செங்குன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செங்குன்றம்
K k nagar
locality
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
வட்டம்மாதவரம்
அரையம் (Metro)சென்னை
ஏற்றம்3 m (10 ft)
Languages
 • Officialதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டெண்600052
தொலைபேசிக் குறியீடு044
வாகனப் பதிவுTN-20-xxxx & TN-18-xxxx(new)
Planning agencyCMDA
நகரம்சென்னை
மக்களவைத் தொகுதிவடசென்னை
மாநில சட்டமன்றத் தொகுதிமாதவரம்

செங்குன்றம் (ஆங்கிலம்: Redhills), தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் வட்டம், நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் உள்ள ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

அமைவிடம்[தொகு]

இது சென்னை நகரத்திலிருந்து வட-மேற்கு திசையில் சுமார் 18 கி.மீ. தொலைவில், புழல் நீர் தேக்கத்தின் கரையில், சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிறிய நகரம் "செங்குன்றம்". இங்கு செங்குன்றம் ஏரி உள்ள்து.
செங்குன்றம், ஆவடி நகரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவிலும், பெரிய பாளையத்திலிருந்து 25 கி.மீ. தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான திருவள்ளூரிலிருந்து 37 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. பெரிய வடக்கத்திய நெடுஞ்சாலையில் (GNT) இந்நகரம் அமைந்துள்ளதால், சென்னையிலிருந்து வடக்கு நோக்கி செல்பவர்களுக்கு ஒரு முக்கிய பகுதியாக இது விளங்கிவருகின்றது. சென்னை நகரத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும், புழல் மற்றும் சோழவரம் ஏரிகளின் இடையில் இந்நகரம் அமைந்துள்ளதால் நிலத்தடி நீர் வளம் மிக்கதாக உள்ளது.
புழல் ஏரியின் மேற்கு கரைப் பகுதிகளில் வளமிக்க செம்மண் குன்றுகள் முன்னர் பெருமளவில் அமைந்திருந்தமையால் சிவந்த குன்று என பொருள்படும் செங்குன்றம் என்ற பெயர் இப்பகுதிக்கு வழங்கப்படுகிறது.

இயற்கை அமைப்பு[தொகு]

செங்குன்றம் - என்ற பெயரே, இந்நகரத்திற்கு இயற்கை வழக்கிய ஒரு கொடை. இப்பகுதியை சுற்றிலுமிருந்த செம்மண் குன்றுகள் இன்று முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. மிஞ்சிய சில பகுதிகளை செங்குன்றம்-திருவள்ளூர் சாலையின் சில இடங்களில் இன்றும் காணலாம். சென்குன்றம் நகரம் தன்னுடைய பழைய இயற்கை வளங்களை இழந்துவிட்டது. மிஞ்சியிருப்பதெல்லாம், புழல் நீர் தேக்கம் ஒன்று மட்டும்தான். முன்னர் விளை நிலங்களாக இருந்த பகுதிகள் தற்போது குடியிருப்பு பகுதிகளாகிவிட்டது. சாலையின் இரு மருங்கிலும் இருந்த பெரிய புளியமரங்கள் வெட்டப்பட்டு சாலைகள் அகலமாக்கப்பட்டதும் இதற்கு முக்கிய காரணம்.

சுற்றுப்புற பகுதிகள்[தொகு]

தொண்டை மண்டலத்தின் 24 கோட்டங்களில் ஒன்றான புழல் கோட்டம் - ஞாயிறு, செங்குன்றத்திலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேலும், புழல் மத்திய சிறைச்சாலை, சோழவரம் நீர் தேக்கம், அலமாதி, அம்பத்தூர், மாதவரம், திருக்கண்டலம், பெரியபாளையம் போன்றவை செங்குன்றத்தின் சுற்றுப்புற பகுதிகளாகும்.

பொருளாதரம்[தொகு]

செங்குன்றத்தை சுற்றிலும் பல நெல்-அரிசி மண்டிகளும், நெல் ஆலைகளும் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுகளும் உள்ளது.

போக்குவரத்து[தொகு]

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை எண் 5 மற்றும் ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பு எண் 45 செங்குன்றத்தை கடந்து செல்கின்றது. மேலும், செங்குன்றம்-மாதவரம் நெடுசாலை, சிங்கபெருமாள் கோயில்-திருவள்ளூர்-செங்குன்றம் மாநில நெடுஞ்சாலை ஆகியவையும், செங்குன்றம் வழியே செல்கின்றது. சென்னை மாநகர பேருந்து போக்குவரத்துக் கழக பேருந்து சேவை, தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழக பேருந்து சேவை மற்றும் சில தனியார் பேருந்து போக்குவரத்து சேவையும் செங்குன்றத்தை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர மாநிலம் - நெல்லூர், புத்தூர், திருப்பதி, திருமலை, திருக்காளத்தி, ஐதிராபாத் ஆகிய பகுதிகளையும் சாலை வழியாக இணைக்கிறது.
அருகாமை இரயில் நிலையம் - பெரம்பூர் இரயில் நிலையம் செங்குன்றத்திலிருந்து-12 கி.மீ.
மாநகர போக்குவரத்துக் கழகம், சென்னை பேருந்து வழித்தட விவரம்

