சென்னை சூப்பர் கிங்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்மகேந்திர சிங் தோனி
பயிற்றுநர்ஸ்டீபன் பிளெமிங்
உரிமையாளர்இந்தியா சிமெண்ட்ஸ்[1]
அணித் தகவல்
நிறங்கள்CSK
உருவாக்கம்2008
உள்ளக அரங்கம்எம் ஏ சிதம்பரம் மைதானம் (சேப்பாக்கம்)
கொள்ளளவு50,000
வரலாறு
இந்தியன் பிரீமியர் லீக் வெற்றிகள்5 (2010, 2011, 2018,2021,2023)
சாம்பியன்ஸ் லீக் இருபது20 வெற்றிகள்2 (2010, 2014)
அதிகாரபூர்வ இணையதளம்:சென்னை சூப்பர் கிங்ஸ்

இ20 உடை

சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) என்பது இந்திய கிரிக்கெட் வாரியம் உருவாக்கிய இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரில் சென்னை நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறை அணியாகும். 2008ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அணியின் தற்போதைய அணித்தலைவர் மகேந்திரசிங் தோனி ஆவார். தற்போதைய பயிற்றுனராக முன்னாள் நியூசிலாந்து வீரர் சுடீபன் பிளெமிங் உள்ளார். இந்த அணியின் உள்ளக அரங்காக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் துடுப்பாட்ட அரங்கம் உள்ளது.

5 முறை வாகைப் பட்டத்தை வென்றுள்ள சென்னை அணி, இந்தியன் பிரீமியர் லீக் அணிகளில் அதிக வெற்றி விகிதத்தைப் பெற்றுள்ள அணியாகும். இந்த அணி 2010 மற்றும் 2011 ஆகிய இரு ஆண்டுகளில் தொடர்ந்து சாம்பின்ஸ் லீக் இருபது20 கோப்பையை வென்றுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் தொடர்ந்து அதிக வெற்றிகளை (7) பெற்ற அணி என்ற சாதனையையும் 2013 ஆம் ஆண்டில் பெற்றது. மேலும் சாம்பியன்சு லீக் இருபது20 போட்டியின் கோப்பையை இருமுறை வென்றுள்ளது. இந்த அணியின் சார்பில் அதிக ஓட்டங்களை எடுத்தவர் சுரேஷ் ரைனாவும் அதிக ஆடுநர்களை வீழ்த்தியவர் டுவைன் பிராவோவும் உள்ளனர்.

2013 மே 24 அன்று, சென்னை அணியின் முதன்மை அதிகாரி, குருநாத் மெய்யப்பன், சூதாட்டம் மற்றும் ஏமாற்றுதல் ஆகிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக இந்த அணியை இரண்டு ஆண்டுகள் தடை செய்து உச்சநீதிமன்றம் அமைத்த முத்கல் குழு உத்தரவிட்டது.[2] அதனால் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி பங்கேற்கவில்லை. தடைகாலம் முடிந்த பிறகு மீண்டும் பங்கேற்றது.[3]

தொழில்முறை உரிமையின் வரலாறு[தொகு]

இந்தியன் பிரிமியர் லீக் தொடங்கியபோது வாங்கப்பட்ட 8 அணிகளில் சென்னை அணியும் ஒன்றாகும். இதன் 10 ஆண்டுகளுக்கான தொழில்முறை உரிமையை இந்திய சிமேன்ட்ஸ் நிறுவனம் 91 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது. 2010ஆம் ஆண்டு வரை இந்தத் தொழில்முறை உரிமையின் விளம்பர நட்சத்திர தூதுவராக இந்திய துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இருந்தார். மற்றொரு முன்னாள் இந்திய வீரரான வி.பி.சந்திரசேகர் அணியின் தலைமை தேர்வாளர் ஆவார்.

