கொளத்தூர் (சென்னை)
கொளத்தூர் சென்னை, சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதி ஆகும்.
அமைவு[தொகு]
- இங்கிருந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சுமார் 8 கி.மீ. தொலைவிலும்,
- சென்னை பன்னாட்டு விமான நிலையம் சுமார் 19 கி.மீ. தொலைவிலும் உள்ளன.
- சென்னைப் புறநகர் பேருந்து நிலையமான கோயம்பேடு 8 கி.மீ. தொலைவிலும்,
- ஆந்திர மாநிலத்திற்குச் செல்லும்
நவீன பேருந்து நிலையம் 1 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன.
அருகமைந்த பகுதிகள்[தொகு]
- பெரம்பூர்,
- திரு.வி.க. நகர்,
- செம்பியம்,
- பெரவள்ளூர்,
- குமரன் நகர்,
- இலட்சுமிபுரம்,
- விநாயகபுரம்,
- அயனாவரம்,
- அகரம்,
- வில்லிவாக்கம்,
- புழல்,
- ஜவகர் நகர்,
- பொன்னியம்மன் மேடு,
- பூம்புகார் நகர்,
- பெரியார் நகர்.
அருகமைந்த இரயில் நிலையங்கள்[தொகு]
- வில்லிவாக்கம்,
- பெரம்பூர் லோகோ வொர்க்ஸ்,
- பெரம்பூர் கேரேஜ் வொர்க்ஸ்,
- பெரம்பூர்.
நெடுஞ்சாலைகள்[தொகு]
கொளத்தூரின் அருகே கல்கத்தா செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருவள்ளூர் செல்லும் சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையைக் கடக்கும் இடத்தில் பாடி சந்திப்பில் ஒரு வட்ட வடிவ மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கொளத்தூரை தொட்டுக்கொண்டு உள் வட்டச் சாலை செல்கிறது. இச்சாலை வழியாக அண்ணா நகருக்கு 10 நிமிடங்களில் செல்ல முடியும்.
அஞ்சல் குறியீட்டு எண்[தொகு]
கொளத்தூரின் அஞ்சல் குறியீட்டு எண் 600099.
பள்ளிக்கூடங்கள்[தொகு]
கொளத்தூர் பகுதியில் கீழ்கண்ட பள்ளிக்கூடங்கள் உள்ளன:
- எவர்வின் மெட்ரிக் பள்ளி
- தொன் போஸ்கோ உயர்நிலைப் பள்ளி, அண்ணா சிலை
- சதீஷ் பாலாஜி மெட்ரிக் பள்ளி
- பாலாஜி மெட்ரிக் பள்ளி
- எவர்வின் வித்யாஷ்ரம் (சி.பி.எஸ்.இ.)
- அரசு உயர்நிலைப்பள்ளி
மருத்துவமனைகள்[தொகு]
கொளத்தூர் பகுதியில் கீழ்கண்ட மருத்துவமனைகள் உள்ளன:
- டி.ஆர்.ஜே. மருத்துவமனை
- க்ளூனி மருத்துவமனை
- குமரன் மருத்துவமனை
- மாயா நர்ஸிங் ஹோம்
- பி.பி. மருத்துவமனை
திரை அரங்குகள்[தொகு]
கொளத்தூர் பகுதியில் கீழ்கண்ட திரையரங்குகள் உள்ளன.
- 'கங்கா', 'காவேரி' மற்றும் 'யமுனா' திரையரங்குகள்.
முன்னர் 'மூகாம்பிகை' மற்றும் 'குமரன்' திரையரங்குகள் இருந்தன. ஆனால் தற்போது, அவை இடிக்கப்பட்டு, அடுக்ககங்களாக மாற்றப்பட்டு விட்டன.
வண்ண மீன்கள்[தொகு]
கொளத்தூர், வண்ண மீன்கள் வளர்ப்பு மற்றும் விற்பனையில் தெற்காசியாவின் முக்கிய பங்களிப்பு மையமாக விளங்குகிறது. இங்கிருந்து, சிங்கப்பூர் மற்றும் இன்ன பிற தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வண்ண மீன்கள் ஏற்றுமதியாகின்றன.
அமைவிடம்[தொகு]