உள்ளடக்கத்துக்குச் செல்

கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
கோவிலடி அப்பால ரங்கநாதர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருப்பேர் நகர்
பெயர்:கோவிலடி அப்பால ரங்கநாதர் கோயில்
அமைவிடம்
ஊர்:கோவிலடி
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அப்பக்குடத்தான்
தாயார்:இந்திரா தேவி, கமல வள்ளி,
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார்
வரலாறு
அமைத்தவர்:கரிகால் சோழன்

கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில், 108 திவ்யதேசங்களுள் ஒன்று. சோழ நாட்டு ஆறாவது திருத்தலம். இக்கோவில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடி பகுதியில் அமைந்துள்ளது. [1]

தல வரலாறு

[தொகு]

இக்கோவில் சோழ மன்னன் கரிகால் சோழனால் கட்டப்பட்டது. திருப்பேர் நகர் என்பது இத்தலத்தின் பழம் பெயராகும். பஞ்சரங்க தலங்களில் அப்பாலரங்கம் என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. இப்பெருமாளுக்கு தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுவதால் இவர் அப்பக்குடத்தான் என்று அழைக்கப்படுகிறார். [2]

மூலவர்

[தொகு]

இத்தலத்தில் உள்ள பெருமாள் அப்பக்குடத்தான் என்றும், அப்பால ரெங்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

தாயார்

[தொகு]

இக்கோயிலில் உள்ள தாயார் கமலவள்ளி என்றழைக்கப்படுகிறார்.

மங்களாசாசனம்

[தொகு]

இத்தலம் நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். [3]

குடமுழுக்கு

[தொகு]

இக்கோயிலின் குடமுழுக்கு 29 ஜனவரி 2016இல் நடைபெற்றது. [4]

மேற்கோள்கள்

[தொகு]