திருமங்கையாழ்வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருமங்கை ஆழ்வார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருமங்கை ஆழ்வார்
பிறப்பு திருக்குரையலூர் சீர்காழிதமிழ்நாடு

திருமங்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர். சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் பிறந்தவர். 'கலியன்' என்னும் இயற்பெயர் கொண்டவர் .[சான்று தேவை]

(வைணவ)க் காதல்[தொகு]

குமுதவல்லி எனும் மங்கை மீது கொண்ட காதலினால் வைணவம் அனுசரிக்க ஆரம்பித்தவர், அவளின் விருப்பத்தின்படி திருமால் அடியார்களுக்கு தினமும் அன்னம் இடுவதையும், திருக்கோயில் கைங்கரியங்களில் ஈடுபடுவதையும் செய்துவரலானார். காலப்பொழுதில் தன்னை முழுமையாக இதில் ஈடுபடுத்திக் கொண்டு தன் செல்வங்களையும், அரசு செல்வங்களையும் முழுக்க இழந்தவரானார். கடமையை நிறைவேற்ற யாசகமும் கைக்கொடுக்காதப்படியால் களவாடியாவது அடியார்களுக்கு தினமும் அன்னம் இடுவதையும், திருவரங்கத் திருக்கோயிலின் கைங்கரியங்களையும் செய்துவந்தார். இச்செயலை மெச்சி, இறைவனே இவர் களவாடும் பாதையில் வந்து, இவரை ஆட்கொண்டதோடு வேண்டிய செல்வங்களையும் கொடுத்தருளினார்.

இலக்கிய பணி[தொகு]

இவர் 1351 பாடல்கள் பாடியுள்ளார். அவைகளாவன

  • திருவெழுக்கூற்றிருக்கை (ஒரு பாடல் - 47 அடிகள்)
  • சிறிய திருமடல் (ஒரு பாடல் - 155 அடிகள்)
  • பெரிய திருமடல் (ஒரு பாடல் - 297 அடிகள்)
  • திருநெடுந்தாண்டகம் (30 பாடல்கள்)
  • திருக்குறுந் தாண்டகம் (20 பாடல்கள்)
  • பெரிய திருமொழி (1084 பாடல்கள்)

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமங்கையாழ்வார்&oldid=2494489" இருந்து மீள்விக்கப்பட்டது