விநாயகபுரம்

ஆள்கூறுகள்: 13°08′28.0″N 80°12′30.6″E / 13.141111°N 80.208500°E / 13.141111; 80.208500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விநாயகபுரம்
புறநகர்ப் பகுதி
விநாயகபுரம் is located in சென்னை
விநாயகபுரம்
விநாயகபுரம்
விநாயகபுரம் (சென்னை)
விநாயகபுரம் is located in தமிழ் நாடு
விநாயகபுரம்
விநாயகபுரம்
விநாயகபுரம் (தமிழ் நாடு)
ஆள்கூறுகள்: 13°08′28.0″N 80°12′30.6″E / 13.141111°N 80.208500°E / 13.141111; 80.208500
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர்
பெருநகரப் பகுதிசென்னை
ஏற்றம்33 m (108 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்600 099
வாகனப் பதிவுTN-05-yy-xxxx

விநாயகபுரம் (Vinayagapuram) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி ஆகும். சென்னை நகரின் வடக்கு புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான புழலை அடுத்து உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியாகும்.

அமைவிடமும் சுற்றுப் பகுதிகளும்[தொகு]

விநாயகபுரம் தேசிய நெடுஞ்சாலை 5ஐ அடுத்து உள்ளது. லூகாசு டிவிஎஸ் சந்திப்பில் உள்ள வளையச் சாலை பாடி, இலட்சுமிபுரம் (சரசுவதி நகர்), அண்ணாநகர், புழல், வில்லிவாக்கம் ஆகியவற்றை இணைக்கிறது. 2011இல் விநாயகபுரம் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. விரைவாக வளர்ந்துவரும் பகுதிகளில் ஒன்றாக விநாயகபுரம் விளங்குகிறது.

போக்குவரத்து[தொகு]

மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) விநாயகபுரத்திலிருந்து சென்னை நகரின் பல பகுதிகளுக்கும் பேருந்து சேவைகளை இயக்குகிறது. தடம் எண் 142 - பிராட்வே, 29 விரிவு -மந்தைவெளி ஆகியன விநாயகபுரத்திலிருந்து இயங்குகின்றன. செங்குன்றத்திலிருந்து வரும் பேருந்துகள் இங்கு நின்று செல்கின்றன; 242 - செங்குன்றம்- பிராட்வே, C70 (செங்குன்றம் - கிண்டி),42C(பாரிசு - டீச்சர்சு காலனி). பகிர் தானிகள் இங்குப் போக்குவரத்துக்கு பெரும் துணையாக உள்ளன. இங்கு தொடர்வண்டி இணைப்பு இல்லாததால் இங்குள்ளவர்கள் அருகில் உள்ள வில்லிவாக்கம் அல்லது பெரம்பூர் தொடர்வண்டி நிலையங்களுக்குச் செல்கிறார்கள்.

கல்வி தாபனங்கள்[தொகு]

இங்கு வேலம்மாள் பொறியியல் கல்லூரி (சூரப்பேட்டை), வேலம்மாள் மெட்றிகுலேசன் உயர்நிலைப் பள்ளி, இன்ஃபன்ட் இயேசு மெட்றிகுலேசன் பள்ளி, எம்டிஎம் மெட்றிகுலேசன் பள்ளி, கிங்சு மெட்றிகுலேசன் பள்ளி ஆகியன உள்ளன.

நகர்புரப் பகுதிகள்[தொகு]

புத்தகரம், பால விநாயகர் கோவில் தெரு, ஸ்ரீ குமரன் நகர், எஸ்.பி.ஓ.ஏ டீச்சர்சு நகர், செக்ரடேரியட் காலனி, சரசுவதி நகர், சூரப்பேட்டை, கல்பாளையம், ரெட்டேரி, டீச்சர்சு காலனி,அய்யப்பன் நகர்.

கோவில்களும் தேவாலயங்களும்[தொகு]

இங்குள்ள இந்துக் கோவில்கள் : பால விநாயகர் கோவில், தொனமையான பெருமாள் கோவில், பார்வதியம்மன் கோவில், விஜயலட்சுமி கோவில்,அய்யப்பன் கோவில்,ஆஞ்சநேயர் கோவில். கிறித்தவக் கோவில்கள்: ஈ.சி.ஐ தேவாலயம், சியோன் கார்டன் ஏஜி தேவாலயம், சி.எஸ்.ஐ தேவாலயம்

மருத்துவமனைகள்[தொகு]

லேக் வியூ மருத்துவமனையும் மாயா மருத்துவமனையும் இங்குள்ள முதன்மையான மருத்துவமனைகளாகும். விநாயகபுரம் பேருந்து நிலையம் அருகே பல் மருத்துவத்திற்கான சிட்டி டென்ட்டல் கேர் மருத்துவமனை உள்ளது. இவற்றைத் தவிர பல சிறு மருத்துவமனைகள் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விநாயகபுரம்&oldid=3854598" இலிருந்து மீள்விக்கப்பட்டது