உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியார் நகர் (சென்னை)

ஆள்கூறுகள்: 13°06′55.9″N 80°13′24.4″E / 13.115528°N 80.223444°E / 13.115528; 80.223444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரியார் நகர் (சென்னை)
Periyar Nagar
பெரியார் நகர்
புறநகர்ப் பகுதி
பெரியார் நகர் (சென்னை) Periyar Nagar is located in சென்னை
பெரியார் நகர் (சென்னை) Periyar Nagar
பெரியார் நகர் (சென்னை)
Periyar Nagar
பெரியார் நகர் (சென்னை) Periyar Nagar is located in தமிழ் நாடு
பெரியார் நகர் (சென்னை) Periyar Nagar
பெரியார் நகர் (சென்னை)
Periyar Nagar
பெரியார் நகர் (சென்னை) Periyar Nagar is located in இந்தியா
பெரியார் நகர் (சென்னை) Periyar Nagar
பெரியார் நகர் (சென்னை)
Periyar Nagar
ஆள்கூறுகள்: 13°06′55.9″N 80°13′24.4″E / 13.115528°N 80.223444°E / 13.115528; 80.223444
நாடு இந்தியா
மாநிலம்=Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
600 082
தொலைபேசி குறியீடு044
வாகனப் பதிவுTN 05 - வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சென்னை (வடக்கு)
அருகிலுள்ள ஊர்கள்வில்லிவாக்கம், கொளத்தூர் (சென்னை), பெரவள்ளூர், பெரம்பூர், அகரம் (சென்னை), திரு. வி.க. நகர், செம்பியம், ஜவஹர் நகர், ஜெனரல் குமாரமங்கலம் காலனி
மாநகராட்சிபெருநகர சென்னை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிவடசென்னை
சட்டமன்றத் தொகுதிகொளத்தூர்
மக்களவைத் தொகுதி உறுப்பினர்கலாநிதி வீராசாமி
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்மு.க.ஸ்டாலின்
இணையதளம்https://chennaicorporation.gov.in

பெரியார் நகர் (Periyar Nagar)[1] இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னையின் வடமேற்கில் அமைந்துள்ள மக்கள் தொகை அடர்த்தியான புறநகர்ப் பகுதியாகும். வாகன எரிபொருட்கள் விற்பனை நிலையங்கள், துணிக்கடைகள், மருத்துவ வசதிகள், உடற்பயிற்சி மையங்கள், காய்கனிகள் விற்பனைக் கடைகள், விளையாட்டுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள், உணவகங்கள், உடல், முக, சிகை அலங்காரங்கள் நிலையங்கள், தோட்டக்கலை சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை நிலையங்கள் என பலதரப்பட்ட மக்களின் தேவைக்கேற்ப சேவைகள் நிறைந்த பகுதியாக முக்கியத்துவம் பெறுகிறது.

அமைவிடம்

[தொகு]

இந்த ஊர் 13.115540°N 80.223432°E என்ற புவியியல் ஆள்கூறுகளில் அமைந்துள்ளது. வில்லிவாக்கம், கொளத்தூர் (சென்னை), பெரவள்ளூர், ஜெனரல் குமாரமங்கலம் காலனி, அகரம், திரு. வி.க. நகர், ஜவஹர் நகர், செம்பியம் மற்றும் பெரம்பூர் ஆகிய ஊர்களுக்கும் அருகில் பெரியார் நகர் அமைந்துள்ளது.

போக்குவரத்து

[தொகு]

பேருந்து போக்குவரத்து

[தொகு]

இங்கு பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. அதிகாலை முதல் இரவு வரை இங்கிருந்து சென்னை நகரின் முக்கிய பகுதிகளுக்கு பேருந்து சேவைகள் தங்கு தடையின்றி கிடைக்கப் பெறுகின்றன.[2]

தொடருந்து போக்குவரத்து

[தொகு]

அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள்:

வானூர்திப் போக்குவரத்து

[தொகு]

சென்னை பன்னாட்டு விமான நிலையம் இங்கிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

கல்வி

[தொகு]

பள்ளிக்கூடங்கள்

[தொகு]

பெரியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஒன்றும் தனியார் பள்ளிகள் சிலவும் உள்ளன.

கல்லூரி

[தொகு]

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இந்தாண்டு துவக்கப்பட்டுள்ள 'அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி' தற்காலிகமாக, கொளத்தூர் எவர்வின் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளது. இது இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

மருத்துவ வசதி

[தொகு]

இங்குள்ள 'அரசு புறநகர் மருத்துவமனை' நவீன வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை[3] ஆகும். பெரியார் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலுள்ள மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

தொழில்

[தொகு]

உலகப் பிரசித்தி பெற்ற பெரம்பூர் 'இரயில் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை', இவ்வூருக்கு அருகில் அமைந்துள்ளது. இவ்வூர் மக்களில் பெரும்பாலானோர் இங்கு வேலை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

[தொகு]

பூங்கா

[தொகு]

பெருநகர சென்னை மாநகராட்சி பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உள்ளது.

விளையாட்டு மைதானம்

[தொகு]

பெருநகர சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானம் ஒன்றும் உள்ளது.

வழிபாட்டுத் தலங்கள்

[தொகு]

இந்துக் கோயில்கள், கிறித்தவ ஆலயங்கள், முஸ்லீம் பள்ளிவாசல்கள் என மக்களுக்கு ஆன்மீக வழிகாட்டுதல் தலங்கள் உள்ள ஊர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Āṉanta vikaṭaṉ: Ananda vikatan. Vol. 69. Vācaṉ Paplikē sans. 1994. p. 68.
  2. V Subburaj (2006). Tourist Guide to Chennai (in ஆங்கிலம்). Motilal Books UK. p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788174780409, 8174780408. {{cite book}}: Check |isbn= value: invalid character (help)
  3. NEELA GANGULY (2019). SLUMS OF INDIA (in ஆங்கிலம்). p. 73.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியார்_நகர்_(சென்னை)&oldid=3613976" இலிருந்து மீள்விக்கப்பட்டது