மகேந்திரா உலக நகரம், புது சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகேந்திரா சிட்டிக்குள் அமைந்துள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கட்டடம்
மகேந்திரா சிட்டிக்குள் அமைந்துள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கட்டடம்

மகேந்திரா உலக நகரம், புது சென்னை(ஆங்கிலம்:Mahindra World City, New Chennai aka Mahindra City) இயக்கத்திலிருக்கக் கூடிய இந்தியாவின் முதல் சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகும். மகேந்திரா குழுமத்தாலும் தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகத்தாலும்(டிட்கோ-TIDCO) பொதுத்துறை,-தனியார்துறை முனைவால் உருவாக்கப்பட்ட இது இந்தியாவின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட வணிக நகரம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

மகேந்திரா உலக நகரம், புது சென்னை என்று குறிப்பிடப்பட்டாலும் இந்நகரம் சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 45-ல் செங்கல்பட்டுக்கு அருகில்தான் அமைந்துள்ளது. ஏறத்தாழ 1,500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்நகரம் சாலை வழியாகவும் தொடர்வண்டி வழியாகவும் எளிதில் அடையும் வகையில் அமைந்துள்ளது. இந்நகருக்கு அருகில் பரணூர் தொடர்வண்டி நிலையம் அமைந்துள்ளது.

சென்னை மகேந்திரா உலக நகரத்தின் வளாகம்