மடிப்பாக்கம்
மடிப்பாக்கம் | |
அமைவிடம் | 12°58′21″N 80°12′33″E / 12.9725°N 80.2091667°Eஆள்கூறுகள்: 12°58′21″N 80°12′33″E / 12.9725°N 80.2091667°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
வட்டம் | சோழிங்கநல்லூர் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | இரா. சீத்தாலட்சுமி, இ. ஆ. ப. [3] |
மக்கள் தொகை | 14,940 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டததில் உள்ள சோழிங்கநல்லூர் வட்டத்தில் இருக்கும் வருவாய் கிராமம் ஆகும். தற்போது இப்பகுதி பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வூர் வேளச்சேரிக்கும், நங்கைநல்லூருக்கும் அருகில் அமைந்து இருக்கிறது.
பெயர்க் காரணம்[தொகு]
மடி என்பதற்கு தூய்மை, ஆசாரம் என்ற பொருள்கள் உண்டு. வேளச்சேரியில் உள்ள பல்லவர்கால நரசிம்மர் மற்றும் தண்டீசுவரர் கோயில்களில் பணிபுரிந்து வந்த கோயில் ஊழியர்களும் அந்தணர்களும் வனாந்தரமாக இருந்த இப்பகுதியில் வாழ்ந்து வந்தனர். அதன் பொருட்டு தூய்மையானவர்களால் (மடி) நிறைந்த பகுதி எனும் பொருள்பட மடிப்பாக்கம் என்றழைக்கப்பட்டது. தமிழிலக்கணப்படி, பாக்கம் என்பது பொதுவாக கடற்கரை ஒட்டிய நிலப்பகுதியை குறிப்பதாகும்.
மக்கள் வகைப்பாடு[தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,940 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மடிப்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 88% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 90%, பெண்களின் கல்வியறிவு 85% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மடிப்பாக்கம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
கோவில்கள்[தொகு]
புகழ் பெற்ற ஐயப்பன் கோவில் மடிப்பாக்கத்தில் அமைந்துள்ளது. பொன்னியம்மன், ஒப்பிலியப்பன், வேதபுரீசுவரர் சிவன் கோவில் மற்றும் சில கோவில்களும் இங்கு உள்ளன. சனவரி முதல் தேதி அன்று ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூசைகளும் அன்னதானமும் வருடம் தோறும் நடைபெறுகின்றன.
கல்வி நிலையங்கள்[தொகு]
- சாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
- சாய்ராம் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி
- பிரின்ஸ் பதின்நிலைப் பள்ளி
- ஹோலி ஃபேமிலி பள்ளி
- ஹோலி பிரின்ஸ் பதின்நிலைப் பள்ளி
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
அமைவிடம்[தொகு]
![]() |
பள்ளிக்கரணை | கீழ்கட்டளை / மேடவாக்கம் | பல்லாவரம் | ![]() |
வேளச்சேரி | ![]() |
மூவரசம்பட்டு / நங்கநல்லூர் | ||
| ||||
![]() | ||||
ஆதம்பாக்கம் | புனித தோமையார் மலை | பழவந்தாங்கல் |