கடலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கடலூர்
—  சிறப்பு நிலை நகராட்சி  —
கடலூர்
இருப்பிடம்: கடலூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°45′N 79°45′E / 11.75°N 79.75°E / 11.75; 79.75ஆள்கூற்று: 11°45′N 79°45′E / 11.75°N 79.75°E / 11.75; 79.75
நாடு  இந்தியா
பகுதி சோழ நாடு
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் V. P. தண்டபாணி இ. ஆ. ப. [3]
நகராட்சிதலைவர் சி.க.சுப்ரமணியன்
மக்களவைத் தொகுதி கடலூர்
மக்களவை உறுப்பினர்

Current MP (Successful candidate - P991) name is missing at d:Q3534221(Qualifier Political party (102) is missing under P585 in d:Q3534221)

சட்டமன்றத் தொகுதி கடலூர்
சட்டமன்ற உறுப்பினர்

எம்.சி.சம்பத் (அதிமுக)

மக்கள் தொகை 1,58,569 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


1 மீட்டர் (3.3 ft)

கடலூர் (ஆங்கிலம்:Cuddalore), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.[4]

சொற்தோற்றம்[தொகு]

முற் காலத்தில் கடலூர், கூடலூர் என்று அழைக்கப்பட்டது. பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகள் கடலில் கலக்கும் இடம் ஆதலால் இப்பெயர் பெற்றது. பிரித்தானிய ஆட்சிக் காலத்திலிருந்து இது கடலூர் என்று அழைக்கப்பட்டது. கி.பி. 1746ஆம் ஆண்டில் பிரித்தானியரின் தென்னிந்தியாவுக்கான தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

வரலாறு[தொகு]

இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் செஞ்சியை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில் இருந்த புனித டேவிட் கோட்டையை வாங்கினார்கள். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிய போது புனித டேவிட் கோட்டைக்கு தங்கள் மாகாணத் தலைநகரை மாற்றி இந்தியாவின் தென் பிராந்தியத்தை இந்தக் கோட்டையில் இருந்து ஆண்டு வந்தார்கள். ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன,

கடலூரில், கடலூர் முதுநகர் மற்றும் கடலூர் புதுநகர் என இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. 1866 வரை நகராட்சி அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் முதுநகர் பகுதியிலேயே இருந்தன. 1866க்கு பிறகு அவை புதுநகர் பகுதியில் உள்ள மஞ்சக்குப்பம் எனப்படும் இடத்திற்கு மாற்றப்பட்டது.

சரித்திரக் குறிப்புகள் படி இவ்வூர் சோழர், பல்லவர், முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. பாரம்பரியப்படி சைவ சமயக் கோட்பாடுகள் இங்கு பின்பற்றப்படுவதன் மூலம் சோழர்கள் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளது புலனாகிறது.

ஆங்கிலேய ஆட்சி[தொகு]

ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இந்நகரம் மைசூர் மன்னர் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது (1780). அவர்கள் கட்டுப்பாட்டில் இந்நகரம் இஸ்லாமாபாத் என வழங்கப்பட்டது. அவரது மறைவிற்கு பிறகு (1782) ஆங்கிலேயர் இந்நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டனர். இதன் விளைவாக 1783-இல் போர் மூண்டது. இப்போருக்குப் பின்னர் கடலூர் நகரை ஆங்கிலேயர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஆங்கிலேயர் இந்நகரை ஒரு பெரிய துறைமுகமாக மாற்றினர். சரக்கு கப்பல் போக்குவரத்திற்கு இந்நகரை பெரிதும் பயன்படுத்தினர். குறிப்பாக நெல்லிக்குப்பத்தில் தாங்கள் துவங்கிய சர்க்கரை ஆலையின் (EID Parrys Ltd (1780)) சரக்குகள் கடலூர் துறைமுகத்தில் கையாளப்பட்டது.

