சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோளிங்கர் மலை


சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில்

மூலவர்: யோகநரசிம்மர்
தாயார்: அமுதவல்லித் தாயார்
உற்சவர்: பக்தவச்சல பெருமாள்
அமைவிடம்: வேலூர்
மாநிலம்: தமிழ்நாடு, இந்தியா

சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில் ( திருக்கடிகை) 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் பெருமாள் யோக நரசிம்மராக அருள் வழங்குகிறார். இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 1305 படிகள் ஏறிக் கடக்க வேண்டும் . இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்ட கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

தமிழ்நாடு மாநிலம், வேலூர் மாவட்டம், சோளிங்கபுரத்திற்கு கிழக்கே அமைந்த சிறு குன்றுகளில் சற்று உயரமான அடுத்தடுத்துள்ள குன்றுகளில் உச்சியில் அமைந்துள்ளது.

ஆஞ்சநேயர் கோவில்[தொகு]

இம்மலைக்கு கிழக்கே உள்ள சிறிய மலையில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றும் உள்ளது. இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 403 ஏறிக் கடக்கவேண்டும் .

நிழற் படங்கள்[தொகு]