உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பதியிலுள்ள இந்து கோவில்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பதியிலுள்ள இந்து கோவில்களின் பட்டியல் (List of Hindu temples in Tirupati) திருப்பதி இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். ஒரு மாநகராட்சியான இது திருப்பதி (நகர்ப்புற) மண்டலத்தின் தலைமையகமாகவும், திருப்பதி வருவாய் கோட்டத்தின் தலைமையகமாகவும் உள்ளது.

திருப்பதியில் புகழ்பெற்ற வைணவ ஆலயமான வெங்கடசலபதி கோவிலுடன் மேலும் பல பழமையான கோவில்களும் உள்ளன.

பட்டியல்

[தொகு]
கோயிலின் பெயர்கள் தெய்வம் Location படம் காலம் விளக்கம்
வெங்கடாசலபதி கோயில் வெங்கடாசலபதி திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோயில் உலகின் மிகப் பிரபலமானதும், புகழ்பெற்ற வைணவ ஆலயங்களில் ஒன்றாகும்.[1] . இக்கோயில் சேசாசலம் மலைத் தொடரின் திருமலை மலையில் 853 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
பத்மாவதி கோயில் பத்மாவதி திருச்சானூர் திருச்சானூரிலுள்ள பத்மாவதி கோயில், வெங்கடாசலபதியின் மனைவி அலமேலு (பத்மாவதி) அல்லது அலமேலுமங்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். திருப்பதியின் புறநகர் பகுதியான திருச்சானூர் 5 கி.மீ தொலைவில் உள்ளது. குளத்துக்கு எதிரே சூரிய நாராயணனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலும் உள்ளது.
கோவிந்தராஜ சுவாமி கோயில் கோவிந்தராஜ சுவாமி திருப்பதி பொ.ச 1130 கோவிந்தராஜா சுவாமி கோயில் என்பது வெங்கடாசலபதியி சகோதரர் என்று நம்பப்படும் கோவிந்தராஜ சுவாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இக்கோயில் கி.பி.1130ல் வைணவரான இராமனுசரால் நிறுவப்பட்டது. கோவிந்தராஜ சுவாமிக்கு முன், பார்த்தசாரதி சுவாமியே இக்கோயிலின் மூலவராக இருந்தார். நகரின் மையப்பகுதியில் கோயில் அமைந்திருந்தது. இது 14-15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 11 கலசங்களுடன் உயரமான ஏழு அடுக்கு வெளிப்புற கோபுரத்தைக் கொண்டுள்ளது. இக்கோயில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கோவில்களில் ஒன்றாகும்.[2]
கபில தீர்த்தம் கபிலேசுவரர் காமாட்சி திருப்பதி அறியப்படவில்லை கபில முனிவரின் பெயரால் திருப்பதியிலுள்ள புனித அருவியே கபில தீர்த்தமாகுகும். இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கபிலேசுவரர் கோயிலைக் கொண்டுள்ளது. இங்கு தெய்வலும் அருவியும் மிகவும் பக்திக்குரியதாக கருதப்படுகிறது. 10ஆம் நூற்றாண்டின் முதலாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டுகளில் கோயில் தெய்வத்தின் பெருமை காணப்படுகிறது.
கோதண்டராம கோயில் இராமர், சீதை, இலட்சுமணன் திருப்பதி 10ஆம் நூற்றாண்டு 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலான இதில், சீதை, இலட்சுமணனுடன், விஷ்ணுவின் அவதாரமான இராமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.வராக புராணம்|வராக புராணத்தின்]] படி, திரேதா யுகத்தின் போது, இராமன் இலங்கையிலிருந்து திரும்பியவுடன் சீதை, இலட்சுமணருடன் இங்கு வசித்தார்.[3]
தாத்தையகுண்ட கங்கம்மாள் கோவில் கங்கம்மா திருப்பதி தத்தையகுண்ட கங்கம்மாள் கோயில் திருப்பதியில் உள்ள கிராமதேவதை கங்கம்மாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழமையான கோயிலாகும். ஈது. நகரின் மையத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடைபெறும் திருப்பதி கங்கா யாத்திரை இக்கோயிலில் கொண்டாடப்படும் மிகவும் மங்கலகரமான நிகழ்வாகும். கோவில் செயல்பாடுகளை தாத்தையா குண்ட கங்கம்மா தேவஸ்தானம் கவனித்து வருகிறது.[4]
கல்யாண வெங்கடேசுவர சுவாமி கோயில் கல்யாண வெங்கடேசுவரர் சீனிவாசமங்காபுரம் இந்த கோவில் திருப்பதியிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது. திருமணத்திற்குப் பிறகு, திருமலைக்குச் செல்வதற்கு முன்பு வெங்கடாசலபதி 6 மாதங்கள் இங்கு தங்கியதாக நம்பப்படுகிறது.
பிரசன்னா வெங்கடேசுவரர் கோயில் பிரசன்னா வெங்கடேஸ்வரர் அப்பலயகுண்டம் பொ.ச. 1232 இந்த கோவில் திருப்பதியிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது. மற்ற வெங்கடேசுவரர் கோவில்களில் வழக்கமான வரத தோரணைக்கு பதிலாக பிரதான கடவுளின் வலது கை (அஸ்தம்) பிரசன்ன (அபய-ஆசிர்வாதம்) தோரணையில் இருக்கும். எனவே கோவிலுக்கு பிரசன்ன வெங்கடேசுவரா கோவில் என்று பெயர் வந்தது.
பரசுராமேசுவரர் கோயில் சிவன் குடிமல்லம் பொ.ச. 3ஆம் நூற்றாண்டு[5] இந்தக் கோவிலில் உள்ள சிவலிங்கமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இலிங்கங்களில் முதன்முதலாகக் கருதப்படுகிறது.[5]

சுவர்ணமுகி ஆற்றங்கரையிலுள்ள ஐந்து பழமையான சிவன் கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.

