உள்ளடக்கத்துக்குச் செல்

ரவிசீனிவாசன் சாய் கிஷோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாய் கிஷோர்
2019-20 இல் நடைபெற்ற விஜய் அசாரே கோப்பையில் சாய் கிஷோர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரவிசீனிவாசன் சாய் கிஷோர்
பிறப்பு6 நவம்பர் 1996 (1996-11-06) (அகவை 28)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
உயரம்6 அடி 4 அங்குலம்[1]
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைஇடது-கை வழமைச் சுழல்
பங்குபன்முக வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
இ20ப அறிமுகம் (தொப்பி 108)3 அக்டோபர் 2023 எ. நேபாளம்
கடைசி இ20ப7 அக்டோபர் 2023 எ. ஆப்கானித்தான்
இ20ப சட்டை எண்60
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2017–தற்போதுவரைதமிழ்நாடு துடுப்பாட்ட அணி
2020–2021சென்னை சூப்பர் கிங்ஸ்
2022–தற்போதுவரைகுஜராத் டைட்டன்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ப.இ20 மு.த.து ப.அ.து இ20
ஆட்டங்கள் 3 46 60 71
ஓட்டங்கள் 0 792 452 91
மட்டையாட்ட சராசரி 14.40 18.83 7.58
100கள்/50கள் 0/0 0/3 0/2 0/0
அதியுயர் ஓட்டம் 81 74 21*
வீசிய பந்துகள் 72 9,781 2,944 1,527
வீழ்த்தல்கள் 4 192 99 83
பந்துவீச்சு சராசரி 15.75 23.51 20.96 18.22
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 12 2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 1 0 0
சிறந்த பந்துவீச்சு 3/12 7/70 5/26 4/6
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 14/– 29/– 23/–

ரவிசீனிவாசன் சாய் கிஷோர் (Ravisrinivaasan Sai Kishore, பிறப்பு: நவம்பர் 6, 1996) என்பவர் ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் உள்நாட்டுத் துடுப்பாட்டத்தில் தமிழ்நாடு அணிக்காகவும், ஐபிஎல்லில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும் விளையாடுகிறார்.[2] முதன்மையாக இடது கை வழமைச் சுழல் பந்து வீச்சாளரும் இடக்கை மட்டையாளருமாவார். இவர் அக்டோபர் 3, 2023 இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக தனது பன்னாட்டு இ20 போட்டியில் அறிமுகமானார்.

உள்ளூர்ப் போட்டிகள்

[தொகு]

மார்ச் 12, 2017 இல் 2016–17 விஜய் அசாரே கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[3] அக்டோபர் 14, 2017 இல் 2017–18 ரஞ்சிக் கோப்பையில் தமிழ்நாட்டிற்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[4] சனவரி 8, 2018 இல் 2017–18 மண்டல இ20 லீக்கில் தமிழகத்திற்காக இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[5]

2018–19 ரஞ்சிக் கோப்பையில் தமிழ்நாடு துடுப்பாட்ட அனிக்காக ஆறு போட்டிகளில் 22 இலக்குகளை வீழ்த்தியதன் மூலம் அதிக இலக்குகளை வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடம் பெற்றார்.[6] 2019–20 சையத் முஷ்டாக் அலி கோப்பையிலும் 12 போட்டிகளில் 20 இலக்குகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்தார்.[7]

ஐபிஎல்

[தொகு]

2020 ஐபிஎல் ஏலத்தில், 2020 இந்தியன் பிரீமியர் லீக்கிற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ₹20 lakh எனும் அடிப்படை விலைக்கு வாங்கப்பட்டார்.[8][9] 2022 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ₹3 crore மதிப்பில் ஏலத்தில் வாங்கப்பட்டார்.[10][11]

சர்வதேசப் போட்டிகள்

[தொகு]

சூன் 2021 இல், இந்தியாவின் இலங்கைச் சுற்றுப்பயணத்திற்கான ஐந்து வலைப் பயிற்சிப் பந்து வீச்சாளர்களில் ஒருவராகப் பெயரிடப்பட்டார்.[12] சுற்றுப்பயணத்தின் கடைசி இரண்டு இருபது20 சர்வதேச (டி20ஐ) போட்டிகளுக்கான இந்தியாவின் பிரதான அணியில் சேர்க்கப்பட்டார்.[13]

