தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை
வகை | பல் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை |
---|---|
உருவாக்கம் | 10 ஆகஸ்ட் 1953 |
அமைவிடம் | சென்னை, இந்தியா 13°5′0″N 80°16′54″E / 13.08333°N 80.28167°Eஆள்கூறுகள்: 13°5′0″N 80°16′54″E / 13.08333°N 80.28167°E |
சேர்ப்பு | தமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.tngdch.ac.in/tngdch/ |
அரசு பல் மருத்துவமனை மற்றும் கல்லூரி என்றும் அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி (Tamil Nadu Government Dental College) சென்னை மருத்துவக் கல்லூரியின் ஒரு பிரிவாகும். இக்கல்லூரி நிர்வாக ரீதியாக ஒரு தனி நிறுவனம் என்றாலும், இது சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றுடன் செயல்படுகிறது.
இந்த மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 1,000 முதல் 1,500 நோயாளிகளுக்குs சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாட்டிலேயே இந்த மருத்துவமனை முதன்மையானது என்று கூறப்படுகிறது.
விரிவாக்கம்[தொகு]
2012ல், புதிய கட்டடம் ₹ 206,3 மில்லியன் செலவில் கட்டப்பட்டது. இக்கட்டடத்தை அன்றைய தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். புதிய கட்டிடம் இரண்டு தளங்களைக் கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் 300 நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்கும் திறன் கொண்டது. வெளி நோயாளி தொகுதி மற்றும் பிற வசதிகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டன.[1]
மேலும் காண்க[தொகு]
- தமிழ்நாடு அரசின் கல்வி நிறுவனங்களின் பட்டியல்
- இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல்
- சென்னையில் ஹெல்த்கேர்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ .