திருவள்ளூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருவள்ளூர் (திருஎவ்வுளூர்)
—  முதல் நிலை நகராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் ஏ. சுந்தரவல்லி இ. ஆ. ப. [3]
நகராட்சி தலைவர்
மக்கள் தொகை 56 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

திருவள்ளூர் (Thiruvallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம் மற்றும் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல்நிலை நகராட்சியும் ஆகும்.

இவ்வூரின் சிறப்பு[தொகு]

இதன் திருத்தமான பெயர் திருவெவ்வுளூர் ( = திருஎவ்வுளூர் = திரு எவ்வுள் ஊர்) ஆகும். இதன் உண்மையான பழைய பெயர் வெறுமனே எவ்வுள் என்பதேயாகும். அப்படியேதான் ஆழ்வார் பாசுரங்களில் பாடுவதைக் காணலாம். இவ்வூரில் அமைந்துள்ள வீரராகவபெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகும்.[4][5]

உள் என்னும் சொல் மிக அரிதாக ஊர்ப் பெயரிலே காணப்படும். வைணவத் திருப்பதிகளில் ஒன்றாகிய இந்த எவ்வுள் என்னும் ஊரை அப்படியே திருமங்கையாழ்வாரும் திருமழிசையாழ்வாரும் பாடியுள்ளனர். பிறகு நாளடைவில் திருஎவ்வுள் என்றும், திருஎவ்வுளூர், திருவெவ்வுளூர் என்றும் அழைக்கப்பெற்ற அவ்வூர், இக்காலத்தில் திருவள்ளூர் எனச் சிதைந்து வழங்குகின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 27 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 14,004 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 56,074 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 88.7% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 999 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5627 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 938 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 10,653 மற்றும் 334 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.45%, இசுலாமியர்கள் 5.88% , கிறித்தவர்கள் 6.17%, தமிழ்ச் சமணர்கள் 0.35%, மற்றும் பிறர் 1.14.% ஆகவுள்ளனர்.[6]

திருவள்ளூர் கோவில் மற்றும் குளம், ஆண்டு 1848[7]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=358
  5. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=223&pno=61
  6. திருவள்ளூர் நகர மக்கள்தொகை பரம்பல்
  7. "Temple and Tank at Trivaloor, South India". Wesleyan Juvenile Offering (London: Wesleyan Mission-House) V: 36. April 1848. https://books.google.com.au/books?id=TFwEAAAAQAAJ&printsec=frontcover&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 20 November 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவள்ளூர்&oldid=2731842" இருந்து மீள்விக்கப்பட்டது