தமிழ்நாடு துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழ்நாடு கிரிக்கெட் அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சிதம்பரம் கிரிக்கெட் அரங்கம்

தமிழ்நாடு கிரிக்கெட் அணி (The Tamil Nadu Cricket Team) என்பது தமிழ்நாடு சார்பாக உள்ள்ளூர் போட்டிகளில் கலந்து கொள்ளும் துடுப்பாட்ட அணி ஆகும். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இதனை வழைநடத்துகிறது. ரஞ்சிக் கோப்பை, உள் நாட்டில்நடக்கும் போட்டிகள் முதல் தரத் துடூப்பாட்டப் போட்டிகளான பட்டியல் ஏ போட்டிகள், விஜய் ஹசாரே டிராபி மற்றும் சையத் முஷ்டாக் அலி கோப்பை ஆகிய போடிகளில் இந்த அணி விளையாடி வருகிறது . இந்த அணி இரண்டு முறை ரஞ்சி கோப்பையினை வென்றுள்ளது. மேலும் ஒன்பது முறை இரண்டாம் இடம்பெற்றுள்ளனர். [1] . விஜய் ஹசாரே கோப்பையினை அதிகமுறை வென்ற அணியும் என்ற சாதனையினைம் தக்க வைத்துள்ளனர்,[2] சையத் முஷ்டாக் அலி கோப்பையினை வென்ற முதல் அணியும் இவர்கள்தான். மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என மறுபெயரிடுவதற்கு முன்பு 1970-71 பருவம் வரை இந்த அணி மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ரஞ்சி டிராபி, இரானி டிராபி, சையத் முஷ்டாக் அலி டிராபி, விஜய் ஹசாரே டிராபி மற்றும் தியோதர் டிராபி ஆகியவற்றை வென்ற ஒரே அணி தமிழ்நாடு அணி ஆகும்.

மைதானம்[தொகு]

இந்த அணி பி.சி.சி.ஐ.யின் முன்னாள் தலைவரான [எம்.ஏ.சிதம்பரம்] பெயரிடப்பட்ட எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அமைந்துள்ளது. 1916 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது 38,000 பார்வையாளர்கள் அமரும் திறன் கொண்டது மற்றும் 1996 இல் ஃப்ளட் லைட்களை நிறுவியது. [3]

சாதனைகள்[தொகு]

முதல் தரத் துடுப்பாட்டம்[தொகு]

1988-89 ஆம் ஆண்டுகளில் கோவா மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் தமிழக அணி ஆரு இலக்குகளை இழந்து 912 ஓட்டங்களை எடுத்தது. இதுவே தமிழகத் துடுப்பாட்ட அணியின் அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.2009-10 ஆம் ஆண்டுகளில் ஐதராபாத்து மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் தமிழக அணி 785 ஓட்டங்களை எடுத்தது. இதுவே தமிழகத் துடுப்பாட்ட அணியின் இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும். 1987-88 ஆம் ஆண்டுகளில் இந்திய ரயில்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் தமிழக அணி 709 ஓட்டங்களை எடுத்தது. இதுவே தமிழகத் துடுப்பாட்ட அணியின் மூன்றாவது அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும். 2011-12 ஆம் ஆண்டுகளில் குசராத்து மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் தமிழக அணி எட்டு இலக்குகளை இழந்து 698 ஓட்டங்களை எடுத்தது. இதுவே தமிழகத் துடுப்பாட்ட அணியின் நான்காவது அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும். 1999-00 ஆம் ஆண்டுகளில் உத்தரப் பிரதேச மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் தமிழக அணி ஐந்து இலக்குகளை இழந்து 695 ஓட்டங்களை எடுத்தது. இதுவே தமிழகத் துடுப்பாட்ட அணியின் ஐந்தாவது அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.

(இறுதியாக பார்க்கப்பட்டது அக்டோபர் 20, 2016)

ரஞ்சி கோப்பை[தொகு]

கீழே தமிழ்நாடு கிரிக்கெட் அணி ரஞ்சி கோப்பை சாதனைகள்.

ஆண்டு சாதனை
2011-12 ரன்னர் அப்
2003-04 ரன்னர் அப்
2002-03 ரன்னர் அப்
1995-96 ரன்னர் அப்
1991-92 ரன்னர் அப்
1987-88 சாம்பியன்
1972-73 ரன்னர் அப்
1967-68 ரன்னர் அப்
1954-55 சாம்பியன்
1940-41 ரன்னர் அப்
1935-36 ரன்னர் அப்

விஜய் ஹசாரே கோப்பை[தொகு]

கீழே தமிழ்நாடு கிரிக்கெட் அணி விஜய் ஹசாரே கோப்பை சாதனைகள்.

ஆண்டு சாதனை
2002–03 சாம்பியன்
2004–05 சாம்பியன்
2008–09 சாம்பியன்
2009–10 சாம்பியன்
  • 2004–05ம், ஆண்டு உத்தர பிரதேசம் அணியுடன், இணைந்து சாம்பியன்

தமிழக வீரர்கள்[தொகு]

கீழே இந்திய அணிக்காக விளையாடிய தமிழக வீரர்கள்.

இந்திய தலைவர்[தொகு]

கீழே இந்திய அணியின் தலைவராக விளையாடிய தமிழக வீரர்கள்.

  • சீனிவாசராகவன் வெங்கடராகவன்
  • கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

தமிழ்நாடு கிரிக்கெட் அணி[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Ranji Trophy winners list : Teams who have won most Indian championships".
  2. {{https://en.wikipedia.org/wiki/Vijay_Hazare_Trophy}}
  3. "MA Chidambaram Stadium | India | Cricket Grounds | ESPN Cricinfo".

வெளி இணைப்புகள்[தொகு]