சக்கரத்தாழ்வார்
சக்கரத்தாழ்வார் என்பவர், திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் உருவமாக கருதப்பெறுகிறார். இவர் சுதர்சனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்பெறுகிறார். இவர் பதினாறு கைகளை கொண்டவராகவும், சில இடங்களில் முப்பத்திரண்டு கைகள் கொண்டவராகவும் அறியப்பெறுகிறார். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி காணப்பெறுகிறது.
பெயர் விளக்கம்
[தொகு]சக்கரத்தாழ்வாரை சக்கரத்தான் என்றும் கூறுவர். ஆழ்வார்கள் இவரை திருவாழியாழ்வான் என்கின்றனர். பெரியாழ்வார் சக்கரத்தாழ்வாரை சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு என்று வாழ்த்துகிறார்.
சுவாமி தேசிகன் என்பவர் சக்கரத்தாழ்வரை சக்ர ரூபஸ்ய சக்ரிண என போற்றுகிறார். இதற்கு திருமாலுக்கு இணையானவர் என்று பொருளாகும். அத்துடன் சுவாமி தேசிகன் சுதர்ஸனாஷ்டகம் என்ற நூலினையும் சக்கரத்தாழ்வாரைப் போற்றி எழுதியுள்ளார்.[1]
சக்கரத்தாழ்வாரின் ஆயுதங்கள்
[தொகு]சக்கரத்தாழ்வார் தனது பதினாறு ஆயுதங்களை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
வலக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள்
[தொகு]இடக்கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள்
[தொகு]இவற்றையும் காண்க
[தொகு]ஆதாரம்
[தொகு]- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=20009 திருவாழியாழ்வான் - தினமலர் கோயில்கள்
- ↑ சோடாஸ ஆயுத ஸ்தோத்திரம் - வேதாந்த தேசிகர்
வெளி இணைப்புகள்
[தொகு]- சங்கடம் தீர்க்கும் சக்கரத்தாழ்வார் தினகரன் பரணிடப்பட்டது 2013-04-19 at the வந்தவழி இயந்திரம்
- சுதர்சன சக்கரத்தாழ்வார் வழிபாட்டு முறை! காலதேவன்[தொடர்பிழந்த இணைப்பு]
- தோஷங்கள் போக்கும் சக்கரத்தாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- அடியாரின் துன்பம் ஆண்டவனின் துன்பமென ஓடிவந்தருளும் சக்கரராஜன்! சக்கரத்தாழ்வார் ஜெயந்தி 14-5-2012 பொன்மலை பரிமளம்[தொடர்பிழந்த இணைப்பு]