உள்ளடக்கத்துக்குச் செல்

திருவண்புருடோத்தமம்

ஆள்கூறுகள்: 11°10′39″N 79°46′45″E / 11.17750°N 79.77917°E / 11.17750; 79.77917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வண்புருடோத்தமம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருவண்புருடோத்தமப் பெருமாள் கோயில்
திருவண்புருடோத்தமப் பெருமாள் கோயில் is located in தமிழ் நாடு
திருவண்புருடோத்தமப் பெருமாள் கோயில்
திருவண்புருடோத்தமப் பெருமாள் கோயில்
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்:11°10′39″N 79°46′45″E / 11.17750°N 79.77917°E / 11.17750; 79.77917
பெயர்
பெயர்:திருவண்புருடோத்தமம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மயிலாடுதுறை
அமைவு:திருநாங்கூர்
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிட கட்டிடக்கலை

திருவண்புருடோத்தமம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழிக்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் திருநாங்கூரில் அமைந்துள்ளது.

பெயர் விளக்கம்

[தொகு]

இறைவன் பெயர் புருடோத்தமன். தமிழ்நாட்டில் உள்ள வைணவத் திருத்தலங்களில் புருடோத்தமன் (புருஷோத்தமன்) என்ற பெயரில் இறைவன் எழுந்தருளியிருப்பது இங்கு மட்டுமே ஆகும். இவ்விறைவனின் வள்ளல் தன்மையை உயர்வுபடுத்திக் காட்ட வண் புருடோத்தமன் என அழைக்கப்படுகிறார். எனவே இத்தலம் வண்புருடோத்தமம் ஆயிற்று.[1]

சிறப்பு

[தொகு]

திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் பாடல்பெற்றது இக்கோயில். மணவாள மாமுனிகள் இங்கு வந்து சென்றுள்ளார். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் இங்கு எழுந்தருளும் தை அமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவுக்கு இவ்விறைவனையும் எடுத்துச் செல்வர்.[1]

நம்பிக்கை

[தொகு]

வியாக்ரபாத முனிவர் எனப்படும் புலிக்கால் முனிவர் என்பவர் எம்பெருமானுக்கு பூமாலை கட்டிச் சூட்டும் வேலையை மேற்கொண்டிருந்தார். இக்கோவிலில் எம்பெருமானுக்கு மாலை கட்ட வந்தவர் தனது குழந்தை உபமன்யுவை உட்கார வைத்துவிட்டுப் பூப்பறிக்கச் சென்றார். குழந்தை பசியால் அழுதது. புருடோத்தம நாயகி தூண்ட வண்புருடோத்தமன் திருப்பாற்கடலை வரவழைத்து. குழந்தைக்குப் பாலைப் புகட்டி அருள் புரிந்து வியாக்ரபாத முனிவருக்கும் காட்சி தந்தார் என்பது இத்தலத்தோடு பேசப்படும் வரலாறாகும்.[1]

விவரம் பெயர்
இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காணப்படும் புருடோத்தமன்
இறைவி புருடோத்தம நாயகி
தீர்த்தம் திருப்பாற்கடல் தீர்த்தம்
விமானம் சஞ்சீவி விக்ரக விமானம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 ஆ.எதிராஜன் B.A. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவண்புருடோத்தமம்&oldid=3877049" இலிருந்து மீள்விக்கப்பட்டது