பெரவள்ளூர்
தோற்றம்
பெரவள்ளூர் | |
|---|---|
| ஆள்கூறுகள்: 13°07′04.0″N 80°13′53.8″E / 13.117778°N 80.231611°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | சென்னை |
| பெருநகரம் | சென்னை |
| ஏற்றம் | 56 m (184 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| அ.கு.எ. | 600 082 |
| தொலைபேசி குறியீடு | 044xxxxxxxx |
| திட்ட முகமை | செ.பெ.வ.கு. |
| நகரம் | சென்னை |
| மக்களவைத் தொகுதி | வட சென்னை |
| சட்டமன்றத் தொகுதி | கொளத்தூர் |
| உள்ளாட்சி அமைப்பு | பெருநகர சென்னை மாநகராட்சி |
பெரவள்ளூர் (Peravallur) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில், சென்னையின் மிக வேகமாக வளா்ச்சி பெற்ற மக்கள் குடியிருப்புப் பகுதி ஆகும்.[1]

அமைவிடம்
[தொகு]- பெரம்பூரிலிருந்து இரட்டைஏரி நோக்கிச் செல்லுகிற போது, இடையி்ல் அமைந்திருக்கும் இடமே, பெரவள்ளூர் ஆகும். இது வடசென்னைப் பகுதியில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.
- கடல் மட்டத்திலிருந்து சுமார் 31.83 மீ. உயரத்தில், (13°07′04″N 80°13′48″E / 13.1178°N 80.2300°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, பெரவள்ளூர் அமைந்துள்ளது.
அருகிலுள்ள இடங்கள்
[தொகு]கொளத்தூர், அகரம், பெரியார் நகர், திரு. வி. க. நகர், ஜவஹர் நகர், செம்பியம் மற்றும் பெரம்பூர் ஆகியன பெரவள்ளூர் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
முக்கிய சாலைகள்
[தொகு]பேப்பர் மில்ஸ் சாலை, SRP கோவில் தெரு (வடக்கு), இராம் நகர் தெருக்கள் ஆகியவை இங்குள்ள முக்கிய சாலைகளாகும்.
அண்ணாசிலை மற்றும் காமராசா் சிலை முதலியன முக்கிய சாலை சந்திப்புகளில் தோற்றமளிக்கின்றன.
பள்ளிகள்
[தொகு]தொன் போஸ்கோ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி, விவேகானந்தா சி.பி.எஸ்.இ. பள்ளி போன்ற பள்ளிகள் இப்பகுதியில் இயங்கி வருகின்றன.
வழிபாட்டுத் தலங்கள்
[தொகு]- உயிர்த்த இயேசு கிறிஸ்து தேவாலயம், தொன்போஸ்கோ ஆலயம், செல்லியம்மன் கோவில் போன்ற தலங்களும் உள்ளன. இந்தப் பகுதியில் திருப்பதிக் குடை மிகச் சிறப்பாக இருக்கும். தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிற பெரவள்ளூர் சுந்தரராஜ பெருமாள் கோயில்,[2] பெரவள்ளூர் சிந்தாமணி விநாயகர் கோயில்[3] மற்றும் பெரவள்ளூர் தான்தோன்றியம்மன் கோயில்[4] ஆகியவை பெரவள்ளூர் பகுதியில் அமையப் பெற்றுள்ளன.
அரசியல்
[தொகு]பெரவள்ளூர் பகுதியானது, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் வட சென்னை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.[5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ V. Subburaj (2006). Tourist Guide to Chennai (in ஆங்கிலம்). Sura Books. ISBN 978-81-7478-040-9.
- ↑ "Arulmigu Sundararaja Perumal Temple, Peravallur, Chennai - 600082, Chennai District [TM000097].,". hrce.tn.gov.in. Retrieved 2023-07-06.
- ↑ "Arulmigu Chindamani Vinayagar Temple, Peravallur, Chennai - 600082, Chennai District [TM000443].,Chindamani Vinayagar,Chindamani Vinayagar". hrce.tn.gov.in. Retrieved 2023-07-06.
- ↑ "Arulmigu Thanthonriyamman and Selliyamman Temple, Peravallur, Chennai - 600082, Chennai District [TM000318].,Thanthodriyamman selliyamman,Thanthodriyamman selliyamman". hrce.tn.gov.in. Retrieved 2023-07-06.
- ↑ "Threads". www.threads.com. Retrieved 2026-04-14.
- ↑ செய்திப்பிரிவு (2024-04-10). "வட சென்னை மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024". Hindu Tamil Thisai. Retrieved 2026-04-14.