திருவூரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திரு ஊரகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருஊரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் (திரூஊரகம்)
புவியியல் ஆள்கூற்று:12°50′20″N 79°42′18″E / 12.838989°N 79.704990°E / 12.838989; 79.704990
பெயர்
புராண பெயர்(கள்):திரு ஊரகம்
பெயர்:திருஊரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் (திரூஊரகம்)
அமைவிடம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:உலகளந்த பெருமாள், திரிவிக்கரமப் பெருமாள்
உற்சவர்:பேரகத்தான்
தாயார்:அமுதவல்லி நாச்சியார், ஆரணவல்லி, அம்ருதவல்லி
தீர்த்தம்:நாக தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி
மங்களாசாசனம்
பாடல் வகை:மங்களசாசனம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:திருமங்கையாழ்வார்
விமானம்:ஸாகர ஸ்ரீகர விமானம்
வரலாறு
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்
தொலைபேசி எண்:+91- 94435 97107, 98943 88279

திருஊரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்திலே திரூஊரகம் எனும் ஊரில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 51 வது திவ்ய தேசம் ஆகும். இத்தல இறைவனை ஆதிசேஷன், மகாபலிச் சக்கரவர்த்தி ஆகியோர் தரிசித்துள்ளனர் என்பது தொன் நம்பிக்கை. இத்தல ஆதிசேஷனுக்கு திருமஞ்சனம் செய்து, பாயாசம் படைத்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது நம்பிக்கை. இது உலகளந்த பெருமாளின் மூலஸ்தானத்தின் இடது பக்கத்தில் உள்ளது.

அமைவிடம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 109 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 12°50'20.4"N, 79°42'18.0"E (அதாவது, 12.838989°N, 79.704990°E) ஆகும்.

தல வரலாறு[தொகு]

பெருமாளின் பாதம் பட்டு பாதாள லோகம் வந்த மகாபலி சக்கரவர்த்தி, தன்னால் அவரது உலகளந்த காட்சியை காண முடியவில்லையே என வருந்தினான். எனவே பாதாள லோகத்திலேயே உலகளந்த கோலம் காட்ட வேண்டி பெருமாளை குறித்து, மகாபலி கடும் தவம் இருந்தான். இந்த தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், அவனுக்கு இத்தலத்தில் உலகளந்த திருக்கோலத்தை காட்டினார். இவனோ பாதாள உலகத்தில் இருந்தான். எனவே அவனால் பெருமாளின் திருக்கோலத்தை முழுமையாக தரிசிக்க முடியவில்லை. எனவே மீண்டும் பெருமாளிடம் மன்றாடினான். பெருமாள் இவனுக்கு காட்சி தருவதற்காக இதே இடத்தில் ஆதிசேஷனாக காட்சியளித்தார். இந்த இடமே தற்போது திருஊரகம் என அழைக்கப்படுகிறது.

வெளி இணைப்புக்கள்[தொகு]