மக்களிடம் துடுப்பாட்டப் போட்டியை கொண்டு சேர்க்க அணிக்கான விளம்பர நட்சத்திர தூதுவர்களாக திரைப்பட நடிகர்களான விஜய்யும் நயன்தாராவும் நியமிக்கப்பட்டனர்.[4][5] . சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் அணியின் இல்ல அரங்கமாக காணப்படும். அணிக்கான கருப்பொருள் பாடலை வைரமுத்து எழுதியிருப்பதோடு மணி சர்மா இசையமைத்துள்ளார் கருப்பொருள் நிகழ்படத்தை ராஜிவ் மேனன் இயக்கியுள்ளார். 2010 ஆம் ஆண்டு அரவிந்த்-சங்கர் இசையில் வெளியிடப்பட்ட 'விசில் போடு' என்னும் விளம்பர பாடல் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

பெயரின் விளக்கம்[தொகு]

சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பெயர் சங்கக் காலத் தமிழ் அரசர்களை குறிக்கிறது. அணியின் சின்னம் காட்டு ராஜாவான சிங்கம் ஆகும். இது தமிழகத்தை ஆண்ட பல்லவர்களின் சின்னமும் ஆகும். சூப்பர் கிங்ஸ் என்ற பெயர், இவ்வணியின் உரிமையாளர்களான இந்தியா சிமெண்ட்ஸ் நிருவனத்தின் கோரமாண்டல் கிங் என்ற பெயரில் இருந்தும் தழுவியுள்ளது.

உள்ளக அரங்கம்[தொகு]

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உள்ளக அரங்கம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் துடுப்பாட்ட அரங்கமாகும். இந்திய துடுப்பாட்ட வாரியத்தின் முன்னாள் தலைவரான திரு.எம்.ஏ.சிதம்பரத்தில் நினைவாக பெயரிடப்பட்டுள்ள இந்த அரங்கம், இந்தியாவில் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் மிகவும் பழைமையான அரங்கமாகும். தமிழ்நாடு துடுப்பாட்டக் கழகத்திற்கு சொந்தமான் இந்த அரங்கில் மே 2013 நிலவரப்படி 50,000 பார்வையாளர்கள் அமரும் வசதி உள்ளது. 2011 துடுப்பாட்ட உலக கிண்ணத்திற்காக புணரமைக்கப்பட்டபோது இதன் பார்வையாளர் கொள்ளளவு 36,000தில் இருந்து 50,000ஆக அதிகரிக்கப்பட்டது.

இங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 62.75 சதவிகித வெற்றியை பதிவு செய்துள்ளது. ரசிகர்களால் "சேப்பாக்கம் கோட்டை" எனவும் "சிங்கத்தின் குகை" எனவும் அழைக்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கு விளையாடிய 8 போட்டிகளிலும் (ராயல் சேலஞ்சர்சு பெங்களூர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டி உள்பட) வென்று, தன் உள்ளக அரங்கத்தில் அனைத்து போட்டிகளிலும் வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்தது.

முடிவுகள்[தொகு]

ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் சாம்பியன்ஸ் லீக் இருபது20
2008 இரண்டாம் இடம் இரத்து செய்யப்பட்டது (தே)
2009 அரையிறுதி தே.இ
2010 வாகையாளர் வாகையாளர்
2011 வாகையாளர் குழு சுற்று
2012 இரண்டாம் இடம் குழு சுற்று
2013 இரண்டாம் இடம் அரையிறுதி
2014 இரண்டாம் இடம் வாகையாளர்
2015 இரண்டாம் இடம் தொடர் கைவிடப்பட்டது
ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்
2016 தகுதி நீக்கப்பட்டது
2017 தகுதி நீக்கப்பட்டது
2018 வாகையாளர்
2019 இரண்டாம் இடம்
2020 ஏழாம் இடம்
2021 வாகையாளர்
2022 ஒன்பதாம் இடம்
2023 வாகையாளர்
  • தே = தேர்வு பெற்றது;
  • தே.இ = தேர்வு பெறவில்லை

வீரர்கள் பட்டியல்[தொகு]