அகத்தீசுவரர் கோயில் சிவன் தொண்டவடம் (முக்கோட்டை) இந்த கோவில் திருப்பதியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் அகத்திய முனிவரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. இது சுவர்ணமுகி ஆற்றங்கரையில் உள்ள ஐந்து பழமையான சிவன் கோவில்களில் ஒன்றாகும்.
பராசுராமேசுவரர் கோயில் சிவன் யோகிமல்லாவரம் திருப்பதியிலிருந்து 3 கி.மீ தொலைவிலுள்ள திருச்சானூரில் இக்கோவில் உள்ளது. [[சுவர்ணமுகி ஆறு|சுவர்ணமுகி ஆற்றாங்கரையில் உள்ள ஐந்து பழமையான சிவன் கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.
இராதா கோவிந்த மந்திர் (அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம்) கிருட்டிணன், ராதை, எண்மனையாட்டி திருப்பதி 1984(பழைய கோயில்)

2005(தாமரை கோயில்)

இந்த கோவில் அதன் வடிவமைப்பால் தாமரை கோவில் என்றும் ஹரே கிருஷ்ணா கோவில் என்றும் குறிப்பிடப்படுகிறது.
கோதண்டராமன் கோயில் , சந்திரகிரி இராமன், சீதை,இலட்சுமணன், பரதன், சத்ருக்கனன, அனுமன், கருடன் சந்திரகிரி 16ஆம் நூற்றாண்டு இது இராமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயிலான இங்கு இராமன், சீதை, இலட்சுமணன், பரதன், சத்ருக்னன், அனுமன், கருடன் ஆகியோரின் சிலைகள் ஒரே பீடத்தில் (ஏக பீடம்) காணப்படுகின்றன.[6]
கல்யாண வெங்கடேசுவரர் கோயில், நாராயணவனம் சிறீ கல்யாண வெங்கடேசுவரர், பத்மாவதி தாயார் நாராயணவனம் 16ஆம் நூற்றாண்டு கல்யாண வெங்கடேசுவரசுவாமி கோயில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நாராயணவனத்தில் அமைந்துள்ள ஒரு இந்து-வைணவக் கோயிலாகும். இந்தக் கோயில் விஷ்ணுவின் அவதாரமான கல்யாண வெங்கடேசுவரருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. புத்தூரிலிருந்து கிழக்கே 2 கிமீ தொலைவிலும், திருப்பதிக்கு தெற்கே 45 கிமீ தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் வெங்கடேசப் பெருமான் பத்மாவதியை மணந்து பின்னர் திருமலைக்குச் சென்றதாக நம்பப்படுகிறது.

அருகிலுள்ள பிற கோவில்கள்

[தொகு]

திருகாளத்தி கோயில் திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் சுவர்ணமுகி ஆற்றங்கரையில் அமைந்துள்ள 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோயிலாகும். இது திருப்பதியில் இருந்து 36 கி.மீ தொலைவிலுள்ளது. பேருந்துகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் புகழ்பெற்ற பக்தரான கண்ணப்ப நாயனார் இங்கு முக்தி அடைந்தார். பஞ்சபூத தலங்களில் ஒன்றான காற்றைக் குறிக்கும் வாயு இலிங்கத்திற்காக இது பிரபலமானது. கோவில் இராகு கேது (இந்திய சோதிட திட்டத்தில் நவக்கிரகங்கள்) தொடர்புடையதாக உள்ளது. (அமைவிடம் 13°44'59.0"N 79°41'53.7"E)

காணிப்பாக்கம் கோவில், காணிப்பாக்கம்

[தொகு]

இங்குள்ள கோயிலில் வரசித்தி விநாயகர் தெய்வமாக வணங்கப்படுகிறார். இது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காணிப்பாக்கத்தில் அமைந்துள்ளது. கோயில் சித்தூரிலிருந்து சுமார் 11 கிமீ தூரத்திலும், திருப்பதியிலிருந்து 68 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.

மேலும் பார்க்கவும்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "Record collection of Rs 5.73 crore at Tirumala". The Times of India (Tirumala). 2 April 2012. http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Record-collection-of-Rs-5-73-crore-at-Tirumala/articleshow/12498226.cms. பார்த்த நாள்: 13 August 2015. 
  2. "Sri Govindaraja Swamy Temple". Archived from the original on 9 October 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-06-23.
  3. "Lord Sri Kodanda Rama Swamy Temple in Tirupati and Sri Pattabhiramalayam Temple at Valmikipuram Gear up for Annual Mega Fete-special Story". Tirumala Tirupati Devastanams. Archived from the original on 18 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 12 May 2015.
  4. "'Ganga Jatara' off to a colourful start". பார்க்கப்பட்ட நாள் 2015-07-10.
  5. 5.0 5.1 The Hindus: An Alternataive History. Oxford. October 2009.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  6. "TTD takes over Chandragiri temple". The Hindu. 25 September 2015. https://www.thehindu.com/news/national/telangana/ttd-takes-over-chandragiri-temple/article7688142.ece. பார்த்த நாள்: 29 May 2019.