சென்னகேசவப் பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சென்னகேசவப் பெருமாள் கோயில்
சென்னகேசவப் பெருமாள் கோயில் is located in தமிழ் நாடு
சென்னகேசவப் பெருமாள் கோயில்
சென்னகேசவப் பெருமாள் கோயில்
தமிழ்நாட்டில் கோயிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:13°5′2″N 80°16′12″E / 13.08389°N 80.27000°E / 13.08389; 80.27000ஆள்கூறுகள்: 13°5′2″N 80°16′12″E / 13.08389°N 80.27000°E / 13.08389; 80.27000
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவு:சென்னை
கோயில் தகவல்கள்
சிறப்பு திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக் கலை

சென்னகேசவப் பெருமாள் கோயில் (Chennakesava Perumal Temple), சென்னை நகரம் உருவாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் கட்டபட்டது.[1]. சென்னகேசவப் பெருமாள் கோயில், தேவராஜ முதலியார் தெரு, சௌகார்பேட்டை, சென்னையில் அமைந்துள்ளது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வழங்கிய நிதி உதவியுடன் கட்டப்பட்ட கோயில்களில் இதுவும் ஒன்று.

வரலாறு[தொகு]

இக்கோயிலின் மூலவரான சென்னகேசவப் பெருமாளின் பெயரில், இந்நகரத்திற்கு சென்னப் பட்டிணம் என்று பெயர் வந்தது.[2][3]

சென்னகேசவப் பெருமாள் கோயில் முதலில் 1646ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.[4]

தற்போதைய மெட்ராஸ் உயர்நீதிமன்றம் இருக்கும் வளாகத்தில் இருந்த சென்னகேசவப் பெருமாள் கோயில் மற்றும் சென்னமல்லீசுவரர் கோயில் , பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தங்களது வணிக வசதிக்காக 1757ஆம் ஆண்டில் இடித்த போது, பொதுமக்கள் ஆவேசமடைந்தனர். பின்னர் கம்பேனி நிறுவனத்தார், மணலி முத்துகிருஷ்ண முதலியாருக்கு இடமும் பொருளும் கொடுத்து, 1762ஆம் ஆண்டில் தற்போது உள்ள இடத்தில் சென்னகேசவப் பெருமாள் கோயிலும்.[5] சென்னமல்லீசுவரர் கோயிலும் அடுத்தடுத்து மீண்டும் கட்டப்பட்டன. இந்த இரண்டு கோயில்களையும் இணைத்து பட்டணம் கோவில் என்று அப்பகுதி மக்கள் அழைக்கிறனர்.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Srinivasachari, Introduction, p xxix
  2. "Face behind the name". The Hindu (Chennai, India). 28 February 2002. Archived from the original on 11 ஜனவரி 2013. https://archive.today/20130111064537/http://www.hindu.com/thehindu/mp/2002/02/28/stories/2002022800030400.htm. 
  3. "Chennai High: Where history beckons". The Times of India (சென்னை: The Times Group). 27 ஆகஸ்டு 2010. Archived from the original on 2013-02-16. https://archive.today/20130216064735/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-27/chennai/28292743_1_pillars-fort-st-george-madras/2. பார்த்த நாள்: 20 Jan 2013. 
  4. Muthiah, S. (4 March 2012). "The 'Town Temple' resurrected". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/arts/history-and-culture/article2960548.ece. 
  5. "Welcome to Sri Chenna Kesavapperumal Devasthaanam". மூல முகவரியிலிருந்து 20 December 2018 அன்று பரணிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  • Srinivasachari, C. S. (1939). History of the city of Madras written for the Tercentenary Celebration Committee. Madras: P. Varadachary & Co..