  • தங்கள் நாட்டு அணிக்காக பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பெயர்கள் தடித்த எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளன.
எண். பெயர் நாடு பிறந்த நாள் மட்டையாட்ட நடை பந்துவீச்சு நடை ஒப்பந்த ஆண்டு வருமானம்
குறிப்புகள்
மட்டையாளர்கள்
ருதுராஜ் கெயிக்வாட்  இந்தியா 31 சனவரி 1997 (1997-01-31) (அகவை 26) Right-handed Right-arm off break 2022 6 கோடி (US$7,50,000)
அம்பாதி ராயுடு  இந்தியா 23 செப்டம்பர் 1985 (1985-09-23) (அகவை 38) Right-handed Right-arm off break 2022 7.5 கோடி (US$9,40,000)
டெவன் கான்வே  நியூசிலாந்து 8 சூலை 1991 (1991-07-08) (அகவை 32) Left-handed Right-arm medium 2022 1 கோடி (US$1,30,000) வெளிநாடு
சுப்ரன்ஷு சேனபதி  இந்தியா 30 திசம்பர் 1996 (1996-12-30) (அகவை 26) Right-handed Right-arm medium 2022 20 இலட்சம் (US$25,000)
செழியன் ஹரிநிசாந்த்  இந்தியா 16 ஆகத்து 1996 (1996-08-16) (அகவை 27) Left-handed Right-arm off break 2022 20 இலட்சம் (US$25,000)
பன்முக வீரர்கள்
ரவீந்திர ஜடேஜா  இந்தியா 6 திசம்பர் 1988 (1988-12-06) (அகவை 34) Left-handed Slow left-arm orthodox 2022 16 கோடி (US$2.0 மில்லியன்) தலைவர்
மொயீன் அலி  இங்கிலாந்து 18 சூன் 1987 (1987-06-18) (அகவை 36) Left-handed Right-arm off break 2022 8 கோடி (US$1.0 மில்லியன்) வெளிநாடு
டுவைன் பிராவோ  டிரினிடாட் மற்றும் டொபாகோ 7 அக்டோபர் 1983 (1983-10-07) (அகவை 40) Right-handed Right-arm medium-fast 2022 4.4 கோடி (US$5,50,000) வெளிநாடு
ஷிவம் துபே  இந்தியா 26 சூன் 1993 (1993-06-26) (அகவை 30) Left-handed Right-arm medium fast 2022 4 கோடி (US$5,00,000)
ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்  இந்தியா 10 நவம்பர் 2002 (2002-11-10) (அகவை 21) Right-handed Right-arm fast-medium 2022 1.5 கோடி (US$1,90,000)
டுவைன் பிரிட்டோரியஸ்  தென்னாப்பிரிக்கா 29 மார்ச்சு 1989 (1989-03-29) (அகவை 34) Right-handed Right-arm medium-fast 2022 50 இலட்சம் (US$63,000) வெளிநாடு
மிட்செல் சான்ட்னர்  நியூசிலாந்து 5 பெப்ரவரி 1992 (1992-02-05) (அகவை 31) Left-handed Slow left-arm orthodox 2022 1.9 கோடி (US$2,40,000) வெளிநாடு
இலக்குக் கவனிப்பாளர்கள்
மகேந்திரசிங் தோனி  இந்தியா 7 சூலை 1981 (1981-07-07) (அகவை 42) Right-handed Right-arm medium 2022 12 கோடி (US$1.5 மில்லியன்)
ராபின் உத்தப்பா  இந்தியா 11 நவம்பர் 1985 (1985-11-11) (அகவை 38) Right-handed Right-arm off break 2022 2 கோடி (US$2,50,000)
நாராயண் ஜெகதீசன்  இந்தியா 24 திசம்பர் 1995 (1995-12-24) (அகவை 27) Right-handed 2022 20 இலட்சம் (US$25,000)
பந்துவீச்சாளர்கள்
மஹீஷ் தீக்ஷனா  இலங்கை 1 ஆகத்து 2000 (2000-08-01) (அகவை 23) Right-handed Right-arm off break 2022 70 இலட்சம் (US$88,000) வெளிநாடு
பிரஷாந்த் சோலங்கி  இந்தியா 22 பெப்ரவரி 2000 (2000-02-22) (அகவை 23) Right-handed Right-arm leg break 2022 1.2 கோடி (US$1,50,000)
பகத் வர்மா  இந்தியா 21 செப்டம்பர் 1998 (1998-09-21) (அகவை 25) Right-handed Right-arm Off-break 2022 20 இலட்சம் (US$25,000)
தீபக் சாஹர்  இந்தியா 7 ஆகத்து 1992 (1992-08-07) (அகவை 31) Right-handed Right-arm fast-medium 2022 14 கோடி (US$1.8 மில்லியன்)
கேஎம் ஆசிஃப்  இந்தியா 24 சூலை 1993 (1993-07-24) (அகவை 30) Right-handed Right-arm fast-medium 2022 20 இலட்சம் (US$25,000)
துஷர் தேஷ்பாண்டே  இந்தியா 15 மே 1995 (1995-05-15) (அகவை 28) Right-handed Right-arm fast-medium 2022 20 இலட்சம் (US$25,000)
சிமர்ஜித் சிங்  இந்தியா 17 சனவரி 1998 (1998-01-17) (அகவை 25) Right-handed Right-arm medium-fast 2022 20 இலட்சம் (US$25,000)
ஆடம் மில்னே  நியூசிலாந்து 13 ஏப்ரல் 1992 (1992-04-13) (அகவை 31) Right-handed Right-arm fast 2022 1.9 கோடி (US$2,40,000) Overseas
முகேஷ் சவுத்ரி  இந்தியா 6 சூலை 1996 (1996-07-06) (அகவை 27) Left-handed Left-arm medium 2022 20 இலட்சம் (US$25,000)
கிறிஸ் ஜோர்டன்  இங்கிலாந்து 4 அக்டோபர் 1988 (1988-10-04) (அகவை 35) Right-handed Right-arm fast 2022 3.6 கோடி (US$4,50,000) Overseas
Source:CSK Players

