மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் திருக்கோயில்

மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை மூலவராகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கோயிலாகும்.[1][2] திருவள்ளுவர் பிறந்த இடமாக மயிலாப்பூர் கருதப்பெறுவதால், அங்கு திருவள்ளுவருக்கென கோயில் அமைக்கப்பெற்றுள்ளது. இக்கோவில் மயிலாப்பூர் ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயிலின் சார்புக் கோயிலாக இந்து சமய அறநிலையத்துறை பராமரிக்கிறது.

காலம்[தொகு]

இக்கோவில் 16 ஆம் நூற்றாண்டடில் கட்டப்பட்டதாகும். இதனை 1970 களில் புதுப்பித்துள்ளனர். [3]

கோவில் அமைப்பு[தொகு]

கோவிலினுள் நவகிரக சந்நிதி
திருவள்ளுவர் கற்சிலை. கீழே உற்வச சிலைகள்

இக்கோவில் இராயப்பேட்டை சாலையின் நேராக அமைந்துள்ளது. இதில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன் சந்ததிகள் உள்ளன. திருவள்ளுவரின் மனைவி வாசுகி, திருவள்ளூர் இருவருக்கும் தனி சந்நிதி அமைந்துள்ளது.[1] தினம் மாலையில் குழந்தைகளுக்கு திருக்குறள் சொல்லித் தரப்படுகிறது.

1897 இல் வெளிவந்த ஜெ. எம். நல்லசாமி பிள்ளை புத்தகத்தில் இக்கோவில் பற்றி குறிப்பிட்டுள்ளார். [4]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 பொலிவிழந்து வரும் மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் - தினமணி
  2. பாரதியார் கட்டுரைகள் - தமிழாய்வு
  3. Pradeep Chakravarthy, Ramesh Ramachandran (August 16–31, 2009). "Thiruvalluvar’s shrine". Madras Musings 19 (9). http://madrasmusings.com/Vol%2019%20No%209/thiruvalluvars_shrine.html. 
  4. A. A. Manavalan (Ed.) (2009). Essays and Tributes on Tirukkural (1886–1986 AD) (1 ). Chennai: International Institute of Tamil Studies. பக். 22. 

வெளி இணைப்புகள்[தொகு]