சனவரி 2022 இல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்திய பன்னாட்டு இருபது20 அணியில் இரண்டு காத்திருப்பு வீரர்களில் ஒருவராக பெயரிடப்பட்டார்.[14]

சீனாவின் ஹாங்சோவில் நடந்த 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.[15] நேபாளத்திற்கு எதிரான தனது முதல் போட்டியில் 4 நிறைவுகளில் 25 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். வங்கதேசத்திற்கு எதிரான அரையிறுதியில், 12 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.[16]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lakshmanan, Karthik; Sen, Abhimanyu (5 December 2019). "Sai Kishore's Journey From an Aspiring Scientist to Cricket Nerd". News18. https://www.news18.com/cricketnext/news/sai-kishores-journey-from-an-aspiring-scientist-to-cricket-nerd-2412061.html. "Being tall and lanky – he stands at 6’4" now" 
  2. "Ravisrinivasan Sai Kishore Profile - ICC Ranking, Age, Career Info & Stats". www.cricbuzz.com (in ஆங்கிலம்). Retrieved 2024-07-23.
  3. "Vijay Hazare Trophy, 2nd Quarter-final: Tamil Nadu v Gujarat at Delhi, Mar 12, 2017". ESPN Cricinfo. Retrieved 13 March 2017.
  4. "Group C, Ranji Trophy at Chennai, Oct 14-17 2017". ESPN Cricinfo. Retrieved 14 October 2017.
  5. "South Zone, Inter State Twenty-20 Tournament at Visakhapatnam, Jan 8 2018". ESPN Cricinfo. Retrieved 8 January 2018.
  6. "Ranji Trophy, 2018/19 - Tamil Nadu: Batting and bowling averages". ESPNcricinfo. Retrieved 10 January 2019.
  7. Lakshmanan, Karthik; Sen, Abhimanyu (5 December 2019). "Sai Kishore's Journey From an Aspiring Scientist to Cricket Nerd". News18. Retrieved 2 April 2025. Being tall and lanky – he stands at 6'4" now
  8. "IPL auction analysis: Do the eight teams have their best XIs in place?". ESPNcricinfo. 20 December 2019. Retrieved 20 December 2019.
  9. "IPL 2020 - Kamlesh Nagarkoti, Shahbaz Ahmed, Ravi Bishnoi head line-up of exciting uncapped Indian bowlers". ESPNcricinfo. Retrieved 10 September 2020.
  10. "Who is R Sai Kishore? Uncapped player who was bought by Gujarat Titans for Rs 3 crore". Free Press Journal. Retrieved 12 February 2022.
  11. "The uncapped ones: Shahrukh Khan, Umran Malik and more". ESPNcricinfo. Retrieved 25 March 2022.
  12. "Shikhar Dhawan to captain India on limited-overs tour of Sri Lanka". ESPNcricinfo. 10 June 2021. Retrieved 10 June 2021.
  13. "IND vs SL: Krunal, Hardik, Surya, Shaw among 8 to miss second T20". The Indian Express. 28 July 2021. Retrieved 28 July 2021.
  14. "Shahrukh Khan, Sai Kishore part of India's stand-bys for West Indies T20Is". ESPNcricinfo. Retrieved 30 January 2022.
  15. "Ruturaj Gaikwad, Harmanpreet Kaur to lead as BCCI announces India men's and women's squads for 19th Asian Games" (in en). இந்தியன் எக்சுபிரசு. 14 July 2023. https://indianexpress.com/article/sports/cricket/bcci-announces-indias-womens-squad-for-19th-asian-games-at-hangzhou-8837968/. 
  16. "Hangzhou Asian Games cricket | Washington and Sai Kishore help India trump Bangladesh, to face Afghanistan in the final" (in en-IN). The Hindu. 6 October 2023. https://www.thehindu.com/sport/cricket/asian-games-cricket-rampant-india-crush-bangladesh-to-reach-final/article67387385.ece. 

வெளியிணைப்புகள்

[தொகு]

கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: ரவிசீனிவாசன் சாய் கிஷோர்