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இவ்வூர் ஒரு முக்கிய பங்கு வகித்ததனால் இங்கு சில தெரு மற்றும் ஊர் பெயர்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

 • புரூக்கீச் பேட்டை : 1767 முதல் 1769 வரை இவ்வூரை ஆட்சி செய்த ஹென்ரி ப்ரூக்கர் எனும் ஆங்கிலேயர் பெயர் வைக்கப்பட்டுள்ளது
 • கமியம் பேட்டை : 1778 களில் இவ்வூரை ஆட்சி செய்த வில்லியம் கம்மிங் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 • கேப்பர் மலை : 1796 களில் ஆங்கில படைத்தளபதியாக விளங்கிய ப்ரான்சீச் கேப்பர் அவர்களை முன்னிட்டு பெயர் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 • வெலிங்டன் தெரு : ஆங்கில ஆட்சியாளராக விளங்கிய வெலிங்டன் துரை என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 • கிளைவ் தெரு : ஆங்கில ஆட்சியை பாரத தேசத்தில் நிருவிய ராபர்ட் கிளைவ் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11°45′N 79°45′E / 11.75°N 79.75°E / 11.75; 79.75 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1 மீட்டர் (3 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள்தொகை[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,73,361 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 85,593 ஆண்கள், 87,768 பெண்கள் ஆவார்கள்.மக்களின் சராசரி கல்வியறிவு 88.54% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 93.08%, பெண்களின் கல்வியறிவு 84.15% ஆகும்.மக்கள் தொகையில் 15,940 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

போக்குவரத்து[தொகு]

கடலூர் தொடருந்து மற்றும் சாலை மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

தொடருந்துப் போக்குவரத்து[தொகு]

கடலூர் இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன.

தென்னக இரயில்வேயின் மெயின் லைன் எனப்படும் சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி ரயில் பாதையில் கடலூர் உள்ளது . இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1877 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கடலூர் துறைமுகம் சந்திப்பில் இருந்து விருத்தாசலம் வழியாக சேலத்திற்கு ஒரு ரயில் பாதை உள்ளது.

சாலைப் போக்குவரத்து[தொகு]

கடலூர் நல்ல ரயில் மற்றும் சாலை வலைப்பின்னல் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும் நகரமாகும். புதுச்சேரி , சிதம்பரம், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் போன்ற அருகிலுள்ள நகரங்களில் செல்ல அடிக்கடி பேருந்துகள். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சிராப்பள்ளி, சேலம் போன்ற முக்கிய நகரங்கள் செல்ல அடிக்கடி பேருந்துகள்

சாலை வழியாக அனைத்து மாவட்டத்தின் பெரு நகரங்களுடன் இணைக்கபட்டுள்ளது. கடலூரில் இருந்து மூன்று மாநில நெடுஞ்சாலைகள் துவங்கி பிற நகரங்களை சென்று அடைகின்றன, அவை

 • எஸ்.எச்.9 - கடலூர் சித்தூர் சாலை (கடலூர் - நெல்லிக்குப்பம் - மேல்பட்டாம்பாக்கம்-பண்ருட்டி - திருகோவிலூர் - திருவண்ணாமலை - வேலூர் - காட்பாடி- சித்தூர்)
 • எஸ்.எச்.10 - கடலூர் சேலம் சாலை (கடலூர் - வடலூர் - நெய்வேலி - விருத்தாசலம்- வேப்பூர் - சேலம்)
 • எஸ்.எச்.68 - கடலூர் - பாலூர் - பண்ருட்டி - அரசூர் -திருக்கோவிலூர் - சங்கராபுரம் சாலை.

