தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை

ஆள்கூறுகள்: 13°5′0″N 80°16′54″E / 13.08333°N 80.28167°E / 13.08333; 80.28167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி
வகைபல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
உருவாக்கம்10 ஆகஸ்ட் 1953
அமைவிடம்,
13°5′0″N 80°16′54″E / 13.08333°N 80.28167°E / 13.08333; 80.28167
சேர்ப்புதமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.tngdch.ac.in/tngdch/

அரசு பல் மருத்துவமனை மற்றும் கல்லூரி என்றும் அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி (Tamil Nadu Government Dental College) சென்னை மருத்துவக் கல்லூரியின் ஒரு பிரிவாகும். இக்கல்லூரி நிர்வாக ரீதியாக ஒரு தனி நிறுவனம் என்றாலும், இது சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றுடன் செயல்படுகிறது.

இந்த மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 1,000 முதல் 1,500 நோயாளிகளுக்குs சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாட்டிலேயே இந்த மருத்துவமனை முதன்மையானது என்று கூறப்படுகிறது.

விரிவாக்கம்[தொகு]

2012ல், புதிய கட்டடம் 206,3 மில்லியன் செலவில் கட்டப்பட்டது. இக்கட்டடத்தை அன்றைய தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். புதிய கட்டிடம் இரண்டு தளங்களைக் கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் 300 நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்கும் திறன் கொண்டது. வெளி நோயாளி தொகுதி மற்றும் பிற வசதிகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டன.[1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]