திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருவள்ளூர் வீரராகவபெருமாள் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருவள்ளூர் வீரராகவபெருமாள் திருக்கோயில்[1]
பெயர்
புராண பெயர்(கள்):திரு எவ்வுள், எவ்வுள், கிங்கிருஹரபுரம், எவ்வுள்ளூர் , வீச்சாரண்யச் ஷேத்ரம், புண்யாவார்த்த ஷேத்ரம்
பெயர்:திருவள்ளூர் வீரராகவபெருமாள் திருக்கோயில்[1]
ஆங்கிலம்:Thiruevvul
அமைவிடம்
ஊர்:திருவள்ளூர்
மாவட்டம்:திருவள்ளூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வீரராகவப் பெருமாள் (கிங்கிருஹசன், எவ்வுட்கிடந்தான்,வைத்ய வீரராகவர்)
தாயார்:கனக வல்லித் தாயார் (வசுமதி).
தீர்த்தம்:ஹ்ருத்தபாப நாசினி
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
விமானம்:விஜயகோடி விமானம்
கல்வெட்டுகள்:உண்டு

திருவள்ளூர் வீரராகவபெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று[2]. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னைக்கு அருகில் திருவள்ளூரில் இக்கோயில்அமைந்துள்ளது.

கோவில்[தொகு]

இத்திருக்கோவிலை அகோபில மடம் பராமரித்து வருகிறது. இத்திருக்கோயில் ஐந்தடுக்கு இராசகோபுரத்துடன் (பிரதான வாயில்) பல்லவர்களால் கட்டப்பட்டது ஆகும். கனகவள்ளி அம்மையார், கனேச ஆழ்வார், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகன், இராமானுச ஆச்சாரியார், லட்சுமிநரசிம்மர் ஆகியோருக்கு இங்கு தனித்தனியே சிறு ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இங்குதான் இறைவன் அரசன் தர்மசேனனின் மகள் வசுமதியை திருக்கல்யாணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இங்குள்ள கல்வெட்டுகள் 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவர்களின் இரண்டாவது பாதியைக் குறிப்பிடுகின்றன. இக்கோவில் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என உள்ளூரில் புழக்கத்திலுள்ள புராணக் கதைகள் தெரிவிக்கின்றன. விஷ்ணுவே வீரராகவப்பெருமாளாக இக்கோவிலில் குடிகொண்டுள்ளார்.

இக்கோயிலின் இறைவன் ”வைத்திய வீரராகவர்” என்றும் அழைக்கப்படுகிறார்[3]. தீராத நோய்களை வீரராகவர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் மக்கள் சிறிய உலோகத் தகட்டில் நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்பைச் செதுக்கி அந்நோயைத் தீர்த்து வைக்குமாறு கடவுளிடம் கோரிக்கை சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இறைவனுக்கு இங்கு சந்தன எண்ணெயால் மட்டும் அபிசேகம் செய்யப்படுகிறது.

தல வரலாறு[தொகு]

புரு எனும் முனிவரின் யாகத்தின் பயனாய் பிறந்த சாலிஹோத்ரர் எனும் முனிவர் இங்கு தவம் செய்து வந்தார். தினமும் அதிதிக்கு படைத்த பின்பு உண்ணபவரான சாலிஹோத்ர முனிவரின் அதிதியாக பெருமாளே வயோதிகர் வடிவில் வந்து உணவு பெற்றார். பசி தீராததாகக் கூறி முனிவரின் பங்கையும் உண்டு பசியாறிய பின்னர் உண்ட களைப்பு தீர எங்கே படுப்பது என முனிவரிடம் வினவ, முனிவர் தம் ஆசிரமத்தைக் காட்டினார். அங்கே பெருமாளாக சயனித்தார். "படுக்க எவ்வுள்" என்று கேட்டதால் ஊர் பெயர் எவ்வுள்ளூர் என்றும் எவ்வுட்கிடந்தான் என்பது பெருமாள் திருப்பெயருமாயிற்று.

ஸ்ரீதேவித் தாயார் வசுமதி எனும் பெயரில் திலிப மகாராஜாவிற்கு பெண்ணாக அவதரித்து வாழ்ந்து வர, வீரநாராயணன் எனும் பெயருடன் வேட்டைக்குச் சென்ற பெருமாள் தாயாரை மணமுடித்ததாகத் தலவரலாறு.

அதன்பின்னரே பெருமாள் பெயர் மாறிற்று, அதுவரை கிங்கிருஹேசன் எனும் பெயரே பெருமாளுக்கு முக்கிய திருப்பெயராக விளங்கிற்று. [4]

திருக்குளச்சிறப்பு[தொகு]

திருக்குளம்

இத்திருக்கோயில் திருக்குளம் நோய்தீர்க்கும் திருக்குளமாகவும், பெருமாள் வைத்திய வீரராகவப்பெருமாளாகவும் பக்தர்களால் கூறப்படுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

படக்காட்சியகம்[தொகு]