தேரழுந்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேரழுந்தூர்
—  கிராமம்  —
தேரழுந்தூர்
இருப்பிடம்: தேரழுந்தூர்
, தமிழ் நாடு , இந்தியா
அமைவிடம் 11°01′N 79°21′E / 11.02°N 79.35°E / 11.02; 79.35ஆள்கூற்று: 11°01′N 79°21′E / 11.02°N 79.35°E / 11.02; 79.35
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி
ஊராட்சி மன்ற தலைவர் சின்ன.சிவகுமார் [1]
மக்களவைத் தொகுதி தேரழுந்தூர்
மக்கள் தொகை 9,533 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
  www.tzronline.in

தேரழுந்தூர் சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத்தலமான நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில் உள்ளது தேரழுந்தூர்.

அமைவிடம்[தொகு]

மயிலாடுதுறை , கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகளில் தேரழுந்தூர் செல்லலாம். மயிலாடுதுறை – கும்பகோணம் தொடர் வண்டிப் பாதையில் உள்ள தேரழுந்தூர் இரயில் நிலயத்தில் இறங்கி தெற்கே 3 கி.மீ. தூரம் சென்றால் ஊரை அடையலாம். இவ்வூர் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி யையும், பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி) யையும் சேர்ந்தது. தேரழுந்தூர் பெருமாள் கோயில், மேலையூர், கீழையூர், தொழுதாலங்குடி ஆகிய 4 பஞ்சாயத்துக்களைக் கொண்ட மிகப்பெரிய ஊராகும். சுமார் 9533 மக்கள் தொகை கொண்ட கிராமம் ஆகும். இதன் எல்லையாக கிழக்கில் அசிக்காடும் ,மேற்கில் திருவாவடுதுறையும், வடக்கில் குத்தாலமும் தெற்கில் கோமலும் அமைந்து உள்ளது.

Kambar birth place 1.jpg

பிற பெயர்கள்[தொகு]

திருவழுந்தூர்
தேரிழந்தூர்
அழுந்தை

சங்ககால நிகழ்வு[தொகு]

அழுந்தூர் என்பது சங்ககாலத்தில் சிறப்புடன் விளங்கிய ஊர்களில் ஒன்று. புலவர் பரணர் இதனைத் தம் பாடலில் (அகநானூறு 245) குறிப்பிட்டுள்ளார்.

வெண்ணிவாயில் என்னுமிடத்தில் வேந்தன் கரிகாலனை 11 வேளிர் ஒன்று கூடித் தாக்கினர். இவர்கள் 11 பேரும் போர்க்களத்திலேயே மாண்டனர். போர்களத்தில் அவர்களது முரசங்கள் மட்டுமே எஞ்சிக் கிடந்தன.

இவற்றைப் பார்த்த அழுந்தூர் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இந்த ஆரவாரம் போலத் தலைவியின் அலர் எங்கும் பரவிற்றாம்.

இடைக்காலப் பெருமை[தொகு]

திருநாவுகரசர் இந்தத் திருவழுந்தூர்க் கோயில் கொண்டுள்ள சிவபருமானைப் போற்றிப் பாடியுள்ளார்.

கம்பராமாயணம் பாடிய கம்பர் இவ்வூரில் பிறந்தவர். www.tzronline.in

ஊர் பெயர் காரணம்[தொகு]

அகத்தியர் என்ற ஒரு முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இறைவனை தியானித்துக் கொண்டிருந்தப் போது அதனை அறியாத ஊர்த்துவ ரதன் என்னும் அரசன் ஆகாயத்தில் செலுத்திய தேர் செல்லாது அழுந்தியதால் இப்பெயர் பெற்றதாக கூறப் படுகிறது.

சிறப்புகள்[தொகு]

Tzr mosque 1.jpgKambar arabic colege 1.jpgKambar perumal temple 1.jpg

தேரழுந்தூர் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த ஊராகும். 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் தேரழுந்தூரில் ஸ்ரீரங்கநாதனாகவும், ஸ்ரீகோவிந்தராஜனாகவும், ஸ்ரீதேவாதி ராஜனாகவும் எழுந்தருளியுள்ள மூன்று திவ்ய தேச எம்பெருமான்கள் பற்றி 45 பாசுரங்கள் பாடியுள்ளார். இங்குள்ள ஆமருவியப்பன் என்ற பெருமாள் கோயிலுக்கு நேர் எதிரில் ஒரு கி.மீ. தொலைவில் ஒரு சிவன் கோயில் உள்ளது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் வழிபட்ட பெருமாள் கோயில் உள்ள பெருமாள் சன்னிதித் தெருவில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் கம்பருக்கு ஒரு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஒரு அரசு மருத்துவமனை மற்றும் பல தனியார் மருத்துவமனைகளும் அமைந்துள்ளது. மேலும் அரசு மேல்நிலை பள்ளி மற்றும் பல தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளும் அமைந்துள்ளது. மூன்று பள்ளிவாசல்களும், ஆண்களுக்கான அரபிக் கல்லூரி ஒன்றும், பெண்களுக்கான அரபிக் கல்லூரி ஒன்றும் அமைந்துள்ளது. இங்கு அனைத்து சமுதாய மக்களும் இணக்கமாக சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர்.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேரழுந்தூர்&oldid=2509769" இருந்து மீள்விக்கப்பட்டது