சாம்பியன்சு இலீகு இருபது20

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சாம்பியன்ஸ் லீக் இருபது20 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சாம்பியன்சு இலீகு இருபது20
2011Nokiaclt20.jpg
நிர்வாகி(கள்) இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வாரியம், தென் ஆபிரிக்கத் துடுப்பாட்ட வாரியம்
துடுப்பாட்ட வடிவம் இருபது20
முதலாவது போட்டி 2009
தற்போதைய வெற்றியாளர் இந்தியாவின் கொடி மும்பை இந்தியன்சு
அதிக தடவை வெற்றி பெற்றவர் இந்தியாவின் கொடி மும்பை இந்தியன்சு (ஒரு தடவை)
இந்தியாவின் கொடி சென்னை சூப்பர் கிங்சு (ஒரு தடவை)
ஆத்திரேலியாவின் கொடி நியூ சவுத்து வேல்சு (ஒரு தடவை)
அதிகூடிய ஓட்டங்கள் ஆத்திரேலியாவின் கொடி தேவிடு வார்னர் (535)
அதிகூடிய விக்கெட்டுகள் டிரினிடாட் மற்றும் டொபாகோவின் கொடி துவைன் பிராவோ (21)
வலைத்தளம் http://clt20.com

சாம்பியன்சு இலீகு இருபது20 (Champions League Twenty20) என்பது இந்தியா, ஆத்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளின் உள்ளூர் அணிகளுக்கிடையிலான ஒரு சர்வதேச இருபது20 துடுப்பாட்டத் தொடர் ஆகும்.[1] என். சிறீநிவாசன் என்பவரால் இத்தொடர் நடத்தப்படுகின்றது.[2]

தேசிய உள்ளூர் இருபது20 போட்டித் தொடர்களின் வெற்றி காரணமாக, முக்கியமாக இந்தியப் பிரீமியர் லீகின் வெற்றி காரணமாக 2008இல் இப்போட்டித் தொடர் ஆரம்பிக்கப்பட்டது.[3] முதலாவது போட்டித் தொடர் செப்டம்பர் பிற்பகுதியிலிருந்து 2008 அக்டோபர் முற்பகுதி வரை நடத்தப்படுவதாக இருந்தது.[4] ஆயினும் அது பிற்போடப்பட்டது. பின்னர், போட்டித் தொடர் திசம்பர் 3இலிருந்து திசம்பர் 10, 2008 வரை நடைபெறுவதாக இருந்தது.[5] பின்னர், நவம்பர் 2008இல் நடைபெற்ற மும்பைத் தாக்குதல்கள் காரணமாகப் போட்டித் தொடர் பிற்போடப்பட்டது.[6]

முதலாவது போட்டித் தொடர் அக்டோபர் 2009இல் நடைபெற்றது. Indian Rupee symbol.svg170 கோடிக்கு (38.4 மில்லியன் அமெரிக்க இடாலர்) அநுசரணை வழங்குவதற்கான உரிமையை இந்தியாவின் தொலைத்தொடர்புச் சேவை நிறுவனமான பார்த்தி ஏர்டெல் வாங்கியது.[7] 2011 போட்டித் தொடர் இந்தியாவில் செப்டம்பரிலிருந்து அக்டோபர் வரை நடைபெற்றது.[8] ஆகத்து 2011இல் நோக்கியா நிறுவனம் நான்கு வருடங்கள் அநுசரணை வழங்குவதாக ஒப்புக் கொண்டது.[9]

போட்டி முடிவுகள்[தொகு]

ஆண்டு நடைபெற்ற நாடு இறுதிப் போட்டி நடைபெற்ற இடம் இறுதிப் போட்டி அணிகள்
வெற்றி பெற்ற அணி முடிவு இரண்டாம் இடம் பெற்ற அணி
2008 இந்தியாவின் கொடி இந்தியா இந்தியாவின் கொடி சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை[10] நவம்பர் 26 மும்பைத் தாக்குதல்கள் காரணமாகக் கைவிடப்பட்டது. 8
2009 இந்தியாவின் கொடி இந்தியா இந்தியாவின் கொடி இராசிவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாக்கம்[11] ஆத்திரேலியாவின் கொடி நியூ சவுத்து வேல்சு
159/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
41 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. போட்டி விபரங்கள் டிரினிடாட் மற்றும் டொபாகோவின் கொடி திரினிடாடு மற்றும் தொபாகோ
118 (15.5 பந்துப் பரிமாற்றங்கள்)
12
2010 தென்னாப்பிரிக்கா கொடி தென் ஆபிரிக்கா தென்னாப்பிரிக்கா கொடி நியூ வாண்டரர்சு, சோகானசுபேர்கு[12] இந்தியாவின் கொடி சென்னை சூப்பர் கிங்சு
132/2 (19 பந்துப் பரிமாற்றங்கள்)
8 இலக்குகளால் வெற்றி பெற்றது. போட்டி விபரங்கள் தென்னாப்பிரிக்கா கொடி வாரியர்சு
128/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
10
2011 இந்தியாவின் கொடி இந்தியா இந்தியாவின் கொடி சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை[13] இந்தியாவின் கொடி மும்பை இந்தியன்சு
139 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
31 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. போட்டி விபரங்கள் இந்தியாவின் கொடி பெங்களூரு இராயல் சேலஞ்சர்சு
108 (19.2 பந்துப் பரிமாற்றங்கள்)
10

இதையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. சாம்பியன்சு இலீகு இருபது20 அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (ஆங்கில மொழியில்)
 2. சாம்பியன்சு இலீகு இருபது20 2011இன் நடப்பிக்கைக் குழு உறுப்பினர்கள் (ஆங்கில மொழியில்)
 3. சாம்பியன்சு இலீகு துடுப்பாட்டம் தொடங்கப்பட்டது (ஆங்கில மொழியில்)
 4. சாம்பியன்சு இலீகில் மிடில்செக்சு (ஆங்கில மொழியில்)
 5. சாம்பியன்சு இலீகு இருபது20 திசம்பருக்கு மாற்றப்பட்டது (ஆங்கில மொழியில்)
 6. சாம்பியன்சு இலீகுக்கு அக்டோபர்த் திகதி (ஆங்கில மொழியில்)
 7. சாம்பியன்சு இலீகு இருபது20இற்கு பார்த்தி தலைப்பு ஆதரவு வழங்கும் (ஆங்கில மொழியில்)
 8. சாம்பியன்சு இலீகு இருபது20 2011 நிகழ்ச்சி நிரல்-சாம்பியன்சு இலீகு இருபது20 பந்தய ஏற்பாடுகளும் போட்டித் திகதிகளும் (ஆங்கில மொழியில்)
 9. சாம்பியன்சு இலீகிற்கு ஆதரவுகள் (ஆங்கில மொழியில்)
 10. பந்தய ஏற்பாடுகள் (ஆங்கில மொழியில்)
 11. நியூ சவுத்து வேல்சு எதிர் திரினிடாடு & தொபாகோ (ஆங்கில மொழியில்)
 12. வாரியர்சு எதிர் சென்னை சூப்பர் கிங்சு (ஆங்கில மொழியில்)
 13. இராயல் சேலஞ்சர்சு பெங்களூரு எதிர் மும்பை இந்தியன்சு (ஆங்கில மொழியில்)

வெளி இணைப்புகள்[தொகு]