கடலூரில் தோன்றிய குறிப்பிடத்தக்கவர்கள்[தொகு]

 • சுப்பராயலு ரெட்டியார் - மதராஸ் மாகாண முதல் முதலமைச்சர்.
 • ஜோதி இராமலிங்க சுவாமிகள் - சிதம்பரம் அருகில் பிறந்தார்.
 • எஸ். எஸ். ராமசாமி படையாட்சியார் - நிறுவனர் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி
 • ஜெயகாந்தன் - சிறந்த கதாசிரியர், பத்திரிகையாளர் மற்றும் பல விருதுகள் பெற்றவர்.
 • கி. வீரமணி - திராவிடர் கழகம் கட்சியின் தலைவர் மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்.
 • ஆற்காடு இரட்டையர் என்படும் ஆற்காடு சகோதரர்கள் என்று அழைக்கப்படும் ஆற்காடு ராமசாமி முதலியார் மற்றும் ஆற்காடு லட்சுமணசாமி முதலியார் கடலூரில் பிறந்து வாழ்ந்து வந்தார்கள்.
 • சி. கே. ரங்கநாதன் - வியாபார துறையில் வெற்றி பெற்றவர்
 • வி. வைத்திலிங்கம் - புதுவை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்.
 • நீதிபதிகள் கே. கண்ணன், ஆர். பாலசுப்ரமணியம், கே.சம்பத்.
 • கலைமாமணி கடலூர் எம். சுப்ரமணியம் (1920–1997)
 • எஸ். பாலாஜி, ஆர். ராம்குமார் - துடுப்பாட்ட வீரர்கள்Peter Tranchell (1922–1993 ) பிரித்தானிய இசை அமைப்பாளர்
 • கடலூர் மாவட்ட முதல் இஸ்லாமிய தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஜனாப் கி. அப்துல் லத்தீப் எங்கிற ஹிலால்
 • என். டி. கோவிந்தசாமி கச்சிராயர் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் 1952)
 • மும்பை ஹாஜி மசுதான் கடலூரில் வாழ்ந்து வந்தார்.

கடலூர் துறைமுகம்[தொகு]

200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடலூர் இயற்கைத் துறைமுகம், இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்களின் தென் இந்தியாவின் முதல் தலைநகரமாக விளங்கியது. தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் இரண்டாவது பள்ளிகூடம் புனித டேவிட் பள்ளி கி.பி 1717 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் ராபர்ட் கிளைவ் தங்கியிருந்தது கடலூர் தான். இன்றும் கடலூர் துறைமுகத்தில் கிளைவ் தெரு, சைமன் கார்டன், கிங் ஜான் பேட்டை, லாரன்ஸ் ரோடு, புரூகிஸ் பேட்டை, இன்றும் நிலவில் உள்ளது. தமிழகத்தின் முதல் வங்கி இம்பிரியல் வங்கி இங்கு தான் செயல்ப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. பரங்கிப்பேட்டையில் இருந்த இரும்பு உருக்கு ஆலைகளில் தயாரிக்கப்பட்ட இரும்புத் தளவாடங்கள், கடலூர் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலம் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டன. சுதந்திரத்துக்குப் பின் கடலூர் துறைமுகத்தில் இருந்து, சேலத்தில் வெட்டி எடுக்கப்பட்ட இரும்புக் கனிமங்கள், வெள்ளைக் கற்கள் போன்றவை கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

1985 வரை 150 ஊழியர்களுடன் இத்துறைமுக அலுவலகம் செயல்பட்டது. 500 சரக்கு விசைப் படகுகளுடன், சுமார் 1 லட்சம் தொழிலாளர்களுக்கும், இங்கு வேலைவாய்ப்பு இருந்தது. தற்போது 7 ஊழியர்களுடன் இயங்கிக் கொண்டு இருக்கிறது.

