பனகல் பூங்கா
Appearance
பனகல் பூங்கா | |
அமைவிடம் | 13°02′29″N 80°13′59″E / 13.0413°N 80.2331°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ் நாடு |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
ஆளுநர் | ஆர். என். ரவி |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் |
திட்டமிடல் முகமை | சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
Civic agency | சென்னை பெருநகர் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இணையதளம் | சென்னை மாவட்ட இணையத்தளம் |
பனகல் பூங்கா, சென்னை தி. நகரில் உள்ள பூங்காவாகும். சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சராயிருந்த பனகல் அரசர் இப்பூங்காவை உருவாக்கினார், அவருடைய பெயரே இப்பூங்காவிற்கு வழங்கப்பட்டது. இது தியாகராய நகரின் முக்கிய வணிகத்தளமாக திகழ்கிறது.
வணிக வளாகங்கள்
[தொகு]பனகல் பூங்கா பல்வேறு வணிக வளாகங்கள் மற்றும் பேரங்காடிகளை உள்ளடக்கியது. இதில் பெரும்பாலானவை தெற்கு உசுமான் சாலையிலும், இரங்கநாதன் தெருவிலுமே அமைந்துள்ளது.
போத்தீஸ், நல்லி 100, சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட கடைகளும் உள்ளன.
இப்பூங்காவின் வடிவமைப்பாளர் கணேஷ் ஐயராவார்.
சாலைகள்
[தொகு]பூங்காவில் இருந்து ஆறு தமனி சாலைகள் வெளிநோக்கி உள்ளது :
- வடக்கு உசுமான் சாலை - வடக்கே கோடம்பாக்கம் நோக்கி செல்கிறது
- ஜி. என். செட்டி சாலை - ஜெமினி சர்க்கிள் நோக்கி வடகிழக்காக செல்கிறது
- தியாகராசா சாலை (பான்டி பஜார்) - தேனாம்பேட்டை சிக்னல் நோக்கி கிழக்கே செல்கிறது
- வெங்கட்நாராயணா சாலை - நந்தனம் தொடர்வண்டி நிறுத்தத்தை நோக்கி தென்கிழக்காக செல்கிறது
- தெற்கு உசுமான் சாலை - தெற்கே சைதாப்பேட்டை நோக்கி செல்கிறது
- துரைசாமி சாலை - மேற்கு மாம்பலம் நோக்கி மேற்கே செல்கிறது
இவற்றையும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- இந்து நாளிதழில் பனகல் பூங்கா பரணிடப்பட்டது 2008-06-30 at the வந்தவழி இயந்திரம்