திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருக்கோளூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில்
பெயர்
பெயர்:திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில்
அமைவிடம்
ஊர்:திருக்கோளூர்
மாவட்டம்:தூத்துக்குடி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வைத்தமாநிதிபெருமாள்
தாயார்:குமுதவல்லி, கோளுர் வள்ளி
தீர்த்தம்:குபேர தீர்த்தம், நிதித் தீர்த்தம்(தாமிரபரணி)
சிறப்பு திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:நம்மாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
விமானம்:ஸ்ரீகர விமானம்
கல்வெட்டுகள்:உண்டு

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் என்பது ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றும், நவதிருப்பதியில் மூன்றாவது திருப்பதியுமாகும்.


நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஆழ்வார்திருநகரியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. பிரம்மாண்ட புராணத்தில் இத்தலத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இறைவன்: கிழக்கு நோக்கிய சயனக் கோலத்தில் நிசேபவித்தன், வைத்தமா நிதிப்பெருமான். இறைவி: குமுதவல்லி, கோளுர் வள்ளி. தீர்த்தம்: குபேர தீர்த்தம், நிதித் தீர்த்தம்(தாமிரபரணி). விமானம்: ஸ்ரீகர விமானம் என்ற அமைப்பைச் சேர்ந்தது. நம்மாழ்வார் மட்டும் 12 பாடல்களாலும் மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளனர். இவ்வூர் மதுரகவியாழ்வார் பிறந்த தலமாகும். இறைவன் செல்வத்தைப் பாதுகாத்து அளந்ததால் மரக்காலைத் தலைக்கு வைத்து பள்ளி கொண்ட கோலத்தில் இங்கும், சோழ நாட்டு வைணவத் திருத்தலமான திரு ஆதனூரில் ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயிலில் மட்டுமே காணப்படுகிறார்.[1]

தலவரலாறு[தொகு]

பார்வதியின் சாபத்தால் குபேரனிடமிருந்து நவநிதிகள் எனப்படும் செல்வங்கள் விலககின. அவை திருமாலிடம் சென்று சரணடைந்தன. இதனால் திருமால் வைத்தமாநிதி என்று அழைக்கப்படுகிறார். பின்பு குபேரன் திருமாலை இத்தலத்தில் வழிபட்டு நவநிதிகளைப் பெற்றுக்கொண்டார்.

விழாக்கள்[தொகு]

  • வைகுண்ட ஏகாதசி

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம். 

வெளி இணைப்புகள்[தொகு]