அம்பத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அம்பத்தூர்
—  சென்னை மாநகரப்பகுதி  —
அம்பத்தூர்
இருப்பிடம்: அம்பத்தூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 13°05′54″N 80°09′44″E / 13.0983°N 80.1622°E / 13.0983; 80.1622ஆள்கூறுகள்: 13°05′54″N 80°09′44″E / 13.0983°N 80.1622°E / 13.0983; 80.1622
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[2]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[3]
மாவட்ட ஆட்சியர் ப. பொன்னையா, இ. ஆ. ப [4]
மேயர்
சட்டமன்றத் தொகுதி அம்பத்தூர்
சட்டமன்ற உறுப்பினர்

ஜோசப் சாமுவேல் (திமுக)

மக்கள் தொகை 4,78,134 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

அம்பத்தூர் (ஆங்கிலம்:Ambattur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள Central Chennai Revenue zone மத்திய சென்னை வருவாய் மண்டலத்தின் நிர்வாகத்திற்கும், அம்பத்தூர் வட்டத்தின் நிர்வாகத்திற்கும், அம்பத்தூர், நிர்வாகத் தலைமையிடம் ஆகும்

சென்னை மாநகராட்சியின் ஏழாவது மண்டல அலுவலகம் அம்பத்தூரில் தான் உள்ளது . அம்பத்தூர் மண்டலத்தில் அம்பத்தூர், பாடி,கொரட்டூர், கள்ளிக்குப்பம்,அண்ணா நகர் மேற்கு விரிவு,முகப்பேர்,புதூர் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய இடங்களும் அடங்கும்.

புவியியல்[தொகு]

இப்பகுதியின் அமைவிடம் 13°06′N 80°10′E / 13.1°N 80.16°E / 13.1; 80.16 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 17 மீட்டர் (55 அடி) உயரத்தில் இருக்கின்றது.

நீராதாரங்கள்[தொகு]

அம்பத்தூர் ஏரி

அம்பத்தூரின் நீர்-பிடிப்புப் பகுதிகளாக அம்பத்தூர் ஏரியும், [[சித்து ஒரகடம் ஏரி]]யும் உள்ளன. அம்பத்தூருக்கு வெளியே, சென்னையின் நீராதரமாக விளங்கும் புழல் ஏரியும் உள்ளது. இவற்றில், அம்பத்தூர் ஏரியைப் பொருத்தவரை நீரெடுப்பு , ஆக்கிரமிப்பு, குப்பை கொட்டுதல் ஆகிய பிரச்சினைகள் உள்ளன. (ஆக்கிரமிப்பு தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது). சித்து ஒரகடம் ஏரியைப் பொருத்தவரை, சாக்கடைநீர்க் கலப்பு, குப்பை கொட்டுதல் ஆகிய பிரச்சினைகள் உள்ளன. இந்த ஏரியைச் சுற்றிப் பூங்கா அமைக்கும் திட்டம் நிறைவுப்பெறும் தருவாயில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 4,78,134 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். அம்பத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 92.69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அம்பத்தூர் மக்கள் தொகையில் 10%, ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

பொருளாதாரம்[தொகு]

இங்கு தொழிற்பேட்டை உள்ளதால், சிறு, குறு, பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல், உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களும் உள்ளதால், பொருளாதாரம் நன்றாக உள்ளது.

அம்பத்தூர் தொழிற்பேட்டை[தொகு]

அம்பத்தூர் தொழிற்பேட்டை என்பது, சென்னை புறநகர்ப் பகுதியில் சிறப்பாக நியமிக்கப்பட்ட தொழில்துறை பகுதி. 1964 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த தொழில்துறை எஸ்டேட், 1,300 ஏக்கர் பரப்பளவில், 1,500 க்கும் மேற்பட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குச் சொந்தமானது, இது பெரும்பாலும் வாகனத் தொழில்துறை கூறுகளில் நிபுணத்துவம் பெற்றது; மற்றும் ஆடைகள் மற்றும் பொறியியல் தயாரிப்புகளிலும் நிபுணத்துவம் பெற்றது. நகரத்திலும், அதைச் சுற்றியுள்ள தமிழ்நாடு சிறு தொழில்கள் மேம்பாட்டுக் கழகத்தால் உருவாக்கப்பட்ட சுமார் பத்து தொழில்துறை தோட்டங்களில், இதுவும் ஒன்றாகும்.

மருத்துவமனைகள்[தொகு]

அம்பத்தூரில் உள்ள முக்கிய மருத்துவமனைகளின் பட்டியல்:

 • சர் ஐவன் ஸ்டெட்போர்டு மருத்துவமனை
 • Dr. ரவீந்திரன் ஹெல்த் கேர் மையம்
 • எஸ்வீ மருத்துவமனை
 • பி.எம்.மருத்துவமனை
 • மகாலக்‌ஷ்மி மருத்துவமனை
 • தேஜா மருத்துவமனை
 • மஹாலட்சுமி இண்டஸ்டிரியல் ட்ராமா கேர் & டயாப்படிக் செண்டர்.

போக்குவரத்து வசதிகள்[தொகு]

பேருந்து வசதி

திருநின்றவூர்,பட்டாபிராம், ஆவடி, புதூர், கள்ளிக்குப்பம், செங்குன்றம் ஆகிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் சென்னை நகருக்குள் செல்ல வேண்டிய அனைத்து பேருந்துகளும், அம்பத்தூர் வழியாக இயக்கப்படுகின்றன.

இரயில் போக்குவரத்து வசதி

சென்னை புறநகர் இரயில்வே அமைப்பின், சென்னை மத்தி - அரக்கோணம் பிரிவின் முக்கிய இரயில் நிலையங்களில் ஒன்று அம்பத்தூர் தொடருந்து நிலையம். இது சென்னை சென்ட்ரல் இரயில் நிலைய வளாக மையத்திற்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள, சென்னையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள இரயில் நிலையம் ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 19.18 மீட்டர் உயரத்தில் அம்பத்தூரில் உள்ள வரதராஜபுரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து, சென்னை சென்ட்ரல், சென்னைக் கடற்கரை, வேளச்சேரி, அரக்கோணம், திருத்தணி, வேலூர், திருப்பதி மற்றும் காஞ்சிபுரம், திருமால்பூர், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரை செல்லும் சுற்று இரயிலும், அம்பத்தூர் நின்று செல்லும். சென்னைப் புறநகர் அனைத்து ரயில்களும், அம்பத்தூரில் நின்று செல்லும். அம்பத்தூர் இரயில் நிலையத்தில் இருந்து இரயிலில், சென்னை சென்ட்ரல் 30 நிமிடங்களிலும், வில்லிவாக்கம் 10 நிமிடங்களிலும், பெரம்பூர் 15 நிமிடங்களிலும் செல்ல முடியும்.

கல்வி நிறுவனங்கள்[தொகு]

அரசு மற்றும் அரசு-உதவி பெறும் பள்ளிகள்[தொகு]

சர் ராமசாமி முதலியார் மேனிலைப்பள்ளி
 1. சர் ராமசாமி முதலியார் மேனிலைப்பள்ளி.
 2. பெருந்தலைவர் காமராசர் அரசு மகளிர் மேனிலைப்பள்ளி.
 3. பி.ஜே.குப்தா அரசு உயர்நிலைப்பள்ளி.
 4. திருவேங்கட நகர் உயர்நிலைப்பள்ளி.

சுயநிதி/பதின்நிலை (நிறைநிலைப்) பள்ளிகள்[தொகு]

 1. டி.ஐ.நிறைநிலை மேனிலைப்பள்ளி.
 2. ஜி.கே.ஷெட்டி விவேகானந்தா வித்யாலயா. (சி. பி. எசு. ஈ)
 3. ஹுசைன் மெமோரியல் மாடல் பதின்நிலை மேனிலைப்பள்ளி.
 4. புனித ஜோசப் பதின்நிலை மேனிலைப்பள்ளி.
 5. சேது பாஸ்கரா நிறைநிலை மேனிலைப்பள்ளி. [புதூர்][6]
 6. வேலம்மாள் நிறைநிலை மேனிலைப்பள்ளி. [சூரப்பட்டு]
 7. எபிநேசர் மார்கசு நிறைநிலை மேனிலைப்பள்ளி [புதூர்]
 8. இம்மானுவேல் மெதடிஸ்ட் நிறைநிலை மேனிலைப்பள்ளி.[கள்ளிக்குப்பம்]
 9. ஸ்ரீ வித்யாநிகேதன் நிறைநிலைப் பள்ளி.[பாரதி நகர்]

கல்லூரிகள்[தொகு]

 1. வேலம்மாள் பொறியியல் கல்லூரி. [சூரப்பட்டு]
 2. அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.[மேனாம்பேடு]
 3. பென்சன் காலேஜ் ஆவ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அன் கலினரி ஆர்ட்ஸ்.[அம்பத்தூர்]
 4. சோகா இகேதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. [மாதனாங்குப்பம்]

பொழுதுபோக்கு[தொகு]

திருவேங்கட நகர் பூங்கா (11 அக்டோபர் 2013இல் திறக்கப்பட்டது)

திரையரங்குகள்[தொகு]

ராக்கி திரையரங்கம்

முருகன் திரையரங்கம்

ஆதாரங்கள்[தொகு]

 1. 1.0 1.1 [இந்திய 2011 மக்கள்தொகை கணக்கெடுப்புhttp://www.census.tn.nic.in/index.php?ppt2.php]
 2. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 4. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 5. "Ambattur". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 19, 2006.
 6. http://www.sethubhaskara.in

வெளியிணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பத்தூர்&oldid=2995158" இருந்து மீள்விக்கப்பட்டது