தடம் எண் புறப்படும் இடம் சேருமிடம் வழி
56K செங்குன்றம் திருவொற்றியூர் வடகரை, தர்காஸ் / வடபெரும்பாக்கம், ஆண்டார் குப்பம், எம்.எஃப்.எல்
57 செங்குன்றம் வள்ளலார் நகர் புழல், மூலக்கடை, வியாசர்பாடி
57A ஆங்காடு வள்ளலார் நகர் பாடியநல்லூர், செங்குன்றம், புழல், மூலக்கடை, வியாசர்பாடி
57B பொத்தூர் வள்ளலார் நகர் பம்மது குளம், காந்தி நகர், செங்குன்றம், புழல், மூலக்கடை, வியாசர்பாடி
57C அருமந்தை வள்ளலார் நகர் புதூர், சோத்துப்பாக்கம், செங்குன்றம், புழல், மூலக்கடை, வியாசர்பாடி
57D பூச்சி அத்திப்பேடு பாரிமுனை அலமாதி, எடபாளையம், காந்திநகர், செங்குன்றம், புழல், மூலக்கடை, வியாசர்பாடி, வள்ளலார் நகர், கிளைவ்பேட்டரி, பீச் ஸ்டேஷன்
57E செங்குன்றம் விச்சூர் பாடியநல்லூர், சோழவரம், பூதூர், அருமந்தை, திருநிலை
57F காரணோடை பாரிமுனை சோழவரம், பாடியநல்லூர், செங்குன்றம், புழல், மூலக்கடை, வியாசர்பாடி, வள்ளலார் நகர், கிளைவ்பேட்டரி, பீச் ஸ்டேஷன்
57G செங்குன்றம் பெருமுல்லைவாயல் பாடியநல்லூர், சோழவரம், பூதூர், அருமந்தை, ஞாயிறு
57M அலமாதி பாரிமுனை எடபாளையம், காந்தி நகர், செங்குன்றம், புழல், மூலக்கடை, வியாசர்பாடி, வள்ளலார் நகர், கிளைவ்பேட்டரி, பீச் ஸ்டேஷன்
58A செங்குன்றம் பாரிமுனை வடகரை, வடபெரும்பாக்கம், மாதவரம், தபால் பெட்டி, மூலக்கடை, வியாசர்பாடி, வள்ளலார் நகர், கிளைவ்பேட்டரி, பீச் ஸ்டேஷன்
58H புதிய எருமைவெட்டி பாளையம் வள்ளலார் நகர் ஆத்தூர், காரணோடை, சோழவரம், செங்குன்றம், புழல், மூலக்கடை, வியாசர்பாடி
62 செங்குன்றம் பூவிருந்தவல்லி புழல், சூரப்பட்டு, புதூர், அம்பத்தூர் ஓ.டீ, திருமுல்லைவாயல், ஆவடி, கோவர்த்தனகிரி, கரையான்சாவடி
62A செங்குன்றம் அம்பத்தூர் தொழிற்பேட்டை புழல், சூரப்பட்டு, புதூர், அம்பத்தூர் ஓ,டீ
114 செங்குன்றம் வண்டலூர் உயிரியல் பூங்கா புழல், ரெட்டேரி, செந்தில்நகர், பாடி-லூகாஸ், அண்ணாநகர் (மேற்கு), கோயம்பேடு, வடபழனி, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர்
114A செங்குன்றம் அயனாவரம் புழல், ரெட்டேரி, இராஜமங்களம் காவல் நிலையம், சீனிவாசாநகர், வில்லிவாக்கம், ஐ.சி.எப்
114C ஞாயிறு கோயம்பேடு பேருந்து நிலையம் அருமந்தை, பூதூர், சோத்துப்பாக்கம், செங்குன்றம், புழல், ரெட்டேரி, அண்ணா நகர் (மே)
114T செங்குன்றம் தியாகராய நகர் புழல், ரெட்டேரி, அண்ணாநகர் (மே), கோயம்பேடு, வடபழனி, உஸ்மான் சாலை
157 செங்குன்றம் திருவொற்றியூர் புழல், மூலக்கடை, சர்மா நகர், மகாகவி பாரதி நகர் (கிழக்கு), எழில் நகர், கொருக்குப்பேட்டை, தண்டையார் பேட்டை, சுங்கஞ்சாவடி, தேரடி

கல்வி நிறுவனங்கள்[தொகு]

செங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள கல்வி நிறுவனங்கள்:
ஆல்பா மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி, மொண்டியம்மன் நகர்
டான்போஸ்கோ மெட்ரிக்குலேஷன் பள்ளி, கிராண்ட்லைன்
புனித மேரி மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி, திருவள்ளூர் கூட்டுசாலை
எலைட் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி, திலகர் நகர்
அரசு மேனிலைப் பள்ளி (ஆண்கள்), செங்குன்றம்
அரசு மேனிலைப் பள்ளி (பெண்கள்), செங்குன்றம்
அரசு ஆதி திராவிடர் நல ஆண்கள் மேனிலைப் பள்ளி, செங்குன்றம் வடகரை
அரசு ஆதி திராவிடர் நல பெண்கள் மேனிலைப் பள்ளி, செங்குன்றம் வடகரை
சில்ரன்ஸ் பேரடைஸ் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி, மொண்டியம்மன் நகர்
விவேகானந்தா மெட்ரிக்குலேஷன் பள்ளி, அறிஞர் அண்ணா நகர்
நேஷ்னல் லோட்டஸ் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி, காமராஜர் நகர்
ஹோலி சைல்ட் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி, புள்ளி லைன்
கென்னடி மெட்ரிக்குலேஷன் பள்ளி, செங்குன்றன்
டாக்டர். சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி, கிராண்ட்லைன்
புனித. ஜோசப் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி, செங்குன்றம்
நல்லழகு பாலிடெக்னிக், கிராண்ட்லைன்
ஆர். பி. கோதி ஜெயின் பெண்கள் கலைக் கல்லூரி, சோத்துப்பாக்கம்
கோஜன் பொறியியல் கல்லூரி, எடபாளையம்

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Red Hills, Chennai
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. மாதவரம் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்குன்றம்&oldid=3452953" இருந்து மீள்விக்கப்பட்டது