நிர்வாக மற்றும் உதவிப் பணியாளர்கள்[தொகு]

  • உரிமையாளர் – இந்தியா சென்னை சூப்பர் கிங்ஸ் பிரைவேட் லிமிடட்
  • தலைமை பயிற்றுனர் – நியூசிலாந்து சுடீபன் பிளெமிங்
  • மட்டைவீச்சு பயிற்றுனர் – ஆத்திரேலியா மைக்கேல் ஹசி
  • பந்துவீச்சு பயிற்றுனர் – இந்தியா லட்சுமிபதி பாலாஜி
  • பந்துவீச்சு ஆலோசகர் – தென்னாப்பிரிக்கா எரிக் சைமன்ஸ்
  • உடற்பயிற்சியாளர் – தென்னாப்பிரிக்கா கிரெக் கிங்
  • உடற்பயிற்சி சிகிச்சையாளர் – ஆத்திரேலியா டோமி சிம்செக்
  • செயல்திறன் பகுப்பாளர் – இந்தியா லட்சுமி நாராயணன்
  • அணி மேலாளர் – இந்தியா ரஸ்செல் ராதாகிருஷ்ணன்
  • அணி மருத்துவர் – இந்தியா மது
  • ஏற்பாட்டியல் மேலாளர் – இந்தியா சஞ்சய் நடராஜன்

[6]

கால அட்டவணை மற்றும் முடிவுகள்[தொகு]

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளின் செயல்திறன் தொகுப்பு[தொகு]

ஆண்டு மொத்தம் வெற்றிகள் தோல்விகள் முடிவின்மை சமன் வெற்றி விகிதம் நிலை சுருக்கம்
2008 16 9 7 0 0 56.25% 2வது இரண்டாமிடம்
2009 15 8 6 1 0 53.33% 4வது அரை-இறுதியாளர்
2010 16 9 7 0 0 56.25% 1வது வாகையாளர்
2011 16 11 5 0 0 68.75% 1வது வாகையாளர்
2012 19 10 8 1 0 55.55% 2வது இரண்டாமிடம்
2013 18 12 6 0 0 61.11% 2வது இரண்டாமிடம்
2014 16 10 6 0 0 62.50% 3வது தகுதிச்சுற்று
2015 17 10 7 0 0 58.8% 2வது இரண்டாமிடம்
2016 தகுதிநீக்கம்
2017 தகுதிநீக்கம்
2018 16 11 5 0 0 68.75% 1வது வாகையாளர்
2019 17 10 7 0 0 58.82% 2வது இரண்டாமிடம்
மொத்தம் 165 100 64 1 0 61.28%

