உள்ளடக்கத்துக்குச் செல்

ஆவடி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆவடி வட்டம் (Avadi taluk) தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தின் 9 வட்டங்களில் ஒன்றாகும். [1] இவ்வருவாய் வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் ஆவடியில் இயங்குகிறது. ஆவடி வட்டம் முழுவதும் பெருநகர சென்னை மாநகராட்சி வளையத்தில் அமைந்துள்ளது.

ஆவடி வட்டம் திருநின்றவூர், திருமுல்லைவாசல், ஆவடி, மோரை, வெள்ளானூர் என 5 உள்வட்டங்களும், 31 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது. [2]

ஆவடி வட்டத்தில் உள்ள முக்கிய நகரப் பகுதிகள் ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் ஆகும்.

தோற்றம்[தொகு]

பூந்தமல்லி வட்டம் மற்றும் அம்பத்தூர் வட்டத்தின் சில வருவாய் கிராமங்களைக் கொண்டு, புதிய ஆவடி வட்டம் 2015-இல் நிறுவப்பட்டது.[3],[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. திருவள்ளூர் மாவட்ட வட்டங்கள்
  2. ஆவடி வட்டத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்
  3. "தமிழகத்தில் 15 புதிய தாலுகாக்கள்: ஜெ. அறிவிப்பு". oneindia tamil. 11 August 2014. http://tamil.oneindia.com/news/tamilnadu/tn-creates-15-new-taluks-2-integrated-judicial-complexes-208267.html. பார்த்த நாள்: 26 February 2017. 
  4. "Avadi missing from list of taluks on poll website". The Times of India. 5 April 2017. http://timesofindia.indiatimes.com/city/chennai/Avadi-missing-from-list-of-taluks-on-poll-website/articleshow/51690355.cms. பார்த்த நாள்: 26 February 2017. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவடி_வட்டம்&oldid=3644833" இலிருந்து மீள்விக்கப்பட்டது