கடலூர் துறைமுகம் தவிர பல துறைமுகங்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ளன. அவை வருமாறு

 • திருச்சோபுரம் துறைமுகம்
 • சிலம்பிமங்களம் துறைமுகம்
 • பரங்கிபேட்டை துறைமுகம

சுற்றுலா தலங்கள்[தொகு]

 • வெள்ளி கடற்கரை (கடலூர்)
 • புனித டேவிட் கோட்டை
 • பாடலீஸ்வரர் கோயில்
 • திருவந்தீபுரம் சுவாமி கோயில்
 • திருவந்தீபுர ஹையக்றேவேர் கோயில்
 • நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்.எல்.சி) நெய்வேலி
 • சிதம்பரம் நடராஜர் கோயில்
 • பிச்சாவரம், உலகின் மிகப்பெரிய மாங்கிரோவ் காடுகள்
 • திருமுடம் பூவராக சுவாமி கோயில்
 • வடலூர் வள்ளலார் சத்ய ஞான சபை
 • குறிஞ்சிபடி சுப்றை சுவாமிகள் கோயில்
 • வேங்கடம்பெட் வேனுகோபல சுவாமி கோயில்
 • திருவதிகை வீரடநேச்வர் கோயில்
 • திருச்சோபுரம் சுவாமி கோயில்

கல்வி[தொகு]

கடலூரில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் பல உள்ளன.

பொறியியல் கல்லூரிகள்[தொகு]

 • அண்ணா பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி - பண்ருட்டி வளாகம்
 • டாக்டர். நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி
 • கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
 • எம்.ஆர்.கே இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
 • ஸ்ரீ ஜெயராம் பொறியியல் கல்லூரி
 • செயின்ட் ஆணிஸ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி

கலை அறிவியல் கல்லூரிகள்[தொகு]

 • இமாகுலேட் பெண்கள் கல்லூரி
 • ஏரிஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • பி. பத்மனாப ஜெயந்திமாலா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • சி.கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி
 • அரசு கலைக் கல்லூரி,கடலூர்
 • ஜவஹர் அறிவியல் கல்லூரி
 • கிருஷ்ணசுவாமி அறிவியல், கலை மற்றும் மேலாண்மை மகளிர் கல்லூரி
 • பெரியார் கலைக் கல்லூரி
 • ஸ்ரீ ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • ஸ்ரீ ஆறுமுகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • ஸ்ரீ தங்கம் பெரியசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 • திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி
 • திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

பள்ளிகள்[தொகு]

 • புனித வளனார் பள்ளி (கடலூர்)
 • புனித சவேரியர் நடுநிலை பள்ளி (கடலூர் முதுநகர்)
 • புனித பிலோமினால் நடுநிலை பள்ளி (கடலூர் முதுநகர்)
 • புனித அன்னாள் பெண்கள் பள்ளி, (கடலூர்)
 • அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி (கடலூர் முதுநகர்)
 • கிருஷ்ணசாமி நினைவு பதின்ம உயர்நிலைப் பள்ளி.(கடலூர்)
 • ஏ.ஆர்.எல்.எம். பதின்ம உயர்நிலைப் பள்ளி.(கடலூர்)
 • புனித டேவிட் உயர்நிலை பள்ளி.(கடலூர் முதுநகர்)
 • புனித ஜோசப் பெண்கள் பதின்ம உயர்நிலை பள்ளி. (கடலூர்)
 • அரசு மேல்நிலை பள்ளி (வண்டிப்பாளையம், கடலூர்)
 • புனித மரியன்னை பெண்கள் பள்ளி, (கடலூர்)

வெள்ளி கடற்கரை[தொகு]

கடலூரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கடற்கரையில் நூற்றாண்டு கண்ட கலங்கரை விளக்கம் உள்ளது. அடர்ந்த மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ளன. வெள்ளி கடற்கரை பகுதியில் பிரிட்டிஷ் உருவாக்கிய முக்கிய கோட்டை புனித டேவிட் கோட்டை உள்ளது. பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்த கடற்கரை அருகே அமைந்துள்ளது

தொழில்[தொகு]

 • நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்
 • நாகார்ஜூனா ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனம்
 • குட் எர்த் கப்பல் கட்டுமான துறைமுகம்
 • ஹார்டி மத்திய கடல் எண்ணெய

ஆதாரங்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 4. கடலூர் நகராட்சி
 5. "Cuddalore". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 18, 2006.
 6. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலூர்&oldid=2778197" இருந்து மீள்விக்கப்பட்டது