திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹர சாப விமோசன பெருமாள் கோயில்
ஹர சாப விமோசன பெருமாள் கோயில் is located in தமிழ் நாடு
ஹர சாப விமோசன பெருமாள் கோயில்
ஹர சாப விமோசன பெருமாள் கோயில்
தமிழ்நாட்டில் கோயிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:10°51′36″N 79°6′30″E / 10.86000°N 79.10833°E / 10.86000; 79.10833ஆள்கூறுகள்: 10°51′36″N 79°6′30″E / 10.86000°N 79.10833°E / 10.86000; 79.10833
பெயர்
பெயர்:திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவு:தமிழ்நாட்டில் அமைவிடம்
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு அருகே அமைந்த திருக்கண்டியூர் கிராமத்தில் அமைந்த இப்பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் சோழ நாட்டு 7ஆவது திருத்தலம். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இக்கோயிலின் மூலவர் பெயர் ஹர சாப விமோசனர். தாயார் பெயர் கமலவல்லி.

ஐந்து நிலைகள் கொண்ட கோபுரத்துடன் கூடிய இக்கோயில், கி பி எட்டாம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு விஜய நகரப் பேரரசர்களும் தஞ்சாவூர் நாயக்கர்களும் திருப்பணி செய்தனர்.

பெயர்க் காரணம்[தொகு]

பிரம்மனின் ஐந்து தலைகளுள் ஒன்றைக் கொய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோசம் நீங்க, ஹரன் திருக்கண்டியூரில் உள்ள கமல தீர்த்தத்தில் நீராடி, திருக்கண்டியூர் பெருமாளை தரிசனம் செய்தார். இதனால் ஹரனுக்குப் பிரம்மஹத்தி சாப விமோசனம் பெற்றதால், இத்தலத்திற்கு ஹர சாப விமோசனப் பெருமாள் பெயராயிற்று.[1] [2] பிரம்மா, சிவன் மற்றும் மகாபலி சக்கரவர்த்திக்குக் காட்சி அளித்தவர் ஹர சாப விமோசனப் பெருமாள்.

பூஜைகளும் விழாக்களும்[தொகு]

இக்கோயில் மூலவருக்கு நாள்தோறும் ஆறு கால பூஜைகள் நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.[3]

அமைவிடம்[தொகு]

தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் வடக்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது. தஞ்சையிலிருந்தும், திருவையாற்றிலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]