அகரம் (சென்னை)

ஆள்கூறுகள்: 13°06′41.8″N 80°13′45.8″E / 13.111611°N 80.229389°E / 13.111611; 80.229389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகரம் (சென்னை)
அகரம் (பெரம்பூர்)
புறநகர்ப் பகுதி
அகரம் (சென்னை) is located in சென்னை
அகரம் (சென்னை)
அகரம் (சென்னை)
அகரம் (சென்னை) is located in தமிழ் நாடு
அகரம் (சென்னை)
அகரம் (சென்னை)
அகரம் (சென்னை) is located in இந்தியா
அகரம் (சென்னை)
அகரம் (சென்னை)
ஆள்கூறுகள்: 13°06′41.8″N 80°13′45.8″E / 13.111611°N 80.229389°E / 13.111611; 80.229389
நாடு இந்தியா
மாநிலம்=Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
ஏற்றம்58 m (190 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்600 082
தொலைபேசி குறியீடு044xxxxxxxx
வாகனப் பதிவுTN 05 - வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சென்னை (வடக்கு)
அருகிலுள்ள ஊர்கள்அயனாவரம், பெரியார் நகர் (சென்னை), வில்லிவாக்கம், கொளத்தூர் (சென்னை), பெரவள்ளூர், பெரம்பூர், செம்பியம், ஜவஹர் நகர், ஜெனரல் குமாரமங்கலம் காலனி, திரு. வி. க. நகர்
மாநகராட்சிபெருநகர சென்னை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிவடசென்னை
சட்டமன்றத் தொகுதிகொளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி உறுப்பினர்கலாநிதி வீராசாமி
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்மு. க. ஸ்டாலின்
இணையதளம்https://chennaicorporation.gov.in

அகரம் என்ற சென்னை, அகரம்[1] இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னையின் வடமேற்கில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி.

அமைவிடம்[தொகு]

அகரம் நகரின் அமைவிடம் 13.1116°N80.2294°E.

அருகிலுள்ள ஊர்கள்[தொகு]

அயனாவரம், வில்லிவாக்கம், கொளத்தூர் (சென்னை), பெரவள்ளூர், ஜெனரல் குமாரமங்கலம் காலனி, பெரியார் நகர், ஜவஹர் நகர், திரு. வி. க. நகர், செம்பியம், பெரம்பூர் ஆகிய ஊர்கள் அகரத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளன.

போக்குவரத்து[தொகு]

பேருந்து போக்குவரத்து[தொகு]

அகரம் நகருக்கு அருகிலுள்ள நகரப் பேருந்து நிலையங்கள்: பெரியார் நகர் மாநகரப் பேருந்து நிலையம் மற்றும் திரு. வி. க. நகர் மாநகரப் பேருந்து நிலையம். சென்னை நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு சென்று வர, மாநகரப் பேருந்து சேவைகள் மிக உதவிகரமாக உள்ளன.

தொடருந்து போக்குவரத்து[தொகு]

பெரம்பூர் கேரேஜ் வொர்க்ஸ் தொடருந்து நிலையம், பெரம்பூர் லோகோ வொரக்ஸ் தொடருந்து நிலையம், வில்லிவாக்கம் தொடருந்து நிலையம், பெரம்பூர் தொடருந்து நிலையம் ஆகிய மேற்குறிப்பிட்ட தொடருந்து நிலையங்கள் மூலம் இவ்வூர் மக்கள் பயன் பெறுகின்றனர்.

முக்கிய சாலைகள்[தொகு]

சுந்தரராஜ பெருமாள் கோயில் (தெற்கு) சாலை, தான்தோன்றி அம்மன் கோயில் சாலை, (பாலவாயல் தெரு) Palavayal road[2], லோகோ வொர்க்ஸ் சாலை, ஜவஹர் நகர் பிரதான சாலை, பேப்பர் மில்ஸ் சாலை, பேடன் பவுல் சாலை, சிதம்பரம் தெரு, பல்லார்டு தெரு முதலியவை இங்குள்ள குறிப்பிடத்தக்க சாலைகள்.

கல்வி[தொகு]

பள்ளிக்கூடங்கள்[தொகு]

அகரம் ஊரில் அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் சில உள்ளன.

மருத்துவ வசதி[தொகு]

அகரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சில தனியார் மருத்துவமனைகள், இங்கு சுற்றியுள்ள ஊர்களிலுள்ள மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

தொழில்கள்[தொகு]

அகரம் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள, பெரம்பூர் 'இரயில் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை' மூலம் இவ்வூர் மக்களில் பெரும்பாலானோருக்கு நிரந்தர மற்றும் தற்காலிக வேலை வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். அகரம் நகரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள 'Tafe' tractors மற்றும் விவசாயக் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், Simpson and Company, Bimetal bearings, Addison Paints and Chemicals தயாரிப்பு தொழிற்சாலை, India Pistons என்ற என்ஜின் பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்சாலை என தொழிற்சாலைகள், அகரம் நகர மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் ஏற்பட சில காரணிகள்.

பொழுதுபோக்கு[தொகு]

பூங்கா[தொகு]

'ஆனந்தன் பூங்கா' என்ற பெருநகர சென்னை மாநகராட்சி பூங்கா ஒன்று உள்ளது.

விளையாட்டு மைதானம்[தொகு]

'ஆனந்தன் விளையாட்டுத் திடல்' என்ற பெருநகர சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானம் ஒன்றும் உள்ளது.

வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

அகரம், தன்னகத்தே கொண்டுள்ள இந்துக் கோயில்கள்: அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில், அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில், அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில், அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், அருள்மிகு இலட்சுமி அம்மன் திருக்கோயில், அருள்மிகு பிரசன்ன சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், அருள்மிகு தான்தோன்றி அம்மன் திருக்கோயில், அருள்மிகு சாய்பாபா திருக்கோயில், அருள்மிகு இராதா ருக்மணி சமேத அருள்மிகு கண்ணபிரான் திருக்கோயில். மேலும், கிறித்தவ ஆலயங்கள், முஸ்லீம் பள்ளிவாசல்கள் என மக்களுக்கு ஆன்மீக வழிகாட்டுத் தலங்கள் உள்ள ஊர் அகரம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. (in ta) Periya purana ayvurai : Critical Study of the Periyapuranam, 12th century Tamil Shaivite hagiograph by Cekkilar. 4. Maraimalaiyatikal Patippakam. 1976. https://books.google.co.in/books. 
  2. Madras (India : State) (1964) (in en). Fort Saint George Gazette, Madras District Gazetteers. Superintendent, Government Press, 1908. பக். 8. https://books.google.co.in/books. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகரம்_(சென்னை)&oldid=3750428" இலிருந்து மீள்விக்கப்பட்டது