் தமக்கையாக கருதப்படுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. "Climatological Data of Important Cities" (PDF). Indian Meteorological Department. 2015-10-17 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-03-27 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. அதிசயங்களை நிகழ்த்தும் ஏழுமலையான்! மார்ச் 12,2014
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2011-04-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  6. குமுதம் ஜோதிடம்; 5.10.2012; "அனைத்து உயிர்களும் ஆண்டவனின் குழந்தைகளே..!" கட்டுரை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பதி&oldid=3492820" இருந்து மீள்விக்கப்பட்டது