கடைசியாக இற்றைப்படுத்தப்பட்டது: 12 மே 2019

எதிரணி வரிசைப்படி[7]

எதிரணி காலம் போட்டிகள் வெற்றி தோல்வி சமநிலை முடிவின்மை வெற்றி விகிதம்
டெக்கான் சார்ஜர்ஸ்* 2008–2012 10 6 4 0 0 60%
டெல்லி கேப்பிடல்ஸ்* 2008–2015

2018-2019

21 15 6 0 0 71.42%
கிங்சு இலெவன் பஞ்சாபு 2008-2015,

2018

21 12 9 0 0 59.52%
கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா* 2011 2 1 1 0 0 50%
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2008-2015,

2018

20 13 7 0 0 65.00%
மும்பை இந்தியன்ஸ் 2008-2015,

2018

28 11 17 0 0 39.28%
புனே வாரியர்சு இந்தியா* 2011–2013 6 4 2 0 0 66.67%
ராஜஸ்தான் ராயல்ஸ் 2008-2015,

2018-19

21 14 7 0 0 66.76℅
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 2008-2015,

2018-19

24 15 8 0 1 65.21%
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2013-2015,

2018

12 9 3 0 0 75.00℅
மொத்தம் 2008-2015

2018–2019

165 100 64 0 1 61.25%
*தற்போது செயலற்ற அணிகள்

சாம்பியன்சு லீக் இருபது20 போட்டி முடிவுகளின் தொகுப்பு[தொகு]

சாம்பியன்சு லீக் இருபது20 போட்டிகளில் அணியின் செயல்திறன் பகுப்பு[8]
ஆண்டு போட்டிகள் வெற்றி தோல்வி முடிவின்மை வெற்றி விகிதம் குறிப்பு
2008  –  –  –  –  – இரத்து செய்யப்பட்டது
2010 6 5 1 0 83.33% வாகையாளர்
2011 4 1 3 0 25% குழு சுற்று
2012 4 2 2 0 50% குழு சுற்று
2013 5 3 2 0 60% அரை இறுதியாளர்
2014 6 4 1 1 66.66% வாகையாளர்
மொத்தம் 19 11 8 0 57.89%
  • 2009ஆம் ஆண்டு சாம்பின்சு லீக் போட்டிகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதிபெறவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "IPL 2019: Meet the owners of the 8 teams taking the field in season 12". Moneycontrol. https://www.moneycontrol.com/news/trends/sports-trends/ipl-2019-meet-the-owners-of-the-8-teams-taking-the-field-in-season-12-2542331.html. பார்த்த நாள்: 15 August 2019. 
  2. http://www.espncricinfo.com/india/content/story/898461.html
  3. http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article9767741.ece
  4. "விளம்பர நட்சத்திர தூதுவர்கள் நியமனம்" இம் மூலத்தில் இருந்து 2008-04-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080423024315/http://tamil.cinesouth.com/masala/hotnews/new/19032008-4.shtml. 
  5. Vijay & Nayan to endorse Chennai Super Kings - Sify.com
  6. "CSK - Team". chennaisuperkings.com. http://www.chennaisuperkings.com/CSK_WEB/module/news/html/team-page.html. பார்த்த நாள்: 24 March 2019. 
  7. "Indian Premier League - Chennai Super Kings / Records / Result summary". ESPNcricinfo. http://stats.espncricinfo.com/indian-premier-league-2013/engine/records/team/results_summary.html?id=117;team=4343;type=trophy. பார்த்த நாள்: 5 June 2013. 
  8. "Champions League Twenty20 - Chennai Super Kings / Records / List of match results (by season)". ESPNcricnfo. http://stats.espncricinfo.com/t20champions2010/engine/records/team/match_results_season.html?id=120;team=4343;type=trophy. பார்த்த நாள்: 5 June 2013.