திருப்பிரிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருப்ரிதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருப்பிரிதி
ज्योतिर मठ
Jyotir Math, Joshimath
நகரம்
Ropeway at Joshimath to Auli
Ropeway at Joshimath to Auli
Country இந்தியா
மாநிலம்உத்தராகண்டம்
மாவட்டம்சமோலி
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்13,202
Languages
 • Officialஇந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

திருப்பிரிதி என்பது என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட எல்லையான இமய மலையில் மானசரோவரம் என்ற ஏரியின் அருகில் அமைந்துள்ளது. திருமங்கையாழ்வார் தனது தொடக்கப் பாடலாக இத்தலத்தையேப் பாடுகிறார். இத்தலம் எங்கு அமைந்துள்ளது என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இத்தலம் ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள ஜோஷி மடம் என்றும் கருதப்படுகிறது. [2] இந்த இடத்தில் தற்போது கோவில்களும், சிலைகளும் உள்ளது. இன்னுமொருசாரர் நந்தப் பிரயாகை என்னுமிடமே திருப்பிரிதியாகுமெனவும் கூறுவர். இவ்விரண்டும் அல்லாமல் இமய மலைக்கு உட்புறம் அமைந்துள்ளது என்றொரு கருத்துமுண்டு.[3][4]

இறைவன், இறைவி[தொகு]

இத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கிய புஜங்க சயனக் கோலத்தில் பரம புருஷன் என அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் பரிமளவல்லி நாச்சியார் தீர்த்தம் இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், மானசரோவரம் ஆகியன. விமானம் கோவர்த்தன விமானம் என்ற அமைப்பினைச் சார்ந்தது.

சிறப்புகள்[தொகு]

திருமங்கையாழ்வார் முதன்முதலில் பாடல் செய்த தலம். இங்கிருந்துதான் இவர் தனது பயணத்தைத் தொடங்கினார். இங்கிருந்து தெற்கு நோக்கி வரும்போது வடநாட்டிலிருந்து தென்திசை வரும் வழியில் உள்ள தலங்களில் சிலவற்றை பாடிக் கொண்டே வந்து தென்னாட்டுத் தலங்களைப் பற்றிப் பாடுகிறார். திருமங்கையாழ்வார் இத்தலத்திற்கு 10 பாசுரங்கள் வழங்கியுள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. M. S., Ramesh (2000). 108 Vaishnavite Divya Desams: Divya desams in Malai Nadu and Vada Nadu. Tirumalai-Tirupati Devasthanam. பக். 188. 
  2. 108 Vaishnavite Divya Desams: Divya desams in Pandya Nadu. M. S. Ramesh, Tirumalai-Tirupati Devasthanam.
  3. 3.0 3.1 ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம். 
  4. Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, p. 142, Oxford University Press, New Delhi (Reprinted 2003), ISBN 0-19-560686-8)


"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பிரிதி&oldid=3116751" இலிருந்து மீள்விக்கப்பட்டது