எண்ணூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எண்ணூர்
—  புறநகர்  —
எண்ணூர்
இருப்பிடம்: எண்ணூர்
, சென்னை , இந்தியா
அமைவிடம் 13°13′03″N 80°19′18″E / 13.2175°N 80.32155°E / 13.2175; 80.32155ஆள்கூறுகள்: 13°13′03″N 80°19′18″E / 13.2175°N 80.32155°E / 13.2175; 80.32155
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். ஜெ. விஜய ராணி, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி வட சென்னை
மக்களவை உறுப்பினர்

கலாநிதி வீராசாமி

திட்டமிடல் முகமை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


எண்ணூர் (ஆங்கிலம்: Ennore) இந்திய மாநகரம் சென்னையின் நகர்ப் பகுதிகளில் ஒன்றாகும். சென்னையின் வடக்கே கொறத்தலையார் ஆறு, எண்ணூர் சிறுகுடா மற்றும் வங்காள விரிகுடா கடல் என முப்புறமும் நீர் சூழ்ந்த தீபகற்ப நிலப்பகுதியாக விளங்குகிறது. எண்ணூர் சிறுகுடா எண்ணூரையும் எண்ணூர் துறைமுகத்தையும் பிரிக்கிறது. இது அண்ணா நகர், சாசுத்திரி நகர், நேரு நகர், எல்லையம்மன் கோயில் தெரு, சிவன்படை வீதி, கமலம்மா நகர், திலகர் நகர், காந்தி நகர், காவேரி நகர், கிரிப்பா தோட்டம், சீயோன் நகர், எம். சி. ஆர். நகர் (RS Road), சஞ்சய் காந்தி நகர், காட்டுக்குப்பம், கொட்டங்குப்பம், வள்ளுவர் நகர், காமராசு நகர், செயலலிதா நகர் (புதிய வ. உ. சி. நகர்), சத்தியவாணி முத்து நகர், உலகநாதபுரம், எண்ணூர் குப்பம், முகத்துவாரக் குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், சின்ன குப்பம், பெரியகுப்பம் எர்ணாவூர் குப்பம், எர்ணாவூர், அன்னை சிவகாமி நகர் (பர்மா நகர்) இந்திராகாந்தி குப்பம், நேத்தாசி நகர், பாரதியார நகர் வடக்கு பாரதியார் நகர், ராமகிருசுணா நகர் போன்ற ஊர்களை உள்ளடக்கியது. கிழக்கே கடலும், மேற்கே கடலில் கலக்கும் பக்கிங்காம் கால்வாயும் ஓடுகிறது.

முருகன் கோயில், மசூதி, உலகாத்தம்மன் ஆலயம், புனித சூசையப்பர் ஆலயம், விநாயகர் கோவில், பொற்காளியம்மன் ஆலயம் குறிப்பிடத்தக்கவை.

அனல் மின் நிலையம், அசோக் லேலாண்ட், பவுண்டிரீ, பாரி, கோத்தாரி என தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன.

எண்ணூர் சிறுகுடாவில் சூரிய மறைவு

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

எண்ணூர் துறைமுக கப்பல் மோதல் விபத்து

மேற்கோள்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ennore
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது."https://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணூர்&oldid=3627372" இருந்து மீள்விக